தற்கொலைகளின் வீரவணக்கம்.

.

தன்னம்பிக்கைமனவுறுதிமனிதம்மனிதநேயம் அற்ற மனிதர்களேதற்கொலை செய்து கொள்கிறார்கள்எம்தமிழ்சமூகத்தில் தற்கொலைஎன்ற ஒன்று இல்லை அத்தனையும் கொலைகளே. தற்கொலை என்ற சொல்லிலேயே கொலை இருக்கிறது உறவுகளே!

கோப்பாயைச் சேர்ந்த கொக்குவில் இந்துக்கல்லூரியில் உயர்தரத்தில்கல்விபயிலும் மாணவனான இராயேஸ்வரன் செந்தூரன் எனும்இளைஞன் கொலை இப்படி ஒரு கட்டுரையை மீண்டும் எழுதவைத்துள்ளதுகொலை என்று எதற்கு எழுதினேன் என நீங்கள்வினாவலாம்தற்கொலை என்றால் என்னதன்னுயிரைதன்விருப்புடன் மாய்த்துக் கொள்வது என்று ஒன்றை வரியில்சொல்லிவிட்டுப் போகலாம்கொலை என்பது ஒருவரின் உயிரைஇன்னொருவர் எடுப்பதுஇந்தச் இளைஞன் செந்தூரனின்கொலையையும் நான் அப்படியே பார்க்கிறேன்புலம்பெயர்ந்தநாடுகளில் .ம் முருகதாசன் போன்றோர் செய்ததும் தற்கொலைஅல்ல கொலைமாவீரத்தின் பெயரில் செய்யப்பட்ட தற்கொலைத்தியாகங்களும் எனது பார்வையில் கொலையேஇதை மாவீரர் நாளில்எழுதுகிறேன் என்பதும் குறிப்பிடத்தக்கது.


ஒரு இளைஞனை மூளைச்சலவை செய்து தற்கொலைக்குத் தூண்டிஅவனது உயிரை அவனுடலில் இருந்து அகற்றுவது கொலைக்குநிகரானதுஐந்தறிவான மிருகங்கள், பறவைகள் செய்யாததற்கொலையை கேவலம் ஆறு அறிவு என்று எம்மைப் பீத்திக்கொள்ளும் மனிதன் மட்டுமே செய்கிறான்மற்றுயிரைக் கொன்றுதின்னும் மிருகங்கள் பறவைகளுக்குக் கூட உயிரின் பெறுமதிதெரிந்திருக்கும் போது மனிதனுக்கு மட்டம் இது தெரியாமல் போனதுஎப்படி?

மனிதன் ஒரு சமூகப்பிராணிசட்டம், கலாசாரம், பொருளாதாரம்என்று தனக்குத் தானே சிறைகளைப் போட்டுக் கொண்டு மனிதன்மனிதம் எனும் பெருவெளியில் இருந்து தன்னை விடுவித்துசிறைப்பட்டுக் கொள்கிறான்இதுவும் உணர்வுகளை அடைவு வைத்துகாலங்காலமாகச் செய்து வரப்பட்ட தற்கொலையேசொந்தப்புத்தியில்சிந்திக்காது இன்னொருவனின் புத்தியில் சிந்திப்பதும் அதன்படிவாழ்வதும் தற்கொலைக்குச் சமமானதுகொண்டு வந்ததும் இல்லைகொண்டு போகப்போவதும் இல்லை என்று போதிக்கும் மதங்களாலும்மனிதன் தற்கொலை செய்திருக்கிறான் என்பதை விடசெய்யப்பட்டிருக்கிறான் என்பதே உண்மைவரம்பு, வரையறைகளுக்குஅப்பால்உயிர்ப்பின் தத்துவத்தை உணர்ந்துமனிதமெனும்பெருவெளியில் நின்று சிந்தித்துப்பாருங்கள் உங்களுக்கு இந்தஉண்மை புரியும்.

நாம் பெற்றோர்களாலும், தனிமனிதர்களாலும், சமூகத்தாலுமேஉருவாக்கப்படுகிறோம்கண்ணதாசன் எழுதியது போல்"எந்தக்குழந்தையும் நல்லகுழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அதுநல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலேஎன்றான்.ஒரு குழந்தையின் வாழ்வை, குடும்பத்தின் பிரச்சனையை தாய் எனும்பெண்ணில் போட்டுவிட்டு தப்பிப் கொள்ளும் திராணியற்றஆண்வர்க்கத்தின் செயற்பாடாகவே இதை நான் பார்க்கிறேன்அப்படிதாயைக் குற்றம் சாட்டும் சமூகம் நெஞ்சை நிமிர்த்திச் சொல்லுமாதாய்கான கல்வி, வாழ்வியல் உண்மை, பொது அறிவு அனைத்தையும்அவள் சுதந்திரத்துடனான, விருப்புடனாகவே இருந்தது என்றுசெய்தகுற்றங்களை ஏற்க அதைத் திருத்த வக்கற்றவர்களும்திராணியற்றவர்களுமே பிள்ளைவளர்ப்பு பெண்ணிடம் என்பர்.அவளுக்கு பிள்ளைகளை வளர்ப்பதற்குரிய கல்வியையாவதுகொடுத்தார்களாஊக்குவித்தார்களாஇந்த மனித சமூகமே சீர்கெட்டுபொருளாதாரம் என்று பணப்பேய்களின் பின்னால் அலைவதற்குக்காரணம் யார்பெண்களாஅவர்கள் வளர்த்தபிள்ளைகளாநாம்ஒவ்வொருவருமே காரணம் என்பதை அறிக.

