உலகச் செய்திகள்


300 ஆண்டு மர்மம் விலகியது :   35 ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான தங்கம் கண்டுப்பிடிப்பு

ரஷ்யா ஏவிய செயற்கை கோள் விண்ணில் மாயம்


தாம் உணவு உண்ணாமல் வெள்ள நிவா­ரண நிதி வழங்­கிய பாலியல் தொழி­லா­ளிகள்

கொலை வழக்கு ; நடிகர் சல்மான் கான் விடுதலை

300 ஆண்டு மர்மம் விலகியது :   35 ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான தங்கம் கண்டுப்பிடிப்பு07/12/2015 300 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கடிக்கப்பட்ட கப்பலில் இருக்கும் சுமார் 35 ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை கொலம்பியா கண்டுபிடித்ததுள்ளது.

கடந்த 1708ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கும், ஸ்பெயினுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்ற போது ஸ்பெயின் கான்ஜோஸ் என்ற கப்பலில் பல்லாயிரம் கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி பாதுகாப்பு கொண்டுச் செல்லப்பட்டது.
ஆனால் அக்கப்பலை கைப்பற்றி தன் வசமாக்க இங்கிலாந்து போரிட்டது. இதில் ஸ்பெயின் கப்பல் கொலம்பியாவில் உள்ள சரூபியன் கடலில் குண்டு வீசி மூழ்கடிக்கப்பட்டது.
அக்கப்பலை கண்டு பிடிப்பதில் கொலம்பியா தீவிரமாக ஈடுபட்டது. 1980ஆம் ஆண்டுகளில் சிதைந்த கப்பல் மூழ்கி கிடக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது அந்த கப்பலில் தங்கம் மற்றும் வெள்ளி இருப்பதை கொலம்பியா நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர். அதில் இருக்கும் புதையலின் மதிப்பு 35 ஆயிரம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் 300 ஆண்டு மர்மம் விலகி விட்டதாக கொலம்பியா அதிபர் ஜுவான் மானுவல் சான் டோஸ் அறிவித்துள்ளார்.    நன்றி வீரகேசரி 


ரஷ்யா ஏவிய செயற்கை கோள் விண்ணில் மாயம்


09/12/2015 ரஷ்ய கடற்பரப்பில் செல்லும் நீர்மூழ்கி கப்பல்களின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்கு ரஷ்ய விண்வெளி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட செயற்கை கோள் ஒன்று மர்மமான முறையில் மறைந்துள்ளது.


கடந்த 5ஆம் திகதி சோயூஸ் ராக்கெட் மூலம் ரஷ்யாவின் மிர்னி நகரில் இருந்து இராணுவ உபயோகத்துக்காக அதிநவீன செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தியது.
அந்த செயற்கை கோள் ஏவுகனையில் இருந்து பிரிந்த பிறகு கட்டுப்பாட்டை இழந்து மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.         நன்றி வீரகேசரி 

தாம் உணவு உண்ணாமல் வெள்ள நிவா­ரண நிதி வழங்­கிய பாலியல் தொழி­லா­ளிகள்


09/12/2015 சென்னை வெள்ள நிவா­ரண பணி­க­ளுக்­காக மகா­ராஷ்­டிர மாநிலம் அக­ம­து­நகர் மாவட்­டத்தைச் சேர்ந்த பாலியல் தொழி­லா­ளர்கள் இந்திய மதிப்பில் ஒரு இலட்சம் ரூபா பணத்தை வழங்­கி­யுள்­ளனர்.

"சினே­கா­லயா" என்ற தொண்டு நிறு­வனம், அக­ம­து­ந­கரில் நேற்­று­முன்­தினம் ஏற்­பாடு செய்த நிகழ்ச்­சியில், ரூபாய் 1 இலட்­சத்­துக்­கான காசோ­லையை மாவட்ட ஆட்­சி­யா­ளர் அனில் கவ­டே­விடம் அவர்கள் வழங்­கி­யுள்­ளனர்.
இது­பற்றி "சினே­கா­லயா" நிறு­வனர் கிரிஷ் குல்­கர்னி கூறு­கையில், சென்னை வெள்ள பாதிப்பைப் பற்றி கேள்­விப்­பட்டு, கடந்த 4 நாட்­க­ளாக இந்த பெண்கள் மன உளைச்­சலில் இருந்­தனர். மாவட்­டத்தில் மொத்தம் உள்ள 3000 பாலியல் தொழி­லா­ளர்­களில் 2000 பேர் இந்த நிதியில் தங்கள் பங்கை கொடுத்­துள்­ளனர். மேலும், கடந்த 4 நாட்­க­ளாக தினமும் ஒருவேளை மட்டுமே அவர்கள் சாப் பிட்டுள்ளனர் என்றார்.   நன்றி வீரகேசரி

கொலை வழக்கு ; நடிகர் சல்மான் கான் விடுதலை

10/12/2015 குடிபோதையில் வீதியோரம் படுத்திருந்தவர்கள் மீது காரைச் செலுத்தி ஒருவரைக் கொன்ற வழக்கில் இருந்து பொலிவூட் நடிகர் சல்மான் கான் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


கடந்த 2002 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம்  திகதி இரவு மும்பை பந்த்ரா பகுதியில் பொலிவூட் நடிகர் சல்மான் கான் குடிபோதையில் காரைச் செலுத்தி வீதியோரம் படுத்திருந்தவர்கள் மீது ஏற்றியதில் ஒருவர் பலியானதுடன் 4 பேர் காயமடைந்தனர். 
இந்த வழக்கு கடந்த மே மாதம்  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மும்பை நீதிமன்றம் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
இந்நிலையில் சல்மானுக்கு எதிராக அரச தரப்பில் அளிக்கப்பட்ட ஆதாரங்கள் ஏற்றுக் கொள்ளும்படி இல்லை. சந்தேகத்தின்பேரில் அவருக்கு தண்டனை அளிக்க முடியாது. இந்த வழக்கில் முக்கிய சாட்சியான ரவீந்திர பாட்டிலின் வாக்குமூலம் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. சல்மான் கான் குடிபோதையில் காரை ஏற்றி ஒருவரை கொலை செய்தமைக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்று தெரிவித்து இந்த வழக்கில் இருந்து அவரை விடுவித்து நீதிபதி ஜோஷி தீர்ப்பு அளித்துள்ளார் .   நன்றி வீரகேசரி