தலைமைப் பதவியில் தமிழர் - அன்பு ஜெயா,

.

  
தன்னார்வ தொண்டாளராக புலம் பெயர் மக்களுக்கு  சேவை செய்யத் தொடங்கி  இப்போது புலம்பெயர் மக்களின் சேவைக்கான அதி உயர் அமைப்பான  சிட்
 வெஸ்ட் பல்லின பல்கலாச்சார சேவைமையத்தின் (SydWest Multicultural Services)
அதி உயர் பதவியான நிர்வாகக்குழு தலைமைத்துவத்தை எட்டியிருக்கிறார் 
வழக்கறிஞர் சந்திரிகா சுப்ரமண்யன்.  கடந்த ஆறு ஆண்டுகளாக அந்த 
அமைப்பின் நிர்வாகக் குழுவில் பல்வேறு  நிர்வாகப் பொறுப்பில் இருந்த 
இவர் முதல் முறையாக  தலைமைப் பதவியில் அமரும் பெண் என்ற பெருமைக்குரியவர்.கடந்த பல ஆண்டுகளாக டாக்டர் சந்திரிகா சுப்ரமண்யன்
மேற்கு சிட்னி பொது  மக்களுக்கு தனது சோமா அமைப்பின் மூலம் 
இலவச சட்ட உதவிகளைச் செய்து வருகிறார். ஆயிரக் கணக்கானபல்லின
பல் கலாசார மக்களுக்கு இதன் மூலம் பயன் கிட்டுகிறது.  குறிப்பாக பெண்கள் 
இந்தச் சேவையை பெரிதும் பயன்படுத்துகிறார்கள்.




இந்தியாவிலும் இலங்கையிலும் பத்திகையாளராகவும் ஊடகத் துறையில் 
ஆய்வாளராகவும் பல்கலைக்கழகங்களில்  விரிவுரையாளராகவும்
 பணி செய்தவர். . இதுவரைபதினைந்துக்கும்  மேற்பட்ட நூல்களை 
எழுதியுள்ளார். 


சமீபத்தில், இவர் எழுதிய தில்லை என்னும் திருத்தலம்” – என்ற நூலின் வெளியீடு தமிழ் வளர்ச்சி மன்றத்தினரால் சிட்னியில் ஒழுங்கு செய்யப்பட்டது. இந்த நூலை மருத்துவக் கலாநிதி மனமோகன் அவர்கள் வெளியிட்டு, கலாநிதி ராசய்யா ரவீந்திரராஜா அவர்கள் முதல் நூலைப்  பெற்றுக்கொண்டார். இவரது தற்போதய நூலான
 இணையக்குற்றங்களும், இணைய வெளிச் சட்டங்களும் 
என்ற நூலை புது டில்லி தமிழ்ச் சங்கம் வெளியிடுகிறது.

--------------------------

No comments: