சிங்காரச் சென்னை சீரழிந்தது எப்படி???? - கலாநிதி சந்திரிகா சுப்ரமண்யன்

.
மா மழை போற்றுதும்! மா மழை போற்றுதும் என்ற மழையை போற்றிய தமிழர் வரலாற்றில்மழை பிழைத்த காரணத்தினால்   சென்னை பேரிடருக்கு உள்ளாகி விட்டது.ஒரு நாட்டின்வளம்  அதன் நீர் வளத்தினைச் சார்ந்தது. மாடு கட்டி போரடித்தால் மாளாது என்று யானை கட்டிபோராடிக்கும் மரபாக தஞ்சை மண் இருந்தது.வான் பொய்த்தாலும் தான் பொய்க்காது எனக்காவிரித் தாய் திகழ்ந்தாள்..ஆனால் இந்திய மாநிலங்களில்  பெரும் தண்ணீர்த் தட்டுபாட்டைசந்தித்து வரும்  மாநிலம் தமிழகமாகும். காரணம் வறட்சி, பருவ மழை பொய்த்த வானம் நீர்வளம் வரண்டதால்  கேரளாவுடன் முல்லைப் பெரியாறு, கர்னாடகாவுடன் காவிரி நீர்  நதிநீர்ப்பங்கீட்டு பிரச்சனை,.
அப்படி தமிழகத்திற்கு என்ன பிரச்னை?  எதனால் வந்தது  ஏன் ? எப்படிஉருவானது?
நீரின்றி அமையாது உலகு . தண்ணீரின் மகத்துவத்தை உணர்த்த இதை விட வேறு ஒன்றும்சொல்லத் தேவையில்லை.   அந்தக் காலத்தில் காலத்தின் தேவை கருதி மழைநீர் சேகரிப்பு,நீர் பாசன கட்டமைப்பை  வைத்திருந்தனர்மழைநீர் சேமிப்பு முறை மூலம்  ஒரு ஏரியில்தண்ணீர் நிரம்பினால்கால்வாய் மூலமாக இன்னொரு ஏரிக்கு தண்ணீர் போகும்அதுவும்நிரம்பினால் அங்கிருந்து இன்னொரு ஏரிக்குத் தண்ணீர் பாயும்.. பக்கத்தில் ஆறுகுளம்இருந்தால்  அவையும் ஏரிகளுடன் இணைக்கப்பட்டிருக்கும்.  இப்படியே கடற்பகுதி வரைஏரிகளும் அதன் கால்வாய்களும் நீண்டு இருந்தன.  அதனால் ஒரு பகுதியில் வெள்ளம்வந்தாலும்வறட்சியான இன்னொரு பகுதி வளமாக இருக்க முடிந்தது



நீர் வளங்கள்  ஏரிகள்  மட்டுமல்ல கயம்வாவிதடாகம்பொய்கைகுட்டம்குளம்கிடங்கு,மடு என விதவிதமான  நீர் தடங்களாக இருந்தன.ஆனால் காலத்தின் கோலம் , அரசியல்ஆதாயங்கள் என நீர் மேலாண்மையின் முக்கியத்துவம் அருகியது.
முப்போகம் விளைவித்துபல போகம் பெருமையுடன் வாழ்ந்த தமிழ்நாட்டில் நீரும் உணவும்தட்டுப்பாடாகின.இவை காரணமாக விவசாயம் என்றதலையாயப் பண்டைத்தொழில் அழியத்தொடங்கியதுவிவசாய நிலங்களீல் வறட்சியும் , விவசாயியின் வீட்டில் வறுமையும்சொந்தமாகினவிளைவு விவசாய நிலங்கள் வீட்டு மனையாக விற்பனையாகின.

நாகரீக வளர்ச்சிக்கும்மக்கள் தொகை பெருக்கத்திற்கும் ஏற்ப விவசாய நிலங்களுக்குமுன்பாக காணாமல்  போனவை  நீர் நிலைகள்தான்இப்படி ஆறுஏரிகுளங்கள் அதற்கானஇணைப்பு கால்வாய்களும் ஒவ்வொன்றாக கபளீகரம் செய்யப்பட்டதால் , நீர் மூலங்களும் நீர்வழித்தடங்களும் நீர் நிலைகளும் வற்றிப் போய்  விட்டன
அதனால் இருபது அடி ஆழத்திற்கு கிணறு வெட்டி விவசாயம் செய்தவர்கள் இன்று இரு நூறு அடி வரி  ஆழ்துளை கிணறு வெட்டி  தண்ணீரைத் தேடிக்  கொண்டிருக்கின்றனர்ஒவ்வொருஆண்டும்  ஆழ்துளை கிணற்றின் ஆழம் அதிகரித்துக் கொண்டே செல்கிறதுகூடவே தேவைப்படும் கிணறுகளின்  எண்ணிக்கைகளும்  அதிகரித்துக்  கொண்டே போகிறன.கிணற்றின் எண்ணிக்கைகளும் , ஆழமும் அதிகரிக்க அதிகரிக்க நீர் ஆதாரம் சுருங்கத் தொடங்கியது..

அடுக்குமாடி குடியிருப்புகள் ,  டி பார்க் என வளர்ந்து வரும் மாநகர விரிவாக்கத்தில் நீர்வழித்தடங்கள் மூடப்பட்டு , வெற்று நிலம்  எல்லாம் குடியிருப்பாக்கப்பட்டன ஆனால்  வீட்டின்நீர்ப் போக்குவரத்துக்கு ஏற்ப கழிவகற்றல் மேலாண்மை , மற்றும்  கழிவகற்றல் குழாய்கள்மேம்படுத்தப்படவில்லைஅவைகளின் தரமும் கவனிக்கப்படவில்லை. .
நீர் வழித்தடம் மட்டுமின்றி குளம்,  குட்டையில்  கூட மண்மேடு செய்து குடியிருப்புகள்உருவக்கப்பட்டனஇதனால் நீர்க்கண்கள் வெளித் தோற்றத்தில் தற்காலிகமாகஅடைக்கப்பட்டனவறட்சி மற்றும் நிலத்தடி நீர் பற்றக்குறை காரணமாக இவ்விடங்களில் பெரிதாக நீர் ஊறவில்லைஆனால் உலக வெப்பமயமாக்கல்,  சுற்று சூழல் மாசு காரணமாகபருவ மழை பொய்த்துவிடும் இனி மேல் காற்றழுத்தத்  தாழ்வு மணடலம்புயல் போன்றசூழ்நிலைகளில் தான் ,கன்மழை பொழியும் என்ற சூழ் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

சென்னைசென்னை புறநகர் பகுதிகளில் ஒரு காலத்தில்  நானூறுக்கும்  மேற்பட்ட ஏரிகள்இருந்தனÕ,  அவை அனைத்தும் கால்வாய்களால்  இணைக்கப்பட்டிருந்தன.  இன்றுசென்னையில் ஏரிகளைக் காணவில்லைஅவற்றோடு இணைந்திருந்த  கால்வாய்களும்காணாமல் போய் விட்டனநீர் நிலைகளின் கரைகளில் தொடங்கி பின் அந்த ஊர்முழுவதையும்  ஆக்கிரமித்த கட்டடங்கள்  நிலை கொண்ட பின் புதிது புதிதாகத் தோன்றியிருக்கும் நகர்களில்  சுமார் பாதி அளவு , நீர்நிலைகளை தூர்த்து உருவாக்கப்பட்டவைஎன்பதே உண்மைபுதிய குடியிருப்புக்களின் அனுமதிக்கு  நிரிவாகங்களும்  உடந்தை என்பதேஉண்மை.
மற்றத் தேவைகளுக்காக  முதல் முதலாக நீர்நிலைகள்  ஆக்கிரமிக்கப்பட்டனஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்தில்தான் . குறிப்பாக  ரயில் பாதைமூலம்  முக்கியநகரங்களை இணைப்பதற்காக ஏரிகுளம் என நீர்நிலைகளின் நடுவே ரயில்பாதை அமைக்கப்பட்டனஅதனால் நீர்நிலைகள் இரண்டாக பிரிந்தனஆனால் வெள்ளைக்காரர்கள்.நீர்நிலைகளை அழித்து விடக்கூடாது என்பதற்காகபிரிந்த  கால்வாய்களின் இரண்டு பக்கத்தொடர்பை தொடுத்து  சிறு பாலங்கள் வைத்தனர்.

