குழந்தை திருமணத்தை தடுக்கவும், அது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் கொண்டுவரவும் நியூயார்க் நகரில் 65 வயது முதியவருக்கும் 12 வயது சிறுமிக்கும் நடத்தப்பட்ட நாடகத் திருமண வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருக்கிறது.பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான வன்முறைகள், பாலியல் முறைகேடுகள் உலக நாடுகளில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில், அது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது அவசியமாகியுள்ளது.
|
எனவே மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான வீடியோவை, கோபை பெர்சன் என்பவர் உருவாக்கியுள்ளார். அதன் மையமாக, 65 வயது முதியவரும் 12 வயதே ஆன சிறுமியும் திருமண உடையில் நியூயார்க்கின் பரபரப்பான சாலையில் புகைப்படம் எடுத்துக்கொண்டால், சாலையோரம் நடந்து சென்றால் பொதுமக்கள் என்ன செய்கிறார்கள் என்பதை எதிர்பார்ப்பாக வைத்து வீடியோ தயாரிக்கப்பட்டுள்ளது. சொல்லி வைத்தாற்போல ஆண் பெண் பேதமின்றி இந்தக் காட்சியை கண்டவர்கள், தங்களின் எதிர்ப்பை கடுமையாகத் தெரிவிக்கிறார்கள்.
|