ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான சைவசமய அறிவுத் திறன் போட்டிய – 2016
இப் போட்டிகள் March மாதம் 6ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிட்னி துர்க்கை அம்மன் கோவிலில் பிற்பகல் 2 மணியிலிருந்து நடைபெறவுள்ளது.
வர்ணம் தீட்டுதல் (பாலர் ஆரம்ப பிரிவுக்கும் பாலர் பிரிவுக்கும் மட்டும்), சமய அறிவுப் போட்டி, திருமுறை ஒப்புவித்தல் போட்டி என மூன்று போட்டிகள் நடைபெறும். (அறிவுப்போட்டிக்கான மாதிரி வினாக்களும் வழங்கப்படும்)
இப்போட்டிகளில் பங்குபற்றுபவர்களுக்கு பரிசில்கள் முதற் பிரிவு, இரண்டாம் பிரிவு, மூன்றாம் பிரிவென மூன்று வகையாக வழங்கப்படவுள்ளது. ஓவ்வொரு பிரிவிலும் ஓன்றுக்கு மேற்பட்ட திறமையானவர்களுக்கு பரிசில்கள் கிடைக்கவேண்டும் என்பதற்காக இப்படி வகுக்கப்பட்டடுள்ளது.
திருமுறை ஓப்புவித்தல் போட்டி
கீழ்ப்பிரிவு
மேலே கொடுக்கப்பட்ட மூன்று தேவாரங்களையும் மனனம் செய்திருத்தல் வேண்டும்.
தேவாரம் 1
பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.தேவாரம் 2
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே.
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே.
தேவாரம் 3
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே.
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே.
மத்தியபிரிவு
மேலே கொடுக்கப்பட்ட நான்கு திருமுறைகளையும் மனனம் செய்திருத்தல் வேண்டும்.
தேவாரம் 1
அங்கமும் வேதமும் ஓதும்நாவர்
அந்தணர் நாளும் அடிபரவ
மங்குன் மதிதவழ் மாடவீதி
மங்குன் மதிதவழ் மாடவீதி
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
செங்கய லார்புனற் செல்வமல்கு
செங்கய லார்புனற் செல்வமல்கு
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
கங்குல் விளங்கெரி யேந்தியாடுங்
கணபதி யீச்சரங் காமுறவே. கங்குல் விளங்கெரி யேந்தியாடுங்
தேவாரம் 2
நத்தார்படை ஞானன்பசு வேறிந்நனை கவுள்வாய்
மத்தம்மத யானையுரி போர்த்தமண வாளன்
பத்தாகிய தொண்டர்தொழு பாலாவியின் கரைமேல்
செத்தாரெலும் பணிவான்திருக் கேதீச்சரத் தானே.
மத்தம்மத யானையுரி போர்த்தமண வாளன்
பத்தாகிய தொண்டர்தொழு பாலாவியின் கரைமேல்
செத்தாரெலும் பணிவான்திருக் கேதீச்சரத் தானே.
திருவாசகம்
பால்நினைந் தூட்டுந் தாயினும் சாலப்
பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறத் திரிந்த செல்வமே சிவபெரு மானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே.
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறத் திரிந்த செல்வமே சிவபெரு மானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே.
அருணகிரிநாதர் திருப்புகழ்
இறவாமற் பிறவாமல் எனையாள்சற் ...... குருவாகிப்
பிறவாகித் திரமான பெருவாழ்வைத் ...... தருவாயே
குறமாதைப் புணர்வோனே குகனேசொற் ...... குமரேசா
கறையானைக் கிளையோனே கதிர்காமப் ...... பெருமாளே.
பிறவாகித் திரமான பெருவாழ்வைத் ...... தருவாயே
குறமாதைப் புணர்வோனே குகனேசொற் ...... குமரேசா
கறையானைக் கிளையோனே கதிர்காமப் ...... பெருமாளே.
மேற்பிரிவு
மேலே கொடுக்கப்பட்ட ஐந்து திருமுறைகளையும் மனனம் செய்திருத்தல் வேண்டும்.
தேவாரம்
மாதர்ப் பிறைக்கண்ணி யானை
மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர்சுமந் தேத்திப்
போதொடு நீர்சுமந் தேத்திப்
புகுவா ரவர்பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல்
யாதுஞ் சுவடு படாமல்
ஐயா றடைகின்ற போது
காதன் மடப்பிடி யோடுங்
காதன் மடப்பிடி யோடுங்
களிறு வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங்
கண்டறி யாதன கண்டேன். கண்டே னவர்திருப் பாதங்
திருவாசகம்
அன்றே என்றன் ஆவியும்
உடலும் உடைமை எல்லாமும்
குன்றே அனையாய் என்னைஆட் கொண்ட போதே கொண்டிலையோ
இன்றோர் இடையூ றெனக்குண்டோ எண்தோள் முக்கண் எம்மானே
நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ இதற்கு நாயகமே.
