ஏனையவர்களில் இருந்து கார்த்திகா வேறுபடும் விதம் - 10 நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

.

நான் சென்னையில் நடனம் கற்று திரும்பிய நாள் தொடக்கம் தனி கச்சேரிகள் நடத்தியத்துடன் நடனும் கற்பித்து வந்துள்ளேன். என்னிடம் நடனம் கற்ற மாணவியரை வைத்து பரீட்சாத்தமாக பல நாட்டிய நாடகங்கள் தயாரித்துள்ளேன். இவை மக்களிடையே நல்ல வரவேறுபை பெற்றதுடன், கலா விமர்சகரும் எனது ஆக்கங்களை உற்று நோக்கி விமர்சித்தனர். இவற்றை எல்லாம் கண்ணுற்ற தினகரன் ஆசிரியர் திரு சிவகுருநாதன் என்னை மீண்டும் தினகரன் வாரமஞ்சரியில் தொடர் கட்டுரை எழுதும் படி தூண்டினார். எனது முதல் நூலான “தமிழர் வழர்த்த ஆடற்கலைகள்” தினகரன் வார மஞ்சரியிலேயே வாராவாரம் எழுதி பின் நூல் உருபெற்றதே “காலம் தோறும் நாட்டியக்கலை” இதன் முதற்பதிப்பு இலங்கை வீரகேசரி பதிப்பகத்தால் 1979 இல் வெளிவந்தது. அதை  அடுத்து 1980 சென்னை “பாரி புத்தகப் பண்ணை” வெளியிட்டது. தற்போதும் இலங்கையில் அரச நுண்கலை கல்லூரிகளில் எனது நூல்களே பயன்படுத்தப்படுவதால் 2013 இலங்கையில் பூபாலசிங்கம் பதிபகத்தினர் அதன் மூன்றாவது பதிப்பை வெளி கொணர்ந்துள்ளனர்.
“நூல் அறிமுகம்” என்ற தலைப்பின் கீழ் 30.09.1979 வீரகேசரியில் பேராசிரியர் கா. இந்திரபாலா எழுதியதின் சில பகுதிகளை கீழே காணலாம்.




“காலம் தோறும் நாட்டியக் கலை” கா. இந்திரபாலா
திருமதி கார்த்திகா கணேசர் இந்நூலிலே சிங்கநோக்குடன் நடன கலையைப் பார்த்துள்ளார். பின்நோக்கி அதன் படிமுறை வளர்ச்சியையும், முன்நோக்கி அதன் எதிர்கால வளர்ச்சிக்குத் தேவைப்படும் போக்குகளையும், தன் அனுபவத்தை மையமாக வைத்து ஆராய்ந்துள்ளமை இன் நூலுக்குரிய சிறப்பியல்பாகும்.
கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக நாட்டியக்கலைத் துறையில் முழுமூச்சாக ஈடுபட்டு வரும் திருமதி கார்த்திகா தொடக்கத்திலிருந்தே வெறும் ஆசிரியையாக இருக்கும் நோக்கை விட்டு தன் கலையை ஆழமாக ஆராய்ந்து அதன் வளர்ச்சிக்குப் புதிய பங்களிப்புகளை நல்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார். இதனால் தான் பத்து ஆண்டுகட்கு முன்பு அவருடைய “தமிழர் வளர்த்த ஆடற்கலைகள்” என்ற நூல் வெளிவந்தது. இதன்பின் பணிபுரிந்தபோது பெற்றுக் கொண்ட அனுபவங்களும் நாட்டிய கலையின் எதிர்கால வளர்ச்சி பற்றிய சிந்தனையில் அவரை ஆழ்த்தி புதிய பரிசோதனைகளில் ஈடுபடத் தூண்டியது.
“காலம் தோறும் நாட்டியக்கலை” என்ற இந் நூலை படைப்பதற்கு உதவியது.
ஏந்த ஒரு கலையும் எல்லாகாலங்களிலும் மாற்றம் அடையாது ஒரே தன்மையதாய் இருப்பதில்லை. இதை நம்மவர் பலர் உணர்வதில்லை. நமது பழைய கலை என்பதற்காக மட்டும் அதனை பேணவேண்டும் என்று பலர் எண்ணுகிறார்கள். அப்படியல்லாது அதனை மேலும் முறையாக வளர்த்துச் செல்ல வேண்டிய கடமை நமது கலைஞர்கட்கு உண்டு. இக்கடமையை அவர்கள் சரியாக செய்வதற்கு நமது நாட்டியக்கலை பற்றிய வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும். அதன் எதிர்காலம் பற்றிய சிந்தனையில் ஈடுபட வேண்டும்.
திருமதி கார்த்திகா கணேசருடைய இந் நூல் இந்த வகையில் கலைஞர்கட்கும் ஆர்வலர்க்கும் மிக பயனுள்ள சிந்தனையை தூண்டுகின்ற ஒரு படைப்பு என்பதில் ஐயமில்லை.
1980 வெளியான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கப்பட்டதில் கவின் கலைகளுக்கான நூல்கள் என்ற தலைப்பில் “காலம் தோறும் நாட்டின கலை” முதற்பரிசை பெற்றது. கால தாமதமாக 1982 இலேயே பரிசு வழங்கப்பட்டது. 1982 இல் தமிழய முதல் அமைச்சராக இருந்த M. G. இராமச்சந்திரனே இப்பரிசை வழங்கி கௌரவித்தார். இப்பரிசை சென்னை சென்று பெற்றுக்கொண்டேன். இலங்கையரான எனக்கு இப்பரிசு கிடைத்தது எதிர்பாராத ஒன்றே. சென்னையில் எனக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பல நாடக இலக்கிய ஆர்வலர்கள் என்னை சந்தித்து பேசுவதில் ஆர்வம் காட்;டினார்கள். மத்திய அரசின் தொலைக்காட்சி “தூர்தர்ஷன்” நில் பேட்டி கண்டார்கள். பெயர் பெற்ற எழுத்தாளர் கொத்தமங்கலம் சுப்பு (வாஷங்டனின் திருமணம்)வின் மகளே ஒழுங்கு செய்திருந்தார். அதை அடுத்து அகில இந்திய வானொலியிலும் பேட்டி நடைபெற்றது. “அமுதசுரபி” சஞ்சிகை ஆசிரியரும் பிரபல எழுத்தாளருமான விக்கிரமனே என்னை பேட்டி கண்டார். மத்திய அரசின் கீழ் இயங்கும் “லலித்கல அக்கடமி”யில் எனக்கு வரவேற்பளிக்கப்பட்டது.
நாட்டிய கலாநிதி
திருமதி கார்த்திகா கணேசருக்க சென்னையில் வரவேற்பு
தினகரன் கட்டுரையின் ஒரு பகுதி
தமிழக அரசின் முதற் பரிசினை பெறுவதற்கு நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர் சென்னைக்கு வருகை தந்தபோது சென்னை லலித்கலா அக்கடமியின் செயலாளர் திரு ராஜாராம் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் பிரபல நாடக கலைஞர் திரு முத்துசாமி “நாற்காவிகாறர் – நாடகாசிரியர் பேசுகையில் ..................................................................................................................................................
திருமதி கார்த்திகாவின் குரல் சென்னை கலைஞ்சர்கட்கும் இரசிகர்களுக்கும் ஒரு புதிய குரலெனினும் முற்றிலும் வரவேட்கப்படுவதும் சமுதாயத்திற்கு வேண்டியதும் அதுவே. இதன் காரணமாகவே அதற்கு தமிழக அரசின் முதற் பரிசு கிடைத்திருக்கிறது என்றார் கண்ணன்.

