ஏனையவர்களிலிருந்து கார்த்திகா வேறுபடும் விதம் 8 – நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

.

எனது சின்னஞ்சிறு மாணவியரும் நாட்டியத்தை இரசித்து ஆடவேண்டும் என்பதற்காகவே "உதயம்" என்ற நாட்டியத்தை 1975 இல் தயாரித்தேன். இன்றோ மாணவியர் 5 வயதில் நடனம் கற்க வருகிறார்கள், அத்தகைய  சிறாரும் நடனத்தை புரிந்து உணர்ந்து நடிக்க வேண்டுமானால் அவர்களும் புரிந்து இரசித்து ஆடக் கூடிய பாத்திரங்கள் வேண்டும். அவ்வாறு பாத்திரங்களும் கதையும் அமைந்து விட்டால் அவர்கள் உற்சாகம் கரைபுரண்டு ஓடும்.

இவ்வாறான ஒரு நாட்டியத்தை நான் உருவாக்க காரணமாக இருந்தவர்கள் 5 வயதுக்கும் உட்பட்ட சிறுவர்களே. கொழும்பு பம்பலப்பிட்டியில் நான் வகுப்பு நடத்த இடம் தேடிய போது Tiny Tots என்ற பாலர் பாடசாலையில் மாலையில் இடம் தந்தார்கள். மாலை நேரத்தில் நான் வகுப்பு நடத்துமன் பொழுது Tiny Tots உரிமையாளர் செல்வராஜா எனது மாணவியர் ஆடுவதை ரசித்துப் பார்ப்பார். ஒருநாள் தினி டோத்ஸ் சிறாருக்கு என்னால் நடனம் கற்பிக்க முடியுமா என வினாவினார். முயலுகிறேன் என வகுப்பை ஆரம்பித்தேன், 5 வயதுக்கு குறைந்த குழந்தைகள் இரசிக்க பறவைகளாக, மானாக, முயலாக, குரங்காக குதித்து ஆடவைத்து அவர்களையும் மகிழ்வித்து நானும்  மகிழ்ந்தேன். வருட இறுதி நிகழ்ச்சி இதே பறவைகள் , மிருகங்களை மையமாக வைத்து கதை உருவாக்கினேன். எதிர் பாராத மாபெரும் வெற்றியை தந்தது. அதை தொடர்ந்து எனது மாணவியருக்கு இந்த நாட்டியத்தை கற்பித்தேன். எனது முறையாக நடனம் பயிலும் மாணவியருக்கு சிறு சிறு மாற்றங்களுடன் தயாரித்தேன். நான் கற்ற கனடியன் நடனமும் இங்கு பயன்பட்டது. கண்டியன் நடனத்திலே "வண்ணம்" என வெவ்வேறு வகையான மிருகங்களுக்கான ஆடல் உண்டு. அத்துடன் எனது கற்பனையிலான ஆடலும் இணைந்து உருவாகிய "உதயம்" பல தடவை மேடையேறியது.

உதயம் நாட்டிய நாடகத்தை திரு நா மகேசன் அவர்கள் 26.8.79 இல் வீரகேசரியில் எழுதிய விமர்சம் கார்த்திகாவின் தனி முத்திரை.


"உதயம்" என்ற நிகழ்ச்சியிலே முழுக்க முழுக்க சிறுவர்களே பங்குபற்றினார்கள். சுதந்திரம்  என்றால்  என்ன? அந்த சுதந்திரத்திற்காக சீவராசிகள் (மனிதர்கள் உட்பட) எத்தனை பாடுகளை அனுபவிக்கிறார்கள். சுதந்திரத்தை எந்தவகையில் பேணி பாதுகாக்க வேண்டும் என்ற அறிய சங்கதிகளைத் தெளிவு படுத்த அமைக்கப்பட்டதே "உதயம்" சிறுவர்கள் பங்கு பற்றிய இந்த நாட்டிய நாடகத்திலே அவர்களுடைய மனோ நிலைக்கும், அவர்களுடைய கவர்ச்சிக்கும் எந்த வகையில் நாட்டிய களத்தை அமைத்திருக்கிறார் கார்த்திகா.

வனம், வனத்திலே வாவி, வாவியிலே தாம்னரை மொட்டுக்கள். சூரியன் உதயமாகும் வேளை, தாமரைகள் மலர்கின்றன. தேனீக்களும் வண்ணத்துப் பூச்சிகளும் பறக்கின்றன. தேனை உண்கின்றன, கீதம் பாடுகின்றன.

வனம் உயிர் பெற்று எழுகின்றது. பறவைகளும் மான்களும், மயில்களும், குரங்குகளும் ஓடியும் ஆடியும் இயற்கையின் இன்பத்தை அனுபவிக்கின்றன. எவருக்கும் தீங்கு செய்யா சீவராசிகளின் சுதந்திரத்தையும், இன்பத்தையும் கெடுக்க அங்கே வேடர்கள் வருகிறார்கள்.

இன்பச்சூழல் துன்பச் சூழலாக மாறுகின்றது. புத்தியுள்ளவர்கள் தமது புத்தியை உபயோகித்துத் தங்கழுத் துன்பத்தை ஈற்படுத்தும் காரணிகளை அறிந்து அகற்றி வெற்றி கொள்கிறார்கள். இன்பம் பழைய படியும் நிலவுகின்றது.


"உதயத்தில்" யாம் கண்ட காட்ச்சிகள் இவை. மேடையிலே இத்தனை கதாபாத்திரங்களையும் கண்டோமே தவிர அங்கே சிறுவர்கள் தோன்றுகிறார்கள் என்ற எண்ணமே பார்ப்பவர்கட்கு ஏற்படவில்லை.

இத்தனை சிறுவர்களையும் இவ்வாறு பயிற்றி எடுத்த ஆற்றலை பாராட்டாமலே இருக்க முடியாது. குறிப்பாக சூரிய உதயத்தில் தாமரை  மலர்கின்ற  காட்சியும் (ஒவ்வொரு சிறுவரும் ஒவ்வொரு இதழ்களாக நடித்தனர்) சிறு சுருவியை வேடர் கொன்ற பொது மறு குருவிகள் கலங்கி நின்று சென்ற காட்ச்சியும் , வேடர்களின் துடி துடிப்பான உணர்ச்சியும், இன் நிகழ்ச்சியை பார்த்த எவருடைய மனதையுனம் விட்டு நீங்கா என்பது உறுதி.

பேசும் பாத்திரங்களைக் கண்டு அழுத்த இரசிகர்களுக்குப் பேசாத பாத்திரங்களைக் காட்டி, அவற்றைப் பேசாமலே இரசிகர்களுடைய இதயங்களுடன் பேசவைத்த பெருமை கார்த்திகா கனேசருடைய கற்பனா சக்த்திக்கே உரியது.


22.6.75 தினகரனில் திரு பந்துல ஜெயவர்த்தன விமர்சனம் எழுதினார். இவர் சிங்கள நாடகாசிரியர். கலாவிமர்சகர். பௌத்த கலைக் களஞ்சியத்தின் ஆசிரியர். பந்துல ஜெயவர்த்தன சிங்கள பத்திரிகைகளிலும் எனது ஆக்கங்களை விமர்சித்துள்ளார். அதனால் சில சிங்கள கலைஞர் களும் எனது நிகழ்ச்சிக்கு வருகை தருவதுண்டு.

புதிய பரிசோதனையாளர்

புதிய பரிசோதனையாலர்களுள் திருமதி கார்த்திகா கணேசர் முக்கியமானவர். அவரது முயற்சிகள் கூர்ந்து கவனிக்கத்தக்கன. பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கும் தெளிவும் அதற்குரிய சரியான தீர்வுக்கான பாதையைத் தேர்ந்தெடுக்கும் துணிவும் அவரிடம் உண்டு. அவருடைய நாட்டிய நாடகங்களில் ஒன்றான இராமாயணம் புதுமையும் பழமையும் அர்த்த நிறைவுடன் இணைக்கும் போற்றத்தக்க முயற்சி.

மரபையும் படைபூக்கத்தையும் ஒருங்கிணைப்பதன் மூலமாகவே புதியதொரு கலை உருவாகும் என்பது அவரின் நம்பிக்கை. அவருடைய எழுத்துக்கள் இதனைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. அத்துடன் நாம் மேற்கொள்ளும் பணிக்கு அவசியமான திறமையும், பயிற்ச்சியும் திருமதி கணேசரிடம் உண்டு. அவருடைய வாழ்க்கைப் போக்கை நோக்கும் எவருக்கும் இது விளங்கும். இந்திய நாட்டிய மரபில் ஊறி திளைத்தவர் அவர். அந்த மரபே நமது கீழைத்தேய நாட்டிய மரபுகள் யாவற்றிற்கும் ஊற்றுக் கண்ணாக உள்ளது. தென் இந்தியாவில் தலை சிறந்த நாட்டிய ஆசானிடம் பெற்ற பயிற்சியும், கலையின் வரலாறு, நோக்கம் பற்றிய தெளிவான அறிவும், அயராத உழைப்பும் சேர்ந்த திருமதி கணேசர் சிறந்த நாட்டிய ஆசிரியராக திகழ்கிறார்.


சில வாரங்கட்கு முன்பு கார்த்திகாவின் புதிய நாட்டிய நாடகம் "உதயத்தை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. "உதயம்" மூலம் கார்த்திகா மேலும் சில அடிகள் முன்னோக்கி வைத்துள்ளார் என்பதில் ஐயம் இல்லை.
Sunday times – 20.7.75 – SJ
Creative dancing
Karthika was obviously trying to find some creative dancing in the oriental idiom that children of a young age could participate in freely with understanding and not something that would be beyond the limit of their understanding. So what she had attempted is a somewhat new approach to the Tamil dance. The blending of the traditional with the modern idiom. The grammar of music and dance is a must for all students of these fine art, but grammar alone does not make a piece of creative art on literature.

I am one of those who enjoyed Karthika Kanesar “The Dawn” as traditional art presented with a creative approach. I can only quote from the great grammararian Tholkappiar who said “it is quite in order for old things to disappear giving way to new with the passage of time” he maintains.

Personally I feel that the art of Bharatanatyam in its classic form will with the blessing of the gods never disappear but may be with young children it is better to start them off on simpler ideas  not kit to childhood – animals and hunters. That way instead of being purely imitative of their teacher, they respond to a creative feeling which after all is the basis of all art – S.J