உலகச் செய்திகள்


முனாக் கால்வாயை இந்திய இராணுவம் கைபற்றியது

சிம்பாப்வே ஜனாதிபதி ரொபேர்ட் முகாபேயின் ஆடம்பர 92 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்
முனாக் கால்வாயை இந்திய இராணுவம் கைபற்றியது




23/02/2016 அரியானா மாநிலத்தின் ஆர்ப்பாட்டகாரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த முனாக் கால்வாயை  இந்திய இராணுவம் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.
அரியானாவில், டெல்லியின் பிரதான குடிநீர் ஆதாரமாக விளங்கும் முனாக் கால்வாயை ஜாட் போராட்டக்காரர்கள் அரியானாவின் சோனிபட் அருகே உள்ள அக்பர்பூர் பரோட்டா பகுதியில் கால்வாயை  அடைத்தனர்.
இதனால் டெல்லியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து இந்திய ராணுவம் மற்றும் அரியானா குடிநீர் வாரிய தொழில்நுட்ப அதிகாரிகள் அங்கு விரைந்தனர்.
கால்வாயிலுள்ள  அடைப்புகளை அகற்றி நீரோட்டத்தை சீர்படுத்த அவர்கள் நடவடிக்கை   நன்றி வீரகேசரி 








சிம்பாப்வே ஜனாதிபதி ரொபேர்ட் முகாபேயின் ஆடம்பர 92 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்


24/02/2016 சிம்­பாப்வே ஜனா­தி­பதி ரொபேர்ட் முகாபே 92 கிலோ­கிராம் நிறை­யு­டைய கேக்கை வெட்டி தனது 92 ஆவது பிறந்­த­நாளை ஞாயிற்­றுக்­கி­ழமை ஆடம்­ப­ர­மாகக் கொண்­டா­டினார்.
அவ­ரது பிறந்­த­நா­ளை­யொட்டி விசேட 16 பக்க அனு­பந்­தத்தை வெளி­யிட்ட அந்­நாட்டு அர­சாங்கப் பத்­தி­ரி­கை­யா­னது அவரை இயேசு கிறிஸ்­து­வுடன் ஒப்­பிட்டு விமர்­சித்­துள்­ளது. உலகின் மிகவும் வய­தான தலை­வ­ரான முகாபே கடந்த 36 வருட கால­மாக ஜனா­தி­ப­தி­யாக பதவி வகித்து வரு­கிறார். அவர் தனது பிறந்­த­நா­ளை­யொட்டி 550,000 ஸ்ரேலிங் பவுண் செலவில் பாரிய விருந்­து­ப­சா­ர­மொன்­றுக்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.
சிம்­பாப்வே கடும் வரட்­சியால் பாதிக்­கப்­பட்­டதால் மில்­லி­யன்­க­ணக்­கான மக்கள் பட்­டி­னியால் வாடும் நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்ள நிலையிலேயே ஜனாதிபதியின் இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளது.  நன்றி வீரகேசரி