மலரும் முகம் பார்க்கும் காலம் 22 - தொடர் கவிதை

.
„மலரும் முகம் பார்க்கும் காலம்“ கவிதையின் இருபத்திரண்டாவது (22) கவிதையை எழுதியவர் இந்தியா,கைதராபாத்தைச் சேர்ந்த படைப்பாளியான திருமதி.தேனம்மை லக்ஸ்மணன் அவர்கள்.
இவர் தொடர்ந்தும் தனது முகநூலிலும் இணையத்தளங்கள் பத்திரிகைகளில் தனது ஆக்கங்களை எழுதிக் கொண்டிருப்பவர்.தமிழ் எழுத்தாளர் இணைய அகத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்த „விழுதல் என்பது எழுகையே“என்ற நெடுந்தொடரில் பங்குபற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


என் தேகம் புதை பேனா எடுப்பேனா
வன் தேசம் விதை பேனா விடுப்பேனா
கண் காந்தத் தின் பேனா கொடுப்பேனா
மண் தீண்டும் முன் பேனா மலர்வேனா

நெடுந் தீவும் நன் நாடும் காண்பேனா
கடுந் தீயும் கடி தவமும் மாண்பேனா
விடு மக்கள் வீட டையப் பார்ப்பேனா
கொடு உரிமை படை யுடைய யாப்பேனா

தமிழ்ச் சாதி தமிழ் நீதி விளங்கட்டும்
தமிழ்ச் சேதி தமிழ் தேசம் உய்யட்டும்.
தமிழ்ப் பறைஞர் தமிழ்க் குரவர் உலகெட்டும்
தமிழ் முழங்கி தமிழ் ஒலிக்க உயரட்டும்.

பலரும் போக யாக்கைக் கோலம்
அலரும் அகம் மாக்ரை கேலம்
சிலரும் யாகம் யாக்கும் சீலம்
மலரும் முகம் பார்க்கும் காலம்.


திரை நீங்கி திருத் தேசம் முழுவட்டும்
கறை நீங்கி கருப் பெருக்கம் பரவட்டும்.
கரை திரும்பிப் புகழ் ஒளிர வாழட்டும்.
கரை காணா மகிழ் வெளிச்சம் பெருகட்டும்

No comments: