ஏனையவர்களிலிருந்து கார்த்திகா வேறுபடும் விதம் 7 – நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

.

நானும் எனது மகன் அமிழ்தனுமாக இணைந்து “உள்ளம் கவர் கள்வன்” என்ற பெயரில் ஒரு சிறு நாட்டிய நாடகம் ஆடிநோம். ‘இது பரதத்தில்’ காணும் உருப்படிகளையே வைத்து பரதநாட்டியத்தின் அழகு குறையாது அமைக்கப்பட்ட நாட்டிய நாடகம். “ஆடாது அசங்காது வாகண்னா” என சின்னஞ்சிறு கண்ணனின் தாயாக நான் ஆடியபின் “அலைபாயுதேகண்ணா” என்ற பாடல், றாதை கண்ணனின் குழலோசையில் மயங்கி ஆடுவதாக அமிழ்தனும் நானும் இணைந்து ஆடிநோம். அதே பாடலில் “இதர மாதருடன் நீ கழிப்பதோ, இது தகுமோ, இது முறையோ” என கண்ணன் பிற பெண்களுடன் ஆடுவதால் விரக்தியும் மன சஞ்சலமும் அடைகிறான். றூதை இவ்வாறு கவலைக்குள்ளான றாதை காட்டிலே கண்ணனை தேடி அலைகிறாள். “திக்குத் தெரியாத காட்டில்” என்ற பாரதி பாடல். இங்கோ கண்ணறே வேடனாக மாறு உரு கொண்டு வந்து கோபியை சீண்டுகிறான்.
“பெண்ணே உன் அழகை கண்டு பித்தம் கொள்ளு தென்றான். ஆடி கண்னே என் இரு கண்மணியே உன்னை கட்டித்தழுவ மனம் கொண்டேன். சாத்திரங்கள் வேண்டேன் நினது இன்பம் வெண்டுமடி, மோடி கிறுக்கு தெடி தலையை மொந்தை பழய கள்ளைப் போலே”
இவ்வாறு மோகம் கொண்ட வேடன் எந்த கனமும் அவளை கெடுத்து விட கூடியவன். தன்வசம் இழந்தவன் மோக கிலுக்கேதி நிப்பவன் எவ்வாறு இருப்பான். இந்த நிலையை அழிழ்தன் அழகாக சித்தரித்தார்.




Kaarthika & Amilthan

அதன் பின் கண்ணன் சுய ரூபத்தை காட்டுகிறான். அவளும் அவனுடன் இணைந்து ஆடுவதாக தன்யாசி வர்ணம் “நீ இந்த மாயம் செய்தால் ஞாயம் தானா” என கோபி கண்ணனுடன் இணைந்து மகிழ்ச்சியாக ஆடுகிறாள். அங்கும் அவன் இணைந்தாடி இன்பமாக களித்து விட்டு மறைந்து விடுகிறான். அவள் அவன் மேல் கொண்ட தாபம், மோகம், அவள் கனவிலே கண்ணன் தோன்றுகிறான். இந்த ஆண்டாள் திருப்பாவையில் வரும் “வாரணம் ஆயிரம் சூள வலம் வந்து நாரணன் நம்பி நடக்கிறாள்” என தான் கண்ட கனவை தோழிக்கு விளக்குகிறாள் தலைவி. “பூரண பொற்குடம் வைத்து புறம் எங்கும் தோரணம் நாட்டப்படுகிற திருமண பந்தல் அலங்காரம் தொட்டு இறுதியிலே அவள் “கைத்தலம் பற்ற கனா கண்டேன் தோழி” என்கிறாள். இவ்வாறாக அமைக்கப்பட்ட நாட்டிய நாடகத்தை நானும் என் மகன் அழிழ்தனும் பல தடைவ ஆடி உள்ளனோம்.

Kaarthika & Sumathi

இந்த நாட்டிய நாடகத்தில் நான் பரதநாட்டியத்தை தவிர வேறு எந்த ஆடலையும் இணைக்கவில்லை. நாட்டிய நாடகங்களில் பல வகை நடனங்களை இணைத்த போதும் இங்கு குறிப்பாக தூய பரதத்தின் அழகை எடுத்துக்காட்டுவதற்காகவே இது தயாரிக்கப்பட்டது. இருந்தும் மரத நாட்டிய அழகும் அதில் வரும் ஐதிகளையும் சுரங்களையும் நாடகத்துடன் இணைத்து வெற்றிகண்டேன். இந்த நாட்டி நாடகம் சென்னையில் MADRAS MUSEM THEATRE இல் 11-07-1987 இல் நடைபெற்றது. ஆதை அடுத்து MADRAS THE HINDU வில் 17-07-1987 வந்த விமர்சனத்தை தருகிறேன்.
Karthiga Kanesar of Sri Lankan Origin and the head of the troupe, in the item "Ullam Kavar Kalvan" spun together a number of familiar Tamil Lyrics "Alai Payuthe" "Thikku theriyatha Kaattil" and "Varanam Ayiram" - in the chaste Classical idiom to describe the pranks of Sri Krishna and Radha longing to be in his company. The neat  interlocking of the sequences gave the mini-ballet smoothnes and fluidity  and well defined adavus added much to the appeal.
Kaarthikaa

புரதநாட்டியத்தின் மூலம் இத்தகைய நாட்டிய நாடகங்களை தயாரிக்கலாம். ஆனால் எப்பொழுதும் பரதத்தில் கண்ணன் தோன்றும் போதும் பெண்தன்மையுடனேதான் காணபப்டுவது வழமை. இவ்வாறே இரசிகரும் பார்த்து பழக்கப்பட்டு விட்டனர். பெண்தன்மை உள்ள ஆனால் பெண்ணெ வசீகரிக்க முடியுமா? ஏன் எமது ஆண்மை மிருக்கை காணமுடியாது. அருள் என்பது பெண்மையுடன் இணைந்ததாக கருதப்படுகிறதா? இது எமது மரமாகி விட்டது. வெண்கல வார்ப்பபுகளோ அல்லது எமது ஓவியங்களோ கண்ணனை ஆண்மையின் கப்பீரத்துடன் வரைவதில்லை. கண்ணன் ஆடினாலோ பாடினாலோ எங்குமே கீரேக்க ஆண் தெங்வங்களாக படைக்கப்பபடுவதில்லை. அவ்வாறு கம்பீரமாக படைத்துவிட்டால் ஏற்க மாட்டார்கள். இதோ அழிழ்தன் வேடனாக ஆடியதற்கான விமர்சனம் அதை காட்டுகிறது.

Thevamanokaran & Kaarthika

மேற்கண்ட விமர்சனத்தின் தொடர்ச்சி
Amiltham Kanesar as the hunter overstressed the camiel to adcree which verged on the farcical. 
காம வெறி கொண்ட வேடுவன் மோகமாக “ஆடி பெண்ணே உனதழகை கண்டு பித்தம் கொண்டேனடி மோடி கிறுக்குதெடி தலையை மொந்தை பிடிய கள்ளைபோலே” சாத்திரங்கள் வேண்டேன் நினது இன்பம் வெண்டும்மடி என்கிறான். வேறி பிடித்தவன் ஆடல் மிகைப்படுத்தப் பட்டதே எமது கலைகள் என நாம் கொண்டுவிட்ட சிலவற்றின் பாதிப்பு இவை. முரட்டு காமவெறி கொண்ட வேடனாக பாரதி படைத்து இன்பம் கணடாள். அதே வேடனை நான் படைத்த போது சம்பிரதாய வாதிகள் ஏற்க மறுக்கிறூர்கள்.

No comments: