இலங்கைச் செய்திகள்


மஹிந்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

நிஷாந்த விக்ரமசிங்ஹ இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் ஆஜர்

ஞானசார தேரருக்கு பிணை வழங்க மறுப்பு

மட்டக்களப்பில் 78 பேருக்கு டெங்கு

பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிறைசாலைக்கு


மஹிந்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

29/01/2016 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாரிய ஊழல் மோசடி விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.




சுயாதீன தொலைக்காட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே இங்கு ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 











நிஷாந்த விக்ரமசிங்ஹ இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் ஆஜர்

28/01/2016 ஸ்ரீலங்கன் எயார் லைன் வானுர்தி சேவையின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்ஹ இன்று பாரிய ஊழல்களுக்கு எதிரான ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் ஆஜரானார் .
ஸ்ரீலங்கன் எயார் லைன் வானுர்தி சேவை மற்றும் அதன் உணவு விநியோக பிரிவில் இடம் பெற்றதாக கூறப்படும்  500 மில்லியன் ரூபா நிதி மோசடி  தொடர்பில் வாக்கு மூலம் வழங்கவே அவர் ஆஜரானார் .
குறித்த சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னதாக ராஜாங்க அமைச்சர் ப்ரியங்கர ஜயரத்னவிடம் வாக்கு மூலம் பெறப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.   நன்றி வீரகேசரி 










ஞானசார தேரருக்கு பிணை வழங்க மறுப்பு


28/01/2016 பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஹோமாகம நீதிவான் நீதிமன்றத்தில் இன்று காலை ஞானசார தேரரை பிணையில் விடுதலை செய்யுமாறு கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட ஹோமாகம நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரங்க திஸாநாயக்க பிணை மனுவை நிராகரித்தள்ளார்.
காணாமல் போனதாக கூறப்படும் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியை, ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் வைத்து திட்டிய குற்றஞ்சாட்டின் அடிப்படையில் ஞானசார தேரர், கைதுசெய்யப்பட்டு எதிர்வரும் 9ஆம் திகதி வரை நீதிமன்ற உத்தரவிற்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 








மட்டக்களப்பில் 78 பேருக்கு டெங்கு


28/01/2016 இந்த வரு­டத்தின் ஜன­வரி முதலாம் திகதி முதல் இது­வ­ரை­யான காலப்­ப­கு­தியில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் 78 பேர் டெங்கு நோய்த் தாக்­கத்­துக்கு உள்­ளா­கி­யுள்­ள­தாக மாவட்ட பிராந்­திய சுகா­தாரப் பணிப்­பாளர் டாக்டர் ஏ.எல்.எம்.ரஹ்மான் தெரி­வித்தார்.
இதே­வேளை, இந்த வரு­டத்தில் நுளம்­புப்­பெ­ருக்­கத்­துக்கு ஏது­வாக சூழலை வைத்­தி­ருந்த 30 பேருக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­ய­வந்­துள்­ளது.
இந்த மாவட்­டத்தில் டெங்கு நோய்த் தாக்­கத்தைக் குறைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. இந்­நி­லையில், நாளொன்­றுக்கு 100 வீட்டு வளா­கங்­களில் சோதனை மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது. வீட்­டுப்­பீ­லிகள், கிண­றுகள் உள்­ளிட்­ட­வற்றில் நுளம்­புப்­பெ­ருக்கம் காணப்­ப­டு­கின்­றது. அத்­துடன், விழிப்­பு­ணர்வு நட­வ­டிக்­கை­களும் வழங்­கப்­ப­டு­கின்­றன.
இருப்­பினும், விழிப்­பு­ணர்வு நட­வ­டிக்­கை­களை சிலர் பின்­பற்­றாத நிலைமை உள்­ளது. மேலும், நகர்ப்­ப­கு­தி­க­ளி­லுள்ள சில வீடுகள் பூட்­டப்­பட்­டுள்­ள­மை­யினால், அவற்றில் சோதனை மேற்­கொள்ள முடி­யாத நிலைமை உள்­ள­துடன், நுளம்­புப்­பெ­ருக்­கத்தை கட்­டுப்­ப­டுத்த முடி­யாத நிலை­மையும் உள்­ளது.
கடந்த காலத்தில் நுளம்­புப்­பெ­ருக்­கத்தை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக கிண­று­களில் மீன்­ குஞ்­சு­களை விடும் நட­வ­டிக்­கையை சுகா­தாரத் திணைக்­களம் மேற்­கொண்­டி­ருந்­தது. இந்த நடவடிக்கையை சுகாதாரத் திணைக்களத்தினால் மட்டும் செய்ய முடியாது. பொதுமக்கள், உள்ளூராட்சி சபைகள் இணைந்து மேற்கொள்ள வேண்டு மெனவும் அவர் கூறினார்.
நன்றி வீரகேசரி 







பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்


27/01/2016 முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை மீண்டும் 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எதிர்வரும் 10ம் திகதி வரை (10.2.2016) விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா  உத்தரவிட்டார்.
கடந்த 2005.12.25ம் திகதி மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கடந்த 09.10.2015 அன்று கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.
இதே வேளை நேற்று கிழக்கு மாகாண சபை அமர்வில் நீதிமன்ற உத்தரவின் பேரில் பிள்ளையான் பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கது.  
நன்றி வீரகேசரி 













முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிறைசாலைக்கு



31/01/2016 சிறைசாலையில் வைக்கப்பட்டுள்ள தனது மகன் யோசித்த ராஜபக்ஷவை பார்க்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கொழும்பு வெலிக்கட சிறைச்சாலைக்கு இன்று சென்றார். 
இன்று பகல் இவருடன் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினரும் அங்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.    நன்றி வீரகேசரி