மெல்பனில் நடந்த தென்னாசிய நாடுகளின் கவிஞர்கள்; ஒன்றுகூடல்

.



தென்னாசிய நாடுகளின் விவகாரங்களுக்கான அமைப்பினால் SAPAC (South Asian Public Affairs)  கடந்த 27 ஆம் திகதி சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட கவிஞர்களின் ஒன்றுகூடலில் இந்தியா இலங்கை பாக்கிஸ்தான் பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் நோபாளம் ஆப்கானிஸ்தான் பூட்டான் ஆகிய நாடுகளைச்சேர்ந்த கவிஞர்கள் கவிதை வாசித்தனர்.
மெல்பன், Mulgrave Stirling theological college   மண்டபத்தில் இந்நிகழ்ச்சியை ஒழுங்குசெய்த தென்னாசிய நாடுகளின் விவகாரங்களுக்கான அமைப்பின் சார்பில் கலாநிதி கௌசல் ஸ்ரீவத்ஸா நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்திருந்தார். மெல்பனில் வதியும் கவிஞர்கள் தெய்வீகன் - ஜே.கே. ஜெயக்குமாரன் - கேதாரசர்மா - பாலநாதன் ஆகியோர் கவிதைகளை தமிழிலும் ஆங்கிலத்திலும் சமர்ப்பித்தனர். எழுத்தாளர் லெ. முருகபூபதி ஈழத்து மற்றும் அவுஸ்திரேலிய கவிஞர்கள் பற்றிய விபரங்களை தெரிவித்து உரையாற்றினார். அவுஸ்திரேலியாவில்  புகலிடம்பெற்றுள்ள மேற்படி நாடுகளைச்சேர்ந்தவர்களின் நூல்களின் கண்காட்சியும் கலை நிகழ்ச்சியும்  இடம்பெற்றது




இதுபோன்ற இலக்கிய ஒன்றுகூடலை தொடர்ந்தும் நடத்துவதற்கு தென்னாசிய விவகாரங்களுக்கான அமைப்பு ஒழுங்குகளை மேற்கொள்ளவேண்டும் என்று இந்நிகழ்வில் கலந்துகொண்ட எட்டு நாடுகளையும் சேர்ந்த கவிஞர்கள் வலியுறுத்திப்பேசினர்.

---0----