நாட்டிய நூலுக்கு தமிழ் நாட்டு அரசின் முதற் பரிசு.

வீரகேசரி வார வெளியீடு 24.1.1982 (ஒரு பகுதி)

நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசரின் "காலம் தோறும் நாட்டியக் கலை" நூலுக்கு தமிழ் நாட்டு அரசு கவின் கலை பகுதிக்கான முதற் பரிசினை வழங்கியது. பரிசு வழங்கு விழா இம் மாதம் 15ஆம் திகதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. முதலமைச்சர் மாண்பு மிகு எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள் ஆசிரியருக்கு பரிசை வழங்கினார். இவ் விழாவில் நிதி அமைச்சர் நெடுஞ்செழியன் அவர்களும், கல்வி அமைச்சர் அரங்க நாயகம் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்கள்.

Dancer wins state award
Daily News – 23.2.1982  Sumana Saparamadu

When her publisher informed her late last year that this book had won the Tamil Nadu State Award for the best publication in 1980 on the fine arts. There are five literary awards. Mrs Kanesar was taken completely by surprise says Mrs Kanesar “Me an outsider winning an award for a book on the dance in the home of Bharatha Natyam! It was un believable” on 15 January Mrs Kanesar received her award from the chief Minister of Tamil Nadu Mr M G Ramjachandran.

New Duimension to Bharatha Natyam
By Rajitha Weerakoon

Sunday Observer – 14.2.1982

This is the first time that a Srilankan was one amongs such artists to have won ths Indian award. Awarded to writers of distinction in various field.

Karthiga essentially an experimentalist who strives to give a new dimension to Bharatha Natyam. Insists “My mission is to impart my knowledge as a dancer and choreographer and dedicated my services to society and to the elite.” An artist who has already contributed her shere to the emergence of a meaningful tamil theatre.

“Natya (dance) through the ages”
Book review – Daily Mirron – 3.8.1982 by Yoga Balachandran


It is rarely that one come across a dancer for that matter, an artist who takes genuine interest in his or her own chosen art and devotes much time energy and money in delivering  deeply into its intricades with a researchful eye. Such an artist only could contribute constructively towards the future prospects of the art concerned. We could be proud of a few remarkable personalitieswho had given us worthwhile research based documentaries on variousl forms of indigenous arts such as Prf Sarathchandra, Henry Jaysena Chitrasena Vjira and Dr Gunawardena. Karthika Ganesar is one such genuinely dedicated artist who spares no pain to get to the roots of her chosen art Bharatha Natyam.