மகா கவி பாரதியின் பிறந்தநாள் 11 12 1882 - செ.பாஸ்கரன்

.

மகா கவி பாரதியின் "பாரதி" படம் அவரின்பிறந்தநாளான 11/ 12 அன்று மீண்டும் பார்த்தேன். இப்படியும் ஒரு கவிஞன் இருந்தான் இறந்தான் என்பது நிதர்சனம. எங்கள் கவிஞர்களில் என் நினைவில் நிற்பவர் மறைந்த திருமாவளவன் அவர்கள். 2000 மாம் ஆண்டில் வெளிவந்த இந்த படத்தில்பாரதியாக இந்தபடத்தில் Sayaji Shinde அவர்கள் நடித்திருந்தார்கள். மிக அற்புதமான நடிப்பு. எப்படி பாரதி கோபம் கொள்பவனாக சமுதாயத்தின் பழமைகள், ஏற்றத்தாழ்வுகளை கண்டு கொதிப்பவனாக, சிந்திக்கதவறிய சமுதாயம் ஒருகிறுக்கனாக பார்த்ததோ அப்படியே அமைக்கப்பட்டிருந்ததும் சிண்டே உண்மையான பாரதியை கண்முன்னால் கொண்டுவந்தார்.
ஆனால் 1961 இல் வெளிவந்த கப்பல் ஒட்டிய தமிழன் படத்தில் பாரதியாக S V சுப்பையா நடிக்க வைக்கப்பட்டார். இவரை பாரதியாக பார்த்தபோது நமக்கு அறிமுகப் படுத்தப்பட்ட திருநீற்று குறிகளோடு காட்டப்படும் திருவள்ளுவரே நினைவுக்கு வருவார் . சுப்பையா நன்றாக நடித்திருந்தாலும் உண்மையான பாரதியின் குணஇயல்புகள் மறைக்கப்பட்டது.
பாரதி பட பாடலான மயில்போல பெண்ணுஒன்று 2000 ம் ஆண்டில் பவதாரனிக்கு தேசிய விருதை பெற்றுக்கொடுத்தது.