இலங்கைச் செய்திகள்


டெங்கு காய்ச்சலால் 44 பேர் பலி

யாழ். மாணவனின் தற்கொலை தமிழரின் உரிமைகளுக்கான போராட்டங்களில் ஒன்று

குளியலறையில் பாட்டியை சிறைவைத்த மகளும் பேத்தியும் கைது 

 விஷம் அருந்திய நிலையில் 3 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி

சவூதியில் இலங்கைப் பெண்ணின் மரணதண்டனைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

 மஹிந்தவின் தற்போதைய மாதாந்த வருமானம் 4,54,000 : எவ்விதத்தில் நியாயம்?

வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு :  அசௌகரியத்தில் நோயாளர்கள்

கொழும்பு துறைமுக அபிவிருத்தித்திட்டம் விரைவில் மீண்டும் ஆரம்பிக்கப்படும்

ஒரு நாளைக்கு ஒரு கோடி கிடைக்கின்றது : கடந்த அரசாங்கத்தில் இந்த பணத்துக்கு என்ன நடந்தது? 




டெங்கு காய்ச்சலால் 44 பேர் பலி


30/11/2015 டெங்கு காய்ச்சலால் இந்த வருடத்தில் மாத்திரம் 44 பேர் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாகவும் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகபடியாக (8248) டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த இரு வாரத்தில் மாத்திரம் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 24,976 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர் பபா பலிஹவடன தெரிவித்தார்.
கடந்த காலத்தில் நிலவிய மழையுடனான காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் டெங்கு நுளம்பு பெருக்கம் அடைந்துள்ளதாகவும் இதன் காரணமாக இடங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும்,  குறிப்பிட்டார்.   நன்றி வீரகேசரி








யாழ். மாணவனின் தற்கொலை தமிழரின் உரிமைகளுக்கான போராட்டங்களில் ஒன்று


30/11/2015 தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­த­லையை வலி­யு­றுத்தி அதி­வேக ரயில் முன்­பாக பாய்ந்து தற்­கொலை செய்து கொண்­டுள்­ள­மை­யினை தமிழ் மக்­களின் உரி­மைக்­கான போராட்ட வடி­வங்­களில் ஒன்­றாக கருத வேண்டும் என்று நவ சம­ச­மாஜ கட்­சியின் தலைவர் விக்­கி­ர­ம­பாகு கரு­ணா­ரட்ண தெரி­வித்தார்.


அர­சியல் கைதி­களின் போராட்டம் தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுக்­கப்படும் நிலையில் திடீ­ரென இடம்பெற்ற குறித்த மாண­வனின் தற்­கொலைச் சம்­பவம் பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தமை தொடர்பில் கேச­ரிக்கு கருத்து தெரி­விக்கும் போதே அவர் மேற்­க­ண­ட­வாறு தெரி­வித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரி­விக்­கையில், கடந்த வெள்ளிக்­கி­ழமை கொக்­குவில் இந்­து­கல்­லூ­ரியில் பயின்று வந்த 18 வயது நிரம்­பிய ராஜேஸ்­வரன் செந்­தூரன் என்ற மாணவன் அதி­வேக ரயில் முன்­பாக பாய்ந்து கவ­லைக்­கி­ட­மான நிலையில் தற்­கொலை செய்து கொண்­டி­ருந்தார்.
இத­னை­ய­டுத்து குறித்த சம்­பவம் பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்த நிலையில் தற்­கொலை செய்­து­கொண்ட மாண­வனின் சட­லத்தின் அருகில் இருந்து கண்­டெ­டுக்­கப்­பட்ட கடி­தத்தில் அவர் அர­சியல் கைதி­களின் விடு­த­லையை வலி­யுறுத்­தியே தற்­கொலை செய்­து கொண்­டுள்ளார் என அறிய முடிந்­தது. அதன் வாயி­லாக இதன் பின்­ன­ணியில் அர­சியல் கார­ணியே உள்­ளது என்­ப­தையும் தெளி­வாக அறிய முடிந்­தது.
இந்­நி­லையில் மாண­வனை எவரும் ரயில் முன்­பாக தள்­ளி­யி­ருக்­கலாம் என்ற கோணத்தில் சந்­தே­கங்­களும் எழுந்­துள்­ளன.அதேபோல் பொலிஸார் முன்­னெ­டுத்து வரு­கின்ற விசா­ர­ணை­களில் ஒருவர் மாணவன் தானாக வந்து ரயில் முன்­பாக பாய்ந்து தற்­கொலை செய்­து­கொண்­டுள்ளார் என்றும் அதனை தான் நேரில் கண்­ட­தா­கவும் சாட்­சியம் அளித்­துள்ளார்.
இந்­நி­லையில் குறித்த மாண­வனின் கடிதத்தில் தமிழ் ஈழ விடு­த­லையை கொடு ஒளி­யூட்டு, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் நல்­லாட்சி அர­சாங்­கத்­தி­லா­வது தமிழ் அர­சியல் கைதி­களை விடு­தலை செய்­யுங்கள் என்ற கோரிக்­கை­க­ளுமே வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருந்­தமை இங்கு குறிப்­பிட்டு கூற­தக்க விடயம்.
அதனால் இந்த கடிதத்தின் கோணத்தில் இந்த சம்­ப­வத்தை நோக்­கினால் இது தமிழ் மக்­களின் உரி­மை­க­ளுக்­கான போராட்­டங்­களில் ஒன்று என்ற கோணத்­தி­லேயே பார்க்­கப்­பட வேண்டும். அதனால் இது தமிழர் உரி­மைக்­கான போராட்டம் என்றே கரு­தப்­பட வேண்டும் என்­பதே நவ சம­ச­மாஜ கட்­சியின் நிலைப்­பாடு என்றார்.    நன்றி வீரகேசரி 









குளியலறையில் பாட்டியை சிறைவைத்த மகளும் பேத்தியும் கைது 



02/12/2015 மீட்டியாகொடை - களுவரபெத்த  பகுதியில் தனது 78 வயதுடைய பாட்டியை குளியலறையில் சிறைவைத்திருந்த பேத்தியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த மூதாட்டிக்கு 3 பெண் பிள்ளைகள் உள்ளதுடன் அதில் ஒரு பிள்ளையின் மகளே இவ்வாறு தனது பாட்டியை சிறையிட்டு வைத்திருந்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த விசேட தகவலையடுத்தே குறித்த பேத்தி கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இந்த மூதாட்டியின் மற்றுமொறு மகளையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.    நன்றி வீரகேசரி












விஷம் அருந்திய நிலையில் 3 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி


03/12/2015 இறம்பொடை இந்து கல்லூரியில் கல்விப் பயிலும் மூன்று மாணவிகள் விஷமருந்திய சம்பவமொன்று இன்று காலை 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இறம்பொடை கெமிலிதென்ன தோட்டத்தை சேர்ந்த மூன்று மாணவிகளே இவ்வாறு விசமருந்திய நிலையில் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த 2ஆம் திகதி இந்த வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவ மாணவிகளை அறிவுறுத்தும் கூட்டமொன்று பாடசாலையில் இடம்பெற்றுள்ளது. இதன்போது தவணைப்பரீட்சையில் குறைவானப் புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்குப் பரீட்சையில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் இன்னும் இருக்கின்ற ஒரு சில நாட்களை நன்றாகப் பயன்படுத்தி கூடுமானவரை படிப்பில் ஆர்வம் செலுத்துமாறும் அறிவுறை வழங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அடுத்த நாள்  பாடசாலைக்கு வருகின்ற போது அனைத்து மாணவர்களும் தமது பெற்றோர்களுடன் வருகைத் தந்து பரீட்சைக்குத் தோற்றும் அனுமதி பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளுமாறும், அனைவரும் ஆலயத்திற்குச் சென்று வருவதற்கான ஏற்பாடுகளுடன் வருகைத் தருமாறு ஆசிரியர்களால் மாணவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்தே பாடசாலைக்கு வருகின்ற வழியில் கெமிலிதென்ன தோட்டத்தில் மூன்று மாணவிகள் விஷம் அருந்திய சம்பவம்  இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக பாடசாலைக்குப் பெற்றோர்கள் அறிவித்துள்ளனர்.
விசமருந்திய மாணவிகளை உடனடியாகப் பெற்றோர் அங்குள்ள அயலவர்களின் உதவியுடன் கொத்மலை வைத்தியசாலைக்கு கொண்டு சேர்த்துள்ளனர்.
பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அவர்கள் கம்பளை வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மூவரின் நிலைமை கவலைக்கிடமாகவே உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
வைத்தியர்கள் தொடர்ந்தும் இவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். தேவை ஏற்படும் பட்சத்தில் இவர்களை கண்டி வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளைத் தாங்கள் மேற்கொள்ளவுள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.    நன்றி வீரகேசரி














சவூதியில் இலங்கைப் பெண்ணின் மரணதண்டனைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்


03/12/2015 சவூதி அரேபியாவில் இலங்கைப் பெண்ணுக்கு நிறைவேற்றப்படவுள்ள மரண தண்டனைக்கெதிரானவும் அதனை நிறுத்துமாறு கோரியும் விடுத்து நேற்று மாலை மட்டக்களப்பு நகரில் பெருமளிவிலான பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சூர்யா மகளிர் அமைப்பின் அனுசரணையுடன் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் ஒன்று சேர்ந்த பெண்கள் சவூதி அரசினால் விதிக்கப்பட்டுள்ள கல்லெறிந்து கொல்லுதல் எனும் மரண தண்டனைக் கெதிரான சுலோகங்கள் பலவற்றை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் விழிப்பூட்டும் துண்டு பிரசுரங்களையும் வினியோகித்தனர்.
பெண்களின் வாழ்வு மற்றும் தொழில் செய்யும் உரிமைகளை சவூதி அரசு மறுக்கிறது. 
இவற்றிற்கெதிராக ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தனர். நன்றி வீரகேசரி










மஹிந்தவின் தற்போதைய மாதாந்த வருமானம் 4,54,000 : எவ்விதத்தில் நியாயம்?


03/12/2015 ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் குரு­ணாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் முன்னாள் ஜனாதி­ப­தி­யு­மான மஹிந்த ராஜ­பக் ஷ தனக்­கு­ரிய ஓய்­வூ­தி­யத்­தையும் பெற்றுக்கொள்­கிறார்.

அதே­வேளை பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ருக்­கான சம்­ப­ளத்­தையும் பெற்றுக் கொள்­கிறார். மாதாந்த வருமானமாக 4,54,000 ரூபாவை பெறுவது  எந்­த­விதத்தில் நியாயம்? இவ்­வாறு சாதா­ரண நபர் ஒருவர் செய்தால் அது குற்­ற­மாகக் கரு­தப்­ப­டு­கி­றது என்று நிதி­ய­மைச்சர் ரவி­ க­ரு­ணா­நா­யக்க நேற்று முன்தினம் பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்தார்.
மார்ச் மாதம் முதல் இவர் 54,285 ரூபா சம்பளம் அடங்கலாக ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபா பெற்று வருகிறார். இது தவிர மார்ச் மாதம் தொடக்கம் 97,500 ரூபா ஓய்வூதிய கொடுப்பனவு, 50 ஆயிரம் ரூபா செயலாளர் கொடுப்பனவு, 2 லட்சத்து 4 ஆயிரம் ரூபா எரிபொருள் கொடுப்பனவு அடங்கலாக 3 லட்சத்து 49 ஆயிரம் ரூபா பெற்றுவருகிறார்.
இவரின் பாதுகாப்புக்கு 107 பொலிஸார், 550 இராணுவத்தினர் மற்றும் பல டசின் வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளன.
பாரா­ளு­மன்­றத்தில் நேற்று இடம்­பெற்ற 2016 ஆம் நிதி­யாண்­டுக்­கான வரவு–செலவுத் திட்­டத்தின் மீதான இறு­திநாள் விவா­தத்தில் பதி­ல­ளித்து உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க இங்கு மேலும் கூறு­கையில்,
ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் குரு­ணாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் முன்னாள் ஜனா­தி­ப­தி­யு­மான மஹிந்த ராஜ­பக் ஷ இவ் வரவு–செலவுத் திட்டம் தொடர்­பாக பார­ாளு­மன்ற விவா­தங்­களில் கலந்து கொள்­ள­வில்லை. மாறாக விகா­ரை­க­ளுக்கு சென்று விமர்­ச­னங்­களை முன்­வைத்து வரு­கிறார். இவர் தனது ஓய்­வூ­தி­ய­மாக 97500 ரூபா­வையும் இதர கொடுப்­ப­ன­வு­க­ளையும் பெற்றுக் கொள்­கிறார். அது­மாத்­தி­ர­மின்றி தற்­போது பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருப்­பதன் கார­ணத்தால் அப்­ப­த­விக்­கான சம்­ப­ளத்­தை­யு­மான 105,000
ரூபா­வையும், இதர கொடுப்­ப­ன­வு­க­ளையும் பெற்றுக்கொள்­கிறார். இவ்­வாறு நபர் ஒருவர் இரண்டு விதங்­களில் சம்­ப­ளத்­தையும் கொடுப்­ப­ன­வு­க­ளையும் பெற்­றுக்­கொள்­வது எவ்­வாறு நியாய­மாகும்? சாதா­ரண நபர் ஒருவர் இவ்­வாறு செய்­வ­தற்கு இய­லு­மாக உள்­ளதா? எனினும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­விற்கு விதி­வி­லக்கு வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது.
வரவு–செலவுத் திட்ட விவா­தத்தில் ஆளும் கட்சி எதிர்­க்கட்­சி­யென இரு­த­ரப்­பி­லி­ருந்தும் 182 உறுப்­பி­னர்கள் தமது கருத்­துக்­களை இங்கு பதி­வு­செய்­தி­ருக்­கின்றனர். சிலர் பாராட்­டி­யி­ருக்­கின்­றனர், சிலர் விமர்­சித்­தி­ருக்­கின்­றனர். விமர்­ச­னத்தை முன்­வைத்­த­வர்கள் நாம் வெள்ளைக்­கா­ரர்­க­ளுக்கு எமது காணி­களை சொந்­த­மாக வழங்கப்போவ­தாக குற்­றமும் சுமத்­தி­யி­ருந்­தனர். எனினும் முன்­னைய ஆட்சிக் காலத்­தின் ­போது எமது நாட்டின் பெறு­ம­தி­மிக்க காணிகள் வெள்ளைக்­காரர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டன. வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்­களை ஊக்­கு­வித்­து இங்கு முத­லீ­டு­களை அதி­க­ரிப்­ப­துடன் தேசிய முத­லீட்­டா­ளர்­க­ளுக்கும், உற்­பத்­தி­யா­­ளர்­க­ளுக்கும் முன்­னூ­ரிமை வழங்­கப்­ப­ட­வி­ருக்­கி­றது.
நாட்டில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தி எதிர்காலத்தை கட்டியெழுப்புவதே எமது
வரவு–செலவுத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். எனவே அனைவரும் ஒன்றி ணைந்து நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டி
யெழுப்புவோம். முதலீடுகளை அதிகரிப் போம், தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்து வோம், அனைவருமாக ஒன்றிணைந்து பய ணிப்போம் என்றார்.
நன்றி வீரகேசரி







வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு :  அசௌகரியத்தில் நோயாளர்கள்


03/12/2015 நாட்டில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளமையினால் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் இன்று காலை முதல் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் கடமையாற்றும் வைத்தியர்களே இவ்வாறு பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அந்தவகையில் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் இன்று காலை வெளிநோயாளர் பிரிவு முற்றாக இயங்கவில்லை. இங்கு சிகிச்சைக்காக வருகை தந்த பொதுமக்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் வீடு திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி
















கொழும்பு துறைமுக அபிவிருத்தித்திட்டம் விரைவில் மீண்டும் ஆரம்பிக்கப்படும்

03/12/2015 இலங்கை அர­சாங்­கத்­தினால் விரைவில் மீண் டும் ஆரம்­பிக்­கப்­ப­டு­மென சீனா மிகவும் வலு­ வான முறையில் நம்­பு­கி­றது என்று சீன வெளி­வி­வ­கார அமைச்சின் தெற்­கா­சிய நாடு­க­ளுக்­கான பிரிவின் பணிப்­ப­ாளரும், கொன்­ஸி­யூல­ரு­மான சென்பெங் தெரி­வித்தார். சீனா­வா­னது
இலங்கை இந்­தியா உள்­ளிட்ட தெற்­கா­சிய நாடு­களின் அபி­வி­ருத்­தியில் பாரிய கரி­ச­னையை செலுத்­து­கின்­றது என்றும் அவர் குறிப்­பிட்டார்.
இலங்­கை­யி­லி­ருந்து சீனா­வுக்கு ஊடக சுற்­றுலா ஒன்றை மேற்க்­கொண்டு விஜயம் செய்­தி­ருந்த ஊட­க­வி­ய­லாளர் குழு­வுடன் நேற்­று­முன்­தினம் சீன வெளி­வி­கார அமைச்சின் அலு­வ­ல­கத்தில் நடாத்­திய சந்­திப்­பின்­போது சென்பெங் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
அவர் இந்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் மேலும் குறிப்­பி­டு­கையில்,
இலங்­கைக்கும் சீனா­வுக்கும் இடையில் ஆயிரம் வரு­டங்­களைத் தாண்­டிய மிகவும் நெருக்­க­மான சிறந்த உறவு காணப்­ப­டு­கி­றது. இந்த நெருக்­க­மான இரு தரப்பு உறவை மேலும் வலு­வூட்­டு­வதே சீன அர­சாங்­கத்தின் நோக்­க­மாகும். அதற்­கா­கவே சீன அர­சாங்கம் பாரிய வேலைத்­திட்ட முயற்­சி­களை முன்­னெ­டுத்து வரு­கி­றது.
குறிப்­பாக சீன ஜனா­தி­ப­தியின் இலங்கை விஜ­யமும், இலங்கை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் சீன விஜ­யமும் இரு நாடு­க­ளுக்­கி­டை­யி­லான நெருங்­கிய உற­வினைக் காட்­டு­கின்­றன.
இலங்­கையில் புதிய அர­சாங்கம் கடந்த செப்­டம்பர் மாதம் பத­விக்கு வந்­ததும் சீன அர­சாங்கம் வாழ்த்து தெரி­வித்­த­துடன் இலங்­கைக்கு விசேட தூது­வ­ரையும் அனுப்­பி­யி­ருந்­தது. அத்­துடன் சீனா­வு­ட­னான உறவு தொடர்பில் இலங்­கையின் புதிய அர­சாங்கம் சாத­க­மான செயற்­பா­டு­களை மேற்­கொள்­வது எமக்கு மகிழ்ச்­சி­ய­ளித்­துள்ள விட­ய­மாகும்.
இலங்­கையின் அபி­வி­ருத்தி திட்­டங்­க­ளிலும் பொரு­ளா­தார அபி­வி­ருத்­தி­யிலும் உத­வி­களை வழங்­கு­வ­தற்கு சீனா தயா­ராக இருக்­கின்­றது. சீனா­வி­னதும் இலங்­கை­யி­னதும் இரு தரப்பு உறவு வலு­வ­டைய வேண்டும் என்­பது எனது நோக்­க­மாகும். இலங்­கைக்கு பொரு­ளா­தார ரீதி­யான உத­வி­களை வழங்­கவும், உற்­கட்­ட­மைப்பு வச­தி­களை வழங்­கவும் சீனா எதிர்­பார்த்­துள்­ளது.
சீனா­வா­னது மிகவும் வேக­மாக வளர்ச்­சி­ய­டைந்து வரு­கின்ற நாடாக உரு­வெ­டுத்­துள்­ளது. அந்த வளர்ச்­சியின் பயனை இலங்கை உள்­ளிட்ட சீனாவின் அயல் நாடு­களும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்­பதே எமது விருப்­ப­மாகும். அதற்­கா­கவே நாங்கள் பாரிய முயற்ச்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்றோம்.
குறிப்­பாக சீனா இலங்­கையின் கைத்­தொ­ழிற்­துறை மற்றும் உட்­கட்­ட­மைப்பு துறையில் பாரிய உத­வி­களை செய்­வ­தற்கு எதிர்­பார்க்­கி­றது. அவ்­வா­றான கொள்­கை­யு­ட­னேயே நாங்கள் செயற்­பட்டு வரு­கின்றோம்.
இலங்­கையில் புதிய அர­சாங்கம் பத­விக்கு வந்­ததும் எமது இரு­த­ரப்பு உறவில் சில சிக்­கல்கள் எற்­பட்­டதைப் போன்ற நிலைமை உரு­வா­னது. ஆனால் துறை­முக நகர அபி­விருத் திட்டம் தவிர்ந்த இலங்­கையில் சீனா மேற்க்­கொண்டு வரும் அனைத்து அபி­வி­ருத்தித் திட்­டங்­களும் தற்­போது மீண்டும் ஆரம்­பிக்­கப்­பட்டு வெற்­றி­க­ர­மாக இடம்­பெற்று வரு­கி­றது.
அதன்­படி கொழும்பு துறை­முக நகர அபி­வி­ருத்தித் திட்­டமும் புதிய அர­சாங்­கத்­தினால் விரைவில் ஆரம்­பிக்­கப்­ப­டு­மென நம்­பு­கிறோம். இது தொடர்­பான அறி­விப்பை இலங்கை அர­சாங்கம் விரைவில் வெளி­யி­டு­மென எதிர்­பார்க்­கிறோம். குறிப்­பாக கொழும்பு துறை­முக நகர அபி­வி­ருத்தித் திட்­ட­மா­னது இலங்­கையின் எதிர்­கா­லத்­திற்கு மிகவும் முக்­கி­ய­மா­ன­தாகும். இந்தத் திட்­டத்தில் இரண்டு நாடு­களும் நன்­மை­ய­டை­ய­வுள்­ளன என்­பதே உண்­மை­யாகும். அனைத்துத் திட்­டங்­களும் முன்­னெ­டுக்­கப்­ப­டு­மென எதிர்­பார்க்­கிறோம்.
இலங்கை உள்­ளிட்ட தெற்­கா­சி­யாவின் அனைத்து நாடு­க­ளு­ட­னனும் நாங்கள் சிறந்த உறவை வளர்த்து வரு­கிறோம். குறிப்­பாக இந்­தி­யா­வுடன் எமக்கு தற்­போது பரஸ்­பரம் சிறப்­பாக செயற்­பட்டு வரு­கின்­றன. சீனாவின் "ஒரு பாதை" என்ற எண்­ணக்­க­ரு­வா­னது தெற்­கா­சிய நாடு­க­ளுக்கு நன்மை பயப்­ப­தாக அமையும். இந்தப் பிராந்­தி­யத்தில் கடற்­பா­து­காப்பு என்­பது மிகவும் முக்­கி­ய­மா­ன­தாகும். இந்த கடற்­பா­து­காப்பு செயற்­திட்­டத்­திற்கு இலங்­கையின் பங்­க­ளிப்பு மிகவும் முக்­கி­ய­மா­னது. இலங்­கையின் அமை­விடம் ஒரு முக்­கிய கார­ண­மாக காணப்­ப­டு­கின்­றது.