ஆனால் பின்னர் வந்த நகர் வளர்ச்சி , சுய நல   நோக்கில்  இலாபம் ஒன்றே குறியாகக் கொண்டுஉருவாக்கப்பட்டவை.அவை கட்டடங்களை விற்கக் காட்டிய தற்காலிக ஆர்வத்தைஎதிர்காலத்தின் நிரந்தரத்  தேவையில் காட்ட வில்லை முன்பு நகர விரிவாக்கத் திட்டத்தின்கீழ்  அரசு ஆதரவுடன் 1970 களில் முதல் முதலாக அண்ணா நகர் , அசோக் நகர்கே கே நகர்ஆகியவை தொடங்கப்பட்ட போது சரியான நகர் திட்டமிடல்நீர்கழிவு நிர்வாகங்கள்ஆகியவை பின்பற்றப்பட்டனஆனால் பின்னர் வந்த தனியார் வீடு வசதிகள் நகர் திட்டமிடல்தேவைகளைப் புறக்கணித்ததது..
சிங்காரச் சென்னையின் தேம்ஸ் நதி  எனப்படும் கூவம் , சென்னைக்குள் நுழையும் வரைசுத்தமான ஆறு.  சென்னைக்குள் வந்த பிறகு கழிவுகளையும்குப்பைகளையும் சேர்த்து கூவம்என்றாலே கேவலமாகப் பார்க்கச்  செய்யும்.

சென்னையில் பாயும் அடையாறும் ஆக்கிரமிப்புகளில் காணாமல் போய் கால்வாயாக மாறிக்கொண்டிருக்கிறதுஇந்த பட்டியலில் பக்கிங்காம்ஓட்டேரிவிருகம்பாக்கம்மாம்பலம்  உட்படசுமார் இருபது  கால்வாய்களும் இடம் பிடித்துள்ளனஇப்படி இயற்கையாக அமைந்தகால்வாய்கள் இல்லாமல் போவதால் மழைக்காலங்களில் சென்னை மிதக்கிறது.சென்னையில் சுமார் 98 சதவீத  நீளத்திற்கு ஆறுகளும்கால்வாய்களும் ஆக்கிரமிப்புசெய்யப்பட்டுள்ளனசென்னை மாநகரில் 2,847 கிமீ நீளத்துக்கு சாலைகள் உள்ள நிலையில்,மழைநீர் கால்வாய்கள் 855கிமீ மட்டுமே உள்ளன.

                பக்கிங்காம் கால்வாய் , வடபெண்ணை ஆறு  பாயும் நெல்லூரில் இருந்துதென்பெண்ணை  ஆறு  பாயும் கடலூர் வரைசென்னை வழியாக கடற்கரையில் இருந்து ஓரிருகிலோ மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டதுபெருமழை,புயல் கடல் கொந்தளிப்பு போன்றபேரிடர் காலங்களில் வெளியேறும் தண்ணீர்  பாதிப்பை  தடுக்கவும்மழைநீர் வடிகாலாகவும்,நீர் வழி போக்குவரத்துக்காகவும் அமைக்கப்பட்டுதுதான் பக்கிங்காம் கால்வாய்ஆனால்புதிதாக உருவாக்கப் பட்ட பறக்கும் ரயிலால் இந்த பக்கிங்காம் கால்வாய் உடபட பலகால்வாய்கள் பாதிக்கப்பட்டுள்ளன.என்பது துயராகும்
அரசு 1980களின்  இறுதியில் பறக்கும் ரயில் திட்டத்தை தொடங்கியதுமொத்தமாக 19 கிமீ நீளம் கொண்ட பறக்கும் ரயில் மார்க்கத்தில் பூங்கா நகரில் இருந்து திருவான்மியூர் வரை 12 கிமீதூரம் பக்கிங்காம் கால்வாய் தூர்க்கப்பட்டே அமைக்கப்பட்டுள்ளதுஅதனால் வடசென்னையில் அகண்ட கால்வாயாக இருக்கும் பக்கிங்காம் கால்வாய்தென்சென்னையில்ஆடு தாண்டும் கால்வாயாக சுருங்கிப்போய் கிடக்கிறதுமழைக்காலங்களில் சென்னைவெள்ளக்காடாய் மாற இதுவும் ஒரு காரணம்.

இவை தவிர வேறு போக்குவரத்து வசதிகள் , பாலங்கள் கட்டுமாணம்ரயில் போக்குவரத்து,நெடுஞ்சாலை விரிவாக்கம் என இன்ன பிற காரணங்களும் நீர்நிலை மற்றும் வழித்தடங்கள்அடை படுவதற்கு காரணமாக உள்ளன.

.நீர்நிலைகளில் பெரியதான கடல் கூட இந்த ஆக்கிரமிப்பு அவலத்தில் இருந்து தப்பவில்லை.சமீபத்தில்  பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனம் தனியயார் ஒருவரிடம்இருந்து  சுமார் 120 ஏக்கர் நிலத்தை வாங்கியது . வாங்கியவர்கள் நிலத்தை பார்க்கப்போனபோதுஅதிர்ந்து விட்டனர்காரணம் சுமார் 80 ஏக்கர் நிலம் கடலில் இருந்துள்ளதுகிழக்கு கடற்கரைமுழுவதும் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை காலியாக இருந்தனஇப்போது பங்களாக்களும்,பண்ணை வீடுகளும் இருக்கின்றனஇவர்களுக்கு யார் விற்றதுஎப்படி பட்டா கிடைத்ததுஎன்பது கேள்விக்குறி.

கடந்த நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்துள்ள மழை நகரை முழுமையாகப்நிலைகுலையச் செய்துள்ளது சராசரியாக ஆண்டொன்றுக்கு கிடைக்கும் மழையின்அளவைவிட மூன்று மடங்கான மழை இப்போது பெய்துள்ளது.

இயற்கை நீர்நிலைகளும்வடிகால்களும் முறையாக பராமரிக்கப்படாத காரணத்தினாலேயே சென்னை இப்படியான வரலாறு காணாத நெருக்கடியை சந்தித்து உள்ளது  என செண்டர் ஃபார்சயன்ஸ் அண்ட் என்விரோன்மெண்ட் அமைப்பின் தலைமை இயக்குநர் சுனிதா நரெயின்வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார் .
நில ஆக்கிரமிப்பும்இயற்கை நீர்க்கண்களை அடைத்ததும்நீர்வழிகளில் குறுக்கீடும்சரியானகழிவு நீர் நிர்வாகம் இன்மையும் நீர் வளங்களின்  நிலத்தடி , நில மேல் இணைப்புக்கள்துண்டிக்கப்பட்டதுமே சென்னையின் இன்றைய பேரிடர் மற்றும் அவலத்துக்குகாரணமாகும்.அரசு நிர்வாகங்களை  வாயடைக்கலாம் ஆனால் இயற்கையை மீற முடியுமா?அதனால் தான் இயற்கை பிடுங்கப்பட்ட  தன் இடங்களைத்  தானே தேடி எடுத்துக் கொண்டது

No comments: