மலரும் முகம் பார்க்கும் காலம் கவிதை 26 நிறைவும் நன்றியம்‏

.
அன்புடன் படைப்பாளிகளே! முகநூல் நண்பர்களே உங்கள் அனைவருக்கும் பணிவன்பான வணக்கம். ஒரு வருடத்திற்கு முன்பு ஆரம்பித்த மலரும் முகம் பார்க்கும் காலம் என்ற கவிதைத் தொடர் தமிழ் எழுத்தாளர் இணைய அகத்தின் வெளியீட்டுப் பொறுப்பாளரும் பண்ணாகம் இணையத்தளத்தின் பிரதம ஆசிரியருமான பண்ணாகம் திரு.இக.கிருஸ்ணமூர்த்தி அவர்களின் கவிதையுடன் நிறைவு பெறுகிறது.
எமது வேண்டுகோளை ஏற்று பல பணிகளுக்கு மத்தியிலும் இக்கவிதைத் தொடரில் பங்குபற்றி எமக்கு ஆதரவு தந்தமைக்கு நன்றியுடையவர்களாக இருப்போம். புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்ற இலக்கியப் படைப்பாளிகள் தம்மாலான இலக்கியப் பணிகளைச் செய்து வருகின்றார்கள் என்பதை நாங்கள் இறுமாப்புடன் சொல்கிறோம்.
இரண்டு எழுத்தாளர்களே ஒரு திட்டத்தில் தொடராக இணைந்து செயல்படுவதே மிகவும் சிரமமானது. ஆனால் எம்மால் முன்னெடுக்கப்பட்ட விழுதல் என்பது எழுகையே என்ற நெடுந்தொடர்கதைத் திட்டத்திலும் இப்பொழுது நிறைவு பெறுகின்ற இக்கவிதைத் திட்டத்திலும் பங்குபற்றிய இலக்கியப் படைப்பாளிகளின் பெருந்தன்மையை நினைத்து வியக்கிறோம் மகிழ்கிறோம்


கனடாவிலிருக்கும் பேராசரியர் திரு.உ.சேரன் அவர்களும் டென்மார்க்கில் இருக்கும் திரு.ஜீவகுமாரன் அவர்களும் கவிதைகள் வெளிவந்த போது தமது ஆலோசனைகளை வழங்கியிருந்தார்கள். அவர்களிருவருக்கும் பணிவன்பான நன்றிகள்.
இத்துடன் இத்திட்டத்தில் பங்குகொண்ட இலக்கியப்படைப்படைப்பாளிகளின் பெயர்களை இங்கே பதிவு செய்து மகிழ்வு கொள்கிறோம்.
திரு.பொலிகை ஜெயா - சுவிஸ்
திருமதி. கோசல்யா சொர்ணலிங்கம் - ஜேர்மனி
திருமதி.சுமதி பாலசசந்தர் - பிஜித்தீவு
திருமதி. சுபாஜினி சிறீரஞ்சன் - டென்மார்க்
திருமதி. ரஜனி அன்ரன் - ஜேர்மனி
திரு. ஆதவன் கதிரேசர்பிள்ளை – டென்மார்க்
திருமதி. பாமா இதயகுமார் - வன்கூவர்இ கனடா
திருமதி.வேதா இலங்காதிலகம் - டென்மார்க்
திருமதி. மாலினி மாலா – ஜேர்மனி
செல்வி. சறீகா சிவநாதன் - ஜேர்மனி
திரு. நோர்வே நக்கீரா – நோர்வே
திருமதி.நர்மதா சஞ்சீபன் - யாழ்ப்பாணம்
டாக்டர் எழில்வேந்தன் - தமிழகம்இ இந்தியா
திரு. எஸ் தேவராஜா – யேர்மனி
திருமதி. ரதி சிறீமோன் - டென்மார்க்
திருமதி. நிவேதா உதயராயன் - லணடன்
மருத்துவர். மதுராகன் செல்வராஜா – வவுனியா இலங்கை
மருத்துவர். அகிலன் நடேசன் - காரைதீவு(மட்டக்களப்பு)இலங்கை
திரு.இணுவையூர் சக்திதாசன் - டென்மார்க்
திருமதி. தேனம்மை லக்ஸ்மணன் - கைதராபாத்இ இந்தியா
திருமதி. கவிதாயினி நிலா – புத்தளம்இ இலங்கை
திரு. தமிழ்முரசு பாஸ்கரன் - அவுஸ்திரேலியா
திரு.இக.கிருஷ்ணமூர்த்தி - யேர்மனி
திருமதி. மீரா குகன் - யேர்மனி
திரு.வெற்றிவேலு வேலழகன் -யேர்மனி
திரு.ஏலையா க.முருகதாசன் - யேர்மனி
மலரும் முகம்பார்க்கும் காலம்
நிறைவுக் கவிதை.26
எழுதியவர்
பண்ணாகம் இணைய ஆசிரியர் திரு.இக.கிருஸ்ணமூர்த்தி
உலகம் எங்கும் தமிழ் மக்கள் ஓடி
உறவுகள் தொடாத தேசங்களில் இன்று
உறவிற்காக ஏங்கிய காட்சிகள் அன்று
உங்களுக்கும் அது புரிகிறது இன்று
தன்னம்தனியாக பலர் அகதியாக வந்து
தன்னந;பிக்கை கொண்டு இப் பனிப் பூமியில்
தனக்கென வாழ ஒரு கூடுகட்ட இங்கு
தலை குனிந்து தலைநிமிர்ந்த காலம்
அவன் மலர்ந்த முகம்பார்த்த காலம்
குடும்பம் ஒன்று தமிழ் பெண்னுடன் அமைத்து
குழந்தைகள் பெற்று உறவுகளுடன் குதுகலித்து
குவலயத்தில் தன் இனஉறவுகள் வாழவென
குழுக்கள் அமைத்து இங்கு குழம்பியது வாழ்வு
குறைகளை மட்டும் தேடும் உறவுகள் குழுவில்
அவன் தேடுகின்ற மலரும்முகம் பார்க்கும் காலம்
ஒற்றுமை வேண்டி உலகில் வேள்விகள்
ஒன்றான உறவுகளில் பரிவுகள் தோன்றி-பின்
இது கலியுககாலம் என்ற கையாலாகாத்தனம் பேசி
கவலைகள் மறைக்க போலி நாடகங்கள் ஆடி
உண்மை உறவுகளின் அன்புகள் மறந்தது
நீயா நானா மீண்டும் மீண்டும் தொடர்கிறது
ஊமை மௌனங்கள் உள்ளம் அடைத்தது
வாய்விட்டுப் பேசாத கேள்விச் செவியர்களாய்
வாழ்கையை தொலைக்கும் உறவுகள் மனதில்
மலரும்முகம் பார்க்கும் காலம் உறவுகளிடம் இனி
மலரவேண்டும் என்ற எம் இலக்கு கவிக் களம்
வெற்றியுடன் உங்களிடமிருந்து நிறைவாகிறது