கேள்வி : துறை­முக அபி­வி­ருத்தித் திட்­டத்தை இலங்கை முன்­னெ­டுக்கும் என நம்­பு­கி­றீர்­களா ?
பதில் : இலங்­கையின் கடந்த அர­சாங்­கத்­துடன் செய்து கொண்ட புரிந்­து­ணர்வு அடிப்­ப­டை­யி­லேயே துறை­முக நகர அபி­வி­ருத்தித் திட்டம் ஆரம்­பிக்­கப்­பட்­டது. தற்­போது புதிய அர­சாங்கம் தற்­கா­லி­க­மாக அதனை நிறுத்­தி­யுள்­ளது. எனினும் ஏனைய அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்கள் மீள ஆரம்­பிக்­கப்­பட்டு விட்­டன. அந்த வகையில் இந்த திட்­டமும் விரைவில் ஆரம்­பிக்­கப்­ப­டு­மென நம்­பு­கிறோம்.
கேள்வி: துறை­முக அபி­வி­ருத்தித் திட்­டத்தை முன்­னெ­டுக்கும் நிறு­வனம் என்ன கூறு­கி­றது ?
பதில் : அந்த நிறு­வ­னத்­துடன் நாங்கள் நெருங்­கிய தொடர்­புடன் இருக்­கின்றோம்.
கேள்வி: திட்டம் இடை­நி­றுத்­தப்­பட்­டதால் நிறு­வ­னத்­துக்கு நஷ்­டமா?
பதில்: சில சிக்­கல்கள் உள்­ளன. இதன் செலவு மிக பெரி­யது. ஆனால் திட்டம் இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ளது எவ்­வ­ளவு நஷ்டம் ஏற்­பட்­ட­தென்­பது எனக்கு தெரி­யாது.
கேள்வி: இந்த திட்­டத்­தி­னூ­டாக சில ஏக்கார் காணிகள் சீனா­வுக்கு சொந்­த­மா­க­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. எனவே இது இறைமை சம்­பந்­தப்­பட்ட விடயம். அத­னால்தான் புதிய அர­சாங்கம் இதனை தடுத்து நிறுத்­தி­யுள்­ள­தென நீங்கள் நினைக்­கின்­றீர்­களா?
பதில்: நாங்கள் அப்­படி நினைக்­க­வில்லை. ஒரு­வேளை நீங்கள் அப்­படி நினைக்­கின்­றீர்­களா? இது தவ­றான அபிப்­பி­ர­யா­க­மாகும். நாங்கள் இலங்­கைக்கு உதவி செய்­கிறோம். அதற்கு மாறாக நாங்கள் எதையும் கேட்­க­வில்லை இந்த திட்­டத்­தி­னூ­டாக இரண்டு நாடு­க­ளுக்கும் நன்­மை­யுள்­ளது.
கேள்வி: அப்­ப­டி­யானால் திட்­டத்தை மீள ஆரம்பிக்க ஏன் தாமதம் ஏற்படுகிறது என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
பதில்: புதிய அரசாங்கம் பதவிக்கு வந்திருக்கிறது. ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது எவ்வாறெனினும் அனைத்தும் நன்றாக நடக்கும் என்று எனது எதிர்பார்ப்பாகும். சீனா மேலும் புதிய அபிவிருத்தித் திட்டங்களை இலங்கையில் ஆரம்பிக்கவுள்ளது. சீன நிறுவனங்களிடம் பாரிய தொழில்நுட்பம் காணப்படுகிறது எனவே அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வது இலக்கு.
கேள்வி: எவ்வாறான புதிய திட்டங்கள் ஆரம்பிக்கவுள்ளன?
பதில்: இதனை தற்போது கூற முடியாது ஆனால் இரண்டு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் வேலைத் திட்டத்தை நாங்கள் முன்னெடுப்போம் என்றார்.
நன்றி வீரகேசரி








ஒரு நாளைக்கு ஒரு கோடி கிடைக்கின்றது : கடந்த அரசாங்கத்தில் இந்த பணத்துக்கு என்ன நடந்தது? 

04/11/2015 எவன்ட் கார்ட் நிறுவனத்தின் செயற்பாடுகளை கடற்படையின் கீழ் கொண்டு வந்ததன் பின்னர் ஒரு நாளைக்கு  ஒரு கோடியே  25 இலட்சம் ரூபா கிடைக்கின்றது.   ஆனால் கடந்த காலத்தில் 25 இலட்சம் ரூபா கிடைத்ததாகவே  கூறப்பட்டது. அப்படியாயின் ஒரு கோடி ரூபாவுக்கு என்ன நடந்தது?  இது தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும்.  கோத்தபாய ராஜபக்ஷ   இதனை இவ்வாறு விட்டிருக்கமாட்டார் என்று   அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான  ராஜித்த சேனாரட்ன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற  வாராந்த அமைச்சரவை  முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில் 
எவன்ட்கார்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர்   தற்போது  சிங்கப்பூர் சென்றுள்ளார்.  மருத்துவ தேவைக்கு சென்றாராம். ஆனால் அவ்வாறு அவருக்கு மருத்துவ  தேவை இல்லாவிடின் இன்டர்போல் ஊடாக அவரை   இங்கு கொண்டு வர முடியும். தேவை ஏற்படின் அதனை நாங்கள் செய்வோம். 
கேள்வி எவன்ட் கார்ட் நிறுவன விவகாரத்தில் அனைத்து பக்கத்திலும் ஊழல் இடம்பெற்றிருக்கும் என்று அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளாரே? 
பதில் அது அவரின் கருத்தாகும்.   அவர் அறிந்த விடயமாக இருக்கலாம். 
கேள்வி எவன்ட் கார்ட் விவகாரத்தை  கடற்படைக்கு மாற்றிய பின்னர்  எவ்வாறு செயற்பாடுகள் இடம்பெறுகின்றன? 
பதில் சிறப்பாக இடம்பெறுகின்றனர். ஒரு நாளைக்கு  ஒரு கோடியே  25 இலட்சம் ரூபா கிடைக்கின்றது.   ஆனால் கடந்த காலத்தில் 25 இலட்சம் ரூபா கிடைத்ததாகவே  கூறப்பட்டது. அப்படியாயின் ஒரு கோடி ரூபாவுக்கு என்ன நடந்தது?  இது தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும்.  கோத்தபாய ராஜபக்ஷ   இதனை இவ்வாறு விட்டிருக்கமாட்டார். 
விசேட அமைச்சரவை கூட்டம் நடைபெற்றபோது  எவன்ட் கார்ட் நிறுவனத்துக்கு ஆதரவாக பேசும்படி  மூன்று  அமைச்சர்களை கோத்தபாய ராஜபக்ஷ கேட்டிருந்தார்.   அந்த மூன்று அமைச்சர்களும் எங்களுக்கு அதனை கூறினர். 
கேள்வி நிதி புலனாய்வு பிரிவை  தற்போது அகற்றவேண்டும் என்று  அமைச்சர் டிலான் பெரெரா கூறியுள்ளாரே? 
பதில்  ஏன் இதற்கு அமைச்சர் டிலான் பெரெரா பயப்படுகின்றார் என்று புரியவில்லை.  அவ்வாறான ஒரு பிரிவை உருவாக்குவதாக நாங்கள் ஏற்கனவே கூறியிருந்தோம். நன்றி வீரகேசரி