உடலும் உடைமை எல்லாமும்
குன்றே அனையாய் என்னைஆட் கொண்ட போதே கொண்டிலையோ
இன்றோர் இடையூ றெனக்குண்டோ எண்தோள் முக்கண் எம்மானே
நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ இதற்கு நாயகமே.
திருவிசைப்பா
ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே
உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே
தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே சித்தத்துள் தித்திக்குந் தேனே
அளிவளர் உள்ளத் தானந்தக் கனியே அம்பலம் ஆடரங் காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத் தொண்டனேன் விளம்புமா விளம்பே.
உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே
தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே சித்தத்துள் தித்திக்குந் தேனே
அளிவளர் உள்ளத் தானந்தக் கனியே அம்பலம் ஆடரங் காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத் தொண்டனேன் விளம்புமா விளம்பே.
திருப்பல்லாண்டு
சீரும் திருவும் பொலியச் சிவலோக
நாயகன் சேவடிக்கீழ்
ஆரும் பெறாத அறிவுபெற் றேன்பெற்ற தார்பெறு வார்உலகில்
ஊரும் உலகும் கழற உழறி உமைமண வாளனுக்காட்
பாரும் விசும்பும் அறியும் பரிசுநாம் பல்லாண்டு கூறுதுமே.
நாயகன் சேவடிக்கீழ்
ஆரும் பெறாத அறிவுபெற் றேன்பெற்ற தார்பெறு வார்உலகில்
ஊரும் உலகும் கழற உழறி உமைமண வாளனுக்காட்
பாரும் விசும்பும் அறியும் பரிசுநாம் பல்லாண்டு கூறுதுமே.
திருபுராணம்
ஆதியாய் நடுவு மாகி அளவிலா அளவும் ஆகிச்
சோதியா யுணர்வு மாகித் தோன்றிய பொருளு மாகிப்
பேதியா ஏக மாகிப் பெண்ணுமாய் ஆணு மாகிப்
போதியா நிற்குந் தில்லைப் பொதுநடம் போற்றி போற்றி.
சோதியா யுணர்வு மாகித் தோன்றிய பொருளு மாகிப்
பேதியா ஏக மாகிப் பெண்ணுமாய் ஆணு மாகிப்
போதியா நிற்குந் தில்லைப் பொதுநடம் போற்றி போற்றி.
அதிமேற்பிரிவு
மேலே கொடுக்கப்பட்ட ஆறு திருமுறைகளையும் மனனம் செய்திருத்தல் வேண்டும்
1 தேவாரம்
பித்தாபிறை சூடிபெருமானே அருளாளா
எத்தான்மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்
அத்தாவுனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே.
2 திருவாசகம்
கடையவனேனைக் கருணையி
னாற் கலந்தாண்டு கொண்ட
விடையவனே விட்டிடுதி கண்
டாய் விறல் வேங்கையின் தோல்
உடையவனே மன்னும் உத்தர
கோச மங்கைக்கரசே
சடையவனே தளர்ந்தேன் எம்
பிரான் என்னெத் தாங்கிக் கொள்ளே
3 திருவிசைப்பா
நீறணி பவளக் குன்றமே நின்ற
நெற்றி கண்ணுடைதோர் நெருப்பே
வேறணி புவனபோகமே யோக
வெள்ளமே மேருவில் வீரா
ஆறணி சடையெம் மற்புதக் கூத்தா
அம்பொன் செயம்பலத் தரசே
ஏறணி கொடியெம் மீசனே யுன்னைத்
தொண்டனே னிசையுமா றிசையே
4 திருப்பல்லாண்டு
சொல்லாண்ட சுருதிப் பொருள் சோதித்த
தூய்மனத் தொண்டருள்ளீர்
சில்லாண்டிற் சிதையுஞ் சில தேவர்
சிறுநெறி சேராமே
வில்லாண்ட கனகத் திரள்மேரு விடங்கன்
விடைப்பாகன்
பல்லாண்டென்னும் பதங்கடந் தானுக்கே
பல்லாண்டு கூறுதுமே
5 புராணம்
கற்பனை கடந்த சோதி கருணையே உருவமாகி
அற்புதக் கோலநீடி அருமறைச் சிரத்தின் மேலாம்
சிற்பரவியோம மாகும் திருச்சிற்றம் பலத்துள் நின்று
பொற்புடன் நடம் செய்கின்ற பூங்கழல் போற்றி போற்றி
6 திருப்புகழ்
துள்ளுமத வேள்கைக் கணையாலே
தொல்லை நெடு நீலக் கடலாலே
மௌ;ளவரு சோலைக் குயிலாலே
மெய்யுருகு மானைத் தழுவாயே
தௌ;ளு தமிழ் பாடத் தெளிவோனே
செய்ய குமரேசத் திறலோனே
வள்ளல் தொழு ஞானக் கழலோனே
வள்ளிமண வாளப் பெருமாளே.