மற்றை உலகத்தை விடுவோம் இந்த செந்தூரன் என்ற சமூகப்பிராணிஎப்படி வளர்க்கப்பட்டதுஅவன் பார்த்தது என்னபார்த்துப் படித்தது,உணர்ந்தது என்னஅநீதிக்கு எதிராக முகம் கொடுத்துநிற்கப்பழக்கப்பட்டானாவளர்க்கப்பட்டானாஇன்று வாழ்ந்துகொண்டிருக்கும் அனைவரும் இவனை விடச் சிறந்தவர்கள் என்றுமார்பு தட்டிக் கொள்ள முடியாதுதயவு செய்து சிந்தித்துப் பாருங்கள்சுயவிமர்சனம் வையுங்கள், விட்ட பிழைகளை திருத்த முயலுங்கள்சமூகம் தானாகவே திருந்தும்.

நாம் கற்காலமனிதர்கள் சொல்லிச் சென்றதைக் கனவாகவும் தேவவாக்காகவும் மனிதப்பேருணர்வை குழிதோண்டிப் புதைக்கும்மதங்களின் வழி நின்றுமே மனிதவாழ்க்கையைப் பார்க்கமுயல்கிறோம்இதன் அடிப்படையை எமது வார்த்தைகளில் இருந்தேஅதை அறிந்து கொள்ளலாம்கம்பர் சொன்னார், வள்ளுவர் சொன்னார்புத்தர் சொன்னார், அல்லா சொன்னார், நபிகள் நாயகமாகச் சொன்னார்,கிறிஸ்து சொன்னார், கிருஸ்ணர் சொன்னார் என்கிறார்கள்அதை விடஇன்னும் ஒருபடி மேலே போய் தமது கருத்துக்களை கடவுள்சொன்னதாக முழுப்பொய்யை சொல்லி மனிதத்தின்தன்னம்பிக்கையை உடைத்து கேவலங்கேட்ட உலகைஉருவாக்கியிருக்கிறன மதங்கள்கடவுளைக் கண்டவன் யார்அவனைஎனக்குக் காட்டுங்கள்முடியுமாஅல்லா சொன்னார் என்று நபிகளும், கர்த்தர் சொன்னார் என்று கிறிஸ்துவும், பிள்ளையார் சொல்ல வேதங்களை எழுதியதாக வேதவியாசரும் சொன்னார்கள். மனிதர்கள் இப்பொய்களை உண்மை என்று நம்பிக் கொண்டு இந்தக் கணினி உலகில் இன்றும் திரிகிறார்கள். இக்கடவுளைக் கண்ட விண்ணர்களுக்கு கணினி என்பது என்ன என்று ஏன் தெரிந்திருக்கவில்லை. அன்று அது ஏன் பயன்படுத்தவில்லை. உங்கள் கடவுளிடம் இருந்து உங்களால் ஏன் கணினியைப் பெற்று குரான் பைகிள் கீதையை எழுதவில்லை? பொய்மையிலேயே கட்டப்பட்டிருக்கிறது மதமும், வாழ்க்கையும் உலகமும்.

செந்தூரன் என்ற இளைஞன் வாழ்ந்த சமூகம் தன்னம்பிக்கையற்றவர் களால் கட்டி எழுப்பப்பட்டிருந்ததுஏமாற்றம், எதிர்ப்பு, தன்னம்பிக்கைஈனம், தற்கொலைக்குத் தூண்டும் கலாச்சாரம் அனைத்துமேஇப்படியான இளைஞர்களை கொன்றதுநாயன்மார்கள் சோதியில்இரண்டறக் கலந்ததைத் தெய்வீகம் என்றோம்.  அம்பிகாபதி அமராவதிகாதலை, கொலையை, தற்கொலையைப் புனிதப்படுத்தினோம்.கிறிஸ்தவம், இஸ்லாமிய மதங்களுக்காக  உயிர் நீர்ப்பாய் ஆயின்கர்த்தரின் அல்லாவின் காலடியில் சேருகிறாய் என்றும், பெறுமதியற்றது மனித உயிர் என்றே கற்றுக் கொடுத்தோம். மனிதர்கள் பாவிகள் என இடித்துரைத்தோம்இவற்றின்பிரதிவிம்பங்களே இத்தற்கொலைகள்ஒரு பறவை மனிதர்களைபெற்று கற்றுத்தந்திருந்தால் மனிதன் சுயமாக வாழ, பறக்கக் கற்றுக் கொண்டிருப்பான்..


கண்மூடித்தனமான நம்பிக்கைகளும், ஏன், எதற்கு என்றகேள்விகளுக்கு இடம் கொடுக்காத, சரியாகப் பதில் அழிக்காதசமூகங்களிலும்வாழ்க்கை என்பது என்ன என்பதை உணர்ந்துகொள்ளாதவர்களாலுமே இந்தற்கொலை எனும் கொலைகள் நிகழ்ந்தவண்ணம் இருக்கிறதுஒருதலைப்பட்சமாக விரும்பும் ஒருவன் அவள்காதலிக்கவில்லை என்றால் தற்கொலை செய்வானாம்இங்கேமிரட்டிப்பணிய வைக்கும் ஒரு பண்பாட்டை கற்றிருக்கிறோம்
nantri Ac

No comments: