பாலுமகேந்திரா விருது 2016 - (குறும்படங்களுக்கு மட்டும்)

.

நண்பர்களே இயக்குனர் பாலுமகேந்திரா அவர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அவரது தினமான மே 19ஆம் தேதி, பாலுமகேந்திரா பெயரில் விருது ஒன்றை வழங்க தமிழ் ஸ்டுடியோ ஏற்பாடு செய்திருக்கிறது. 

விருதுத் தொகை:

ரூபாய் 25000/-

தேர்ந்தெடுக்கும் சிறந்த குறும்படத்திற்கு பாலுமகேந்திரா பெயரிலான கேடயமும்,  பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படும்.

கலந்துக்கொள்ளும் குறும்படங்களில் இருந்து முதல் சுற்றில் தெரிவு செய்யப்படும் பத்திற்கும் மேற்பட்ட குறும்படங்கள் விருது வழங்கும் நிகழ்வில் திரையிடப்பட்டு ஒரே ஒரு குறும்படம் மட்டுமே விருதுக்குரியதாக தேர்ந்தெடுக்கப்படும். 



விதிமுறைகள்: 

* பாலுமகேந்திரா விருதுக்கு குறும்படங்களை அனுப்ப நுழைவுக் கட்டணம் ரூபாய் 250/- "PADACHURUL" என்கிற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க DD யாகவோ, காசோலையாகவே கீழ்க்கண்ட முகவரிக்கு படங்களோடு சேர்த்து அனுப்ப வேண்டும்.

* குறும்படங்கள் (Short Films) எந்தக் கருப்பொருளிலும் எடுக்கப்பட்டிருக்கலாம். 

* குறும்படங்கள் 30 நிமிடங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

* குறும்படங்கள் டி.வி.டி அல்லது வி.சி.டி. யில் தரமாகப் பதிவு செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.

* இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரம், இணைத்து அனுப்பப்படுதல் வேண்டும்.

* குறும்படத்தின் கதைச் சுருக்கம் (Synopsis), முக்கியக் காட்சிகளின் ஒளிப்படங்கள் (Still Photos) மற்றும் இயக்குநரின் ஒளிப்படம் ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும்.

* முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்படும் குறும்படங்கள், திரைப்படக் கலைஞர்கள் முன்னிலையில் சென்னையில் திரையிடப்பட்டு விருதுக்குரிய குறும்படங்கள் தேர்ந்தெடுக்கப்படும்.

* குறும்படங்கள் 01.01.2011 க்குப் பிறகு எடுக்கப்பட்டனவாக இருத்தல் வேண்டும்.

* விருது தொடர்பாக நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது. போட்டி தொடர்பாகக் கடிதப் போக்குவரத்துகள் அனுமதிக்கப்படமாட்டாது.

* ஆவணப்படங்கள் (Documentary Films), அனிமேசன் படங்கள் (Animation Films) ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

* தேர்வு செய்யப்படாத குறும்படங்களைத் திருப்பி அனுப்புதல் இயலாது.

* பரிசுகள் பாலுமகேந்திரா தினமான மே 19ஆம் தேதி, (மே 19 வேலை நாளாக இருந்தால், அதற்கடுத்து வரும் வார இறுதிநாளில் வழங்கப்படும்)

* விருதுக்கு குறும்படங்களை அனுப்ப வேண்டிய கடைசித் தேதி : மே 09, 2016

* குறும்படங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

விதை, 1, ஸ்ருதி அபார்ட்மென்ட்ஸ், காந்தி நகர், முதல் குறுக்குத் தெரு, அடையார், சென்னை 600020.