மலரும் முகம் பார்க்கும் காலம் 16 - தொடர் கவிதை

.

கவிதை 16  எழுதியவர்: இளைய அப்துல்லாஹ் (எம்என்எம்.அனஸ்,கனடா)
கவிதையை எழுதியவர் ஊடகவியலாளரும், படைப்பாளியுமான திரு.இளைய அப்துல்லாஹ் அவர்கள்(எம்என் அனஸ்,தீபம் தொலைக்காட்சியின்; முன்னாள் செய்தி வாசிப்பாளர் ஊடகவியலாளர்,  ஐபிசி தொலைக்காட்;சியின் செய்தி வாசிப்பாளரும் ஊடகவியலாளரும்)

மலரும் முகம் பார்க்கும் காலம்

கன்னங்கள் வெட்கத்தில் சிவந்திருக்கும்.
அது ரசனையின் காலம் பூக்களின் ஓவியத்தை நானாகவே
ரசிக்கத்தொடங்கினேன். ஒற்றை உணர்வு
எனக்கு மட்டுமே தோன்றிடும் ஒன்றா?

பரந்த கிளை மரம்போல அவள் படர்ந்த
பார்வை வாசம் நிறம் எல்லாமே தோன்றின.
எப்போதும் உணர்வுதானே எசமான்.
பிடிபடாத நீர்த்தோற்றத்தில் ஒரு கவிதை பிறந்தது.



அது அவளுக்கானதுதான் கருக்கல் பொழுதில்
வருகின்ற எல்லாம் அவளை ஒத்ததுதான்.
மலரும் முகம்பார்க்கும் காலம் அதுவேதானோ
வசந்த பொழுதில் அவளோடு கரம் பற்ற இன்னும் பிடிக்கிறது.

நான் சுமந்த நினைவுகள் ஊரும் திசை கோலாகலம்.
எங்களுர் வண்ணத்துப்பூச்சியை அவள் ஒத்திருந்தாள்.
ஒற்றை கார்த்திகை மலரை அவள் சு10டியிருந்தாள்.
கண் மூடி தூங்கும் போதும் அவள் தருணங்கள் மேகமாய்...

இன்னும் எனக்கு புலப்படாத ஒன்று அவளின் மூக்குத்தியின் நிறம்.
தேன் சிட்டின் சிறகசைவில் உதிரும் பனித்துளியென
மகரந்தம் சேர்க்கும் பூ வனத்தின் தேவதை அவள்.
அவளுக்காய் காத்திருக்கிறது மனம்.

No comments: