தமிழ் சினிமா


இஞ்சி இடுப்பழகி


தமிழ் சினிமாவில் ஹீரோயின்களுக்காக படம் பார்ப்பது மிகவும் அரிது. அதை முறியடித்த சில நடிகைகளில் அனுஷ்காவும் ஒருவர். சோலோ ஹீரோயினாக அருந்ததி, பஞ்சமுகி, ருத்ரமாதேவி என ஹாட்ரிக் ஹிட் அடித்து அடுத்து இஞ்சி இடுப்பழியாக களம் இறங்கியுள்ளார்.
கமல்ஹாசன், விக்ரம், சூர்யா போன்ற நடிகர்கள் தான் படத்திற்காக உடலை ஏற்றி, இறக்கி நடிப்பார்கள். அவர்களுக்கே சவால் விடும் வகையில் அனுஷ்கா இப்படத்திற்காக 25 கிலோவிற்கு மேல் ஏற்றியுள்ளார். இப்படம் இன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கில் சுமார் 1500 திரையரங்குகளில் வெளிவந்துள்ளது.
கதை :
தான் எப்படி இருக்கிறாரோ அதுவே சந்தோஷம் என வாழ்ந்து வரும் ஸ்வீடி அனுஷ்காவிற்க்கு ஆர்யாவுடன் ஒருதலை காதல் தோல்வியினால் மனமுடைந்து தன் உடல் எடைதான் காரணம் என நினைத்து பிரகாஷ் ராஜ் நடத்தும் "சைஸ் ஜீரோ" எனும் பிரபலமான உடல் எடையை குறைக்கும் மையத்துக்கு வறுகிறார்.
பின் நாளில் அங்கு மோசடி தெரியவர மக்களுக்கு விழிப்புணர்வு எற்படுத்த ஆர்யாவின் உதவியோடு பல முயற்சிகள் செய்கிறார். அந்த சமயத்தில் எற்கனவவே மற்றொருவருடன் காதலில் இருக்கும் ஆர்யாவிற்கும் அனுஷ்கா மீது காதல் வருகிறது. பின் அனுஷ்காவின் முயற்சிகள் என்னவாயின, ஆர்யாவுடனான காதல் என்னவானது என்பதே மீதி கதை.
படத்தை பற்றிய அலசல்
படம் மொத்தமும் அனுஷ்காவை நம்பிதான் நகர்கிறது. ஆண்கள் ( கதா நாயகர்கள்) மட்டுமே உடலை வருத்தி நடிக்க முடியும் என்பதை பொய்யாக்கி காட்டியிருக்கும் அனுஷ்காவை எப்படி பாராட்டினாலும் தகும். முதல் பாதியில் " so cute " என சொல்லவைக்கும் இவரின் கதாப்பாத்திரம் பிற்பாதியில் நவரசங்களையும் அள்ளி தெழிக்கிறது.
ஆவணப்பட இயக்குனராக வரும் ஆர்யாவிற்கு அனுஷ்காவின் துணை கதாபாத்திரம் அவ்வளவே ஆனால் இந்த கதாப்பாத்திரத்தை. கொஞ்சம் நேரம் வந்தாலும் " செல்லம்.. i love u" என சொல்ல வைக்கிறார் வில்லன் பிரகாஷ் ராஜ். ஊர்வசி தன் எதார்த்த நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். மாஸ்டார் பரத் கிடைத்த இடத்தில் கில்லி ஆடிவிட்டீர் போங்கோ.
என்னதான் படம் தமிழிலும் வெளியாகிறது என சொன்னாலும் பல இடங்களில் டப்பிங் படம் பார்ப்பது போல் தான் உள்ளது.
முதல் பாதி நன்றாக நகர்ந்தாலும் இரண்டாம் பாதி பொறுமையை சோதித்து பார்க்கிறது. கண்ணில் பட்ட தூசியை ஊதி விட்டால் காதல் , தாங்கி பிடித்தால் காதல் என்பதெல்லாம் அதே பழைய மாவை அரைத்திருக்கிறார்கள். அனுஷ்காவின் குறிக்கோள் பெரிதா காதல் பெரிதா என்பதில் இயக்குனரின் குழப்பம் படத்திற்க்கு பின்னைடைவை தந்துள்ளது .
நிரோவ் ஷாவின் ஒளிப்பதிவு தான் படத்தின் தூணே. அவ்வளவு அழகான காட்சியமைப்புகள் பாராட்டுக்களை அள்ளி செல்கின்றது அது போல் vfx பிரமாதம். ஆனால் படத்தொகுப்பு இரண்டாம் பாதியில் கோட்டை விட்டு விட்டது. கீரவாணியின் பாடல்கள் ரசிக்கும் விதம் பிண்ணனி இசை படம் நகர உதவியுள்ளது.

  1. க்ளாப்ஸ்:
  2. படத்தின் காட்சியமைப்பு , அனுஷ்காவின் நடிப்பு.
  3. பல்ப்ஸ் :
  4. பார்த்து பழகிய அதே பழைய காட்சிகள். சுவாரஸ்யம் அற்ற இரண்டாம் பாதி.
  5. மொத்தத்தில் இஞ்சி இடுப்பழகி One Woman Show
rating : 2.5  நன்றி cineulagam