.
நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று சட்டசபையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் அறிவித் துள்ளார்.
சிவாஜியின் 87-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படும் இவ் வேளையில் அவரது ரசிகர்கள் அனைவருக்கும் இது தித்திக்கும் செய்தி!
ஒருநாள் எனக்கு சிவாஜி வீட்டில் இருந்து அழைப்பு வந்தது. என்னை அவர் அருகில் உட்கார சொன்னவர், “ என்டிடிவி என்னைப் பேட்டி காணப் போகி றது. அவர்கள் ஆங்கிலத்தில் கேள்வி கேட்க, நான் தமிழில் பதில் சொல்லப் போகிறேன்” என்றார். “உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமே பின் ஏன் தமிழில்?” என்றேன். “அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நான் சரியான பதில் தர விரும்புகிறேன். அதற்கு என் தாய்மொழிதான் சிறந்தது. உனக்குத்தான் ஆங்கிலமும் தமி ழும் தெரியுமே, நான் சரியாக பதில் சொல்கிறேனா… என்று நீதான் பார்க்கவேண்டும்” என்றார். கச்சித மாக இருந்தன அவரது பதில்கள்.
கற்பனையில்
ஒரு கதாபாத் திரத்தை உள்வாங்கிக் கொண்டு, அதை இயக்குநர் விரும்பும் வகையில் நடிப்பது எவ்வளவு பெரிய விஷயம்! இதை அவரிடமே ஒருமுறை கேட்டேன். அப்போது அந்த அறையில் நானும் அவரும் மட்டுமே இருந்தோம். உடனேயே ஒரு கதாபாத்திரத்தை சொல்லி, அந்தப் பாத்திரம் ஒரு குறிப்பிட்ட காட்சியில் எப்படி நடிக்கும் என்று எனக்கு நடித்துக் காட்டினார். அவரது விஸ்வரூப தரிசனத்தை அங்கே நேரில் பார்த்தேன்... ரசித்தேன்... பிரமித்தேன். தான் ஒரு உலகப் புகழ்பெற்ற கலைஞன் என்பதையெல்லாம் மறந்துவிட்டு என்னை மதித்து எனக்காக மட்டுமே நடித்து காண்பித்தார்.
ஒருமுறை
ஒரு இயக்குநர் சிவாஜியின் ஒரு பக்க (side - profile) முகத் தைப் படம் பிடிக்க விரும்பினர். படப்பிடிப்புத் தளத்துக்குள் நுழைந்த சிவாஜி. கேமரா எங்கு வைக்கப்பட்டுள்ளது என்று பார்த் தார். பின் இயக்குநரை அழைத்து காட்சியைப் பற்றிக் கேட்டறிந்தார். பின் இயக்குநரிடம் கேமராவை எதிர்பக்கமாக வைக்கச் சொன் னார். “நீங்கள் விரும்பும் சைடு புரோஃபைலும் கிடைக்கும். எனக் குக் கொடுக்கப்பட்ட வசனத்தில் முக்கியமான பகுதியை கேமரா வைப் பார்த்துச் சொன்னால் இன் னும் பவர்ஃபுல்லாக இருக்கும்” என்றார்.
அதுமட்டுமல்லாமல் அவரது வலது பக்க முகத்தை விட, இடது பக்க முகம் சரியாக இருக்கும் என்றும் சொன்னார்.
ஆனால், இந்த மாதிரி ஆலோ சனைகளை எல்லோரிடமும் இவர் சொல்ல மாட்டார். பெரிய இயக்குநர்களான ஏ.பி.நாகராஜன், பீம்சிங் போன்றவர் களின் படங்களில் நடிக்கும்போது, அவர்கள் கையில் இவர் ஒரு பொம் மையைப் போல், அவர்கள் சொல் வதை செய்துவிட்டு வந்துவிடுவார்.
நடிகர் திலகத்தின் நினைவாற் றல் அபாரமானது. ‘வியட்நாம் வீடு’ கதையை மேடை நாடகமாக போட முடிவு செய்து தேதியும் அறி வித்துவிட்டார். நாளை மறுநாள் நாடகம் நடக்க வேண்டும். தொடர்ந்து சிவாஜிக்குப் படப் பிடிப்பு.
அதனால் படப்பிடிப்புத் தளத் துக்கே வந்து நாடக வசனத்தை நாடக கதாசிரியர் சுந்தரம் (இவர் பின்னாளில் ‘வியட்நாம் வீடு சுந்தரம்' என்றழைக்கப்பட்டார்) சிவாஜிக்கு படித்துக் காட்டுவது என்று முடிவானது.
படப்பிடிப்புக்கு இடை யிடையே சுந்தரம் நாடக ஸ்கிரிப்டைப் படிக்கப் படிக்க அதனை சிவாஜி உள்வாங்கிக் கொண்டார்.
‘வியட்நாம் வீடு’ நாடகத்தில் ‘பிரிஸ்டீஜ் பத்மநாபன்’ஆகவே மாறியிருந்தார் சிவாஜி. எப்படி இவரால் ஒரு நாளைக்குள் அவ் வளவு வசனத்தையும் மனப்பாடம் செய்ய முடிந்தது என்று வியந்து போனார்கள் அந்தக் குழுவினர்.
Keywords: சிவாஜிகணேசன் 87-வது பிறந்த நாள், தாய்மொழி, பதில் சொல்லவே விரும்புகிறேன், படப்பிடிப்புத் தளம்
No comments:
Post a Comment