சிவலோஜினி சிவராமன் அவர்களின் பரத நாட்டிய அரங்கேற்றம். -அல்லமதேவன்

.

மெல்பேண் மக்களை வியக்க வைத்த செல்வி.சிவலோஜினி சிவராமன் அவர்களின் அற்புதமான பரத நாட்டிய அரங்கேற்றம்.
மெல்பேண் Ringwood George wood Performing Arts Centre மண்டபத்தில் கடந்த 12.09.2015 சனிக்கிழமை கலாஞ்சலி நடனப்பள்ளியின் ஸ்தாபகரும் நடன ஆசிரியையுமான ஸ்ரீமதி.ரேணுகா ஆறுமுகசாமி அவர்களின் மாணவி செல்வி.சிவலோஜினி சிவராமன் அவர்களின் பரத நாட்டிய அரங்கேற்றம் மண்டபம் நிறைந்த பார்வையாளப் பெருமக்கள் முன்னிலையில, சிறப்பாக நிறைவேறியது.
இனிய இளவேனிற் காலத்தின் மாலைப் பொழுது கலாஞ்சலி நடனப் பள்ளி மாணவிகளும், மற்றும் திரு.திருமதி.சிவராமன் குடும்பத்தினரும் தமிழர் தம் பாரம்பரிய முறைப்படி அனைவரையும் வரவேற்றுக் கொண்டிருந்தனர். அரங்கத்தின் அமைப்பு, பின்புறத்தை அலங்கரித்த திரை அமைப்பு என யாவுமே மக்கள் மனதைக் கவர்ந்தவையாக இருந்ததைப் பார்க்கக் கூடியதாக இருந்தது. இந்து மதப்பூசை நடைபெற்ற பின் சிவலோஜினி மாதா,  பிதா, குரு,தெய்வம் ஆகியோரின் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.


அரங்கம் நிறைந்த பார்வையாளர்களின் கரகோஷத்தின் மத்தியில் அமிர்தவர்ஷினி இராகத்தில் அமைந்த அழகிய புஷ்ப்பாஞ்சலி நடனத்தின் மூலம் குருää இசைக் கலைஞர்கள்ää பார்வையாளர்களுக்கு தனது வணக்கத்தைத் தெரிவித்ததுடன்ää தொடர்ந்து சகல விக்கினங்களையும் தீர்க்கும் நர்த்தன விநாயகப் பெருமானை வணங்கி சாருகேசி இராகத்தில் அமைந்த கணேஷதுதி நடனத்தை தனக்கே உரித்தானää அங்க அசைவுகள்ää அபிநயத் தோற்றங்கள் என்று தனித்துவமான திறமைகளைக் காண்பிக்கும் வண்ணம் அரங்கத்தினைச் சுற்றி வலம் வந்து நர்த்தன சொரூபியாக மிளிரக்கண்டேன்.
ஆதிதாளத்தில் பவானி இராகத்தில் அமைந்த சு10ர்ய கவித்துவம் என்னும் நடனம் அகில உலகங்களுக்கெல்லாம் அதிபதியான சு10ரிய தேவனை நோக்கிய நடனம். ஆடற்கலை பக்திபூர்வமானது. இறைவனால் அருளப்பட்டதனால் பரதக்கலை ஒரு தெய்வீகக்கலை என்ற பெருமைக்குரியது. அந்த நடனத்தை சிவலோஜினி அவர்கள் பக்திப்பரவசத்துடன் உள்ளத்தாலும், உணர்வுபூர்வமாகவும் நடனமாடியிருந்தார்.    


ஜதீஸ்வரம் என்ற நடனம் நளினகாந்தி இராகத்தில் ரூபக தாளத்தில் அமைந்திருந்தது. பாவம், இராகம், தாளம் என்ற மூன்றினதும் கோர்வையாகும். எம் மனதிற்கும்ää கண்களுக்கும் ஒருங்கே மகிழ்வூட்டும் பேரின்பம் அளிக்கவல்ல கலைப்படைப்பு. சிவலோஜினி சற்றும் சளைக்காமலும்ää களைக்காமலும் ஜதிக்கோர்வைகளுக்கு ஏற்ப தனது நடனத்தை வெளிப்படுத்தி நிற்கும் போது மண்டபம் நிறைந்த கரகோஷத்தினைப் பெற்றுக் கொண்டார்.  
வர்ணம் ஆபேரி இராகம் ஆதி தாளத்தில் அமைந்திருந்தது. இது ஒரு கடினமான பகுதி என்று இருந்தாலும் சிவ்லோஜினியின் பரத நாட்டியக் கல்வியின் அனுபவம் மதிநுட்பம் இரண்டினாலும் தனது பரதக்கலையின் முழுமையான வெளிப்பாடுகளை செவ்வனே எடுத்து வந்தமையைப் பார்க்கக்கூடியதாக இருந்தது. கண்களையும், மனங்களையும் குளிர வைத்த பின்னர் ஒரு இடைவேளை வேண்டும் தானே. அதனால் வாய்க்கு ருசியான சுவை கொண்ட, வயிற்றுப் பசியாறு சிற்றுண்டிப் பண்டங்களும், பானங்களும் வழங்கப்பட்டன.
பரத நாட்டிய நிகழ்வின் பிரதம விருந்தினராக சிடனியிலிருந்து வருகை தந்த பிரபல நடன ஆசிரியை ஸ்ரீமதி.அனுஷா த்ர்மராஜா அவர்கள் தனது உரையில் முக்கியமாக சிவலோஜினி சிவராமன் அவர்களின் நடன நுணுக்கங்கள், கலையில் இருக்கும் அர்ப்பணிப்பான ஈடுபாடு, அற்புதமான பங்களிப்புக்கள் ஆகியவற்றை எடுத்துக் கூறி, இது ஒரு முதற்படி எனவே இன்னும் பல சாதனைகளைப் படைக்க வேண்டும் என வாழ்த்தினார். மேலும் கலாஷேத்திரா நடனப்பள்ளியில் தன்னுடன் கல்வி கற்ற ஸ்ரீமதி.ரேணுகா ஆறுமுகசாமி அவர்கள் பரதக்கலையை தெளிவுறக்கற்று மெல்பேணில் கலாஞ்சலி நடனப்பள்ளியை ஆரம்பித்து அதன் மூலம் நடனக்கலையைக் கற்பித்து வருவதைப் பாராட்டியிருந்தார்.
பரதக்கலையின் முக்கியமான சிறப்பான பகுதிகளை அவ்வப்போது செவ்வனே அமைத்திருந்தார். அந்த வகையில் சிதம்பரத்தில் வீற்றிருக்கும் எல்லாம் வல்ல எம்பெருமான் நடனக்கலையின் மூலகர்த்தா சிவனைப் போற்றி தாண்டவம் ஆடுகின்றேன் ஈசன் என்ற பாடல் ரேவதி இராகம் ஆதி தாளத்தில் அமைந்திருந்தது. சிவலோஜினி தனது முகபாவங்கள்ää உடல் அசைவுகள்ää சலங்கை ஒலிகள் யாவுமே அந்த அழகிய நடனத்திற்கு ஏற்ப அணி சேர்த்தவையாக இருந்தன. பதம் என்ற பிரிவில் குயில் குக்கூ என்று கூவி அழைப்பதை முக்கிய ஜதிக்கோர்வையாகக் கொண்டு புல்லாங்குழல் இசையின் உதவியோடு அற்புதமாக அமைந்த பாடல் குயிலே என்று ஆரம்பிக்கும் பாடலின் நடனம் மிகவும் மெச்சத்தக்கவகையில் இருந்ததைப் பார்த்தேன். அதே போன்று தமிழ்க் கடவுளான முருகப் பெருமானை நோக்கிய காவடிச் சிந்து புள்ளிக்கலாப மயிலே என்ற பாடல் மூலம் இப்படியும் என்னால் நடனத் தோற்றங்களையும், பரதக்கலையின் நுட்பங்களையும் எடுத்து வர முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியிருந்தார்.


தில்லானா மற்றும் மங்களம் ஆடும் போது சிவலோஜினி தனது சகல வகையான நடன அமைப்புக்களையும் கோர்வையாகக் கொண்டு தனது முழுமையான திறமைகளையும் வெளிக்கொண்டு வரும் போது பார்வையாளர்கள் அனைவரும் ஆடற்கலையின் அற்புதமான கலை அம்சங்களைக் கண்டு தொடர்ச்சியான கரகோஷம் மூலம் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்ததைப் பார்த்து மனம் மகிழ்ந்தேன்.
ஒரு நடன அரங்கேற்றத்தை மெருகேற்றுவதில் ஆள் பாதி ஆடை பாதி என்று சொல்வதைப் போல் சிவலோஜினியின் அழகு ஒரு புறம், பலவர்ணங்கள் கொண்ட நடனத்தாரகையின் ஆடை அமைப்புக்கள் மறுபுறம் என்று யாவுமே சிறப்பாகவும், அழகாகவும் அமைந்திருந்தது.
பக்க வாத்திய இசைக் கலைஞர்களைப் பற்றி முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். நட்டுவாங்கத்தில் கலைஞன் சதீபன் இளங்குமரன், மிருதங்கத்தில் கலைஞன் நந்தேஷ் சிவராஜா, புல்லாங்குழல் இசைக்கலைஞன் கானவிநோதன் ரத்தினம், வயலின் இசைக் கலைஞர் பைரவி இராமன், வாய்ப்பாட்டு ஸ்ரீ அகிலன் சிவானந்தன், ஸ்ரீமதி.ரேணுகா ஆறுமுகசாமி ஆகியோர் வழங்கியிருந்தனர். இதில் ஒரு சிறப்பு யாதெனில் அநேகமான இளம் இசைக் கலைஞர்களின் பங்களிப்போடு இந்ந நிகழ்ச்சியை ஒழுங்கமைத்திருந்தமை மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருந்தது என்பதோடு மட்டுமல்லாமல் எதிர்காலச் சந்ததியை ஊக்குவித்து களம் அமைக்கும் காலம் வந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
நடனத்தாரகை சிவலோஜினி சிவராமன் தனது சிறு வயது முதலே தமிழ் மொழி, சங்கீதம், வயலின் போன்று மற்றும் கலைகள் என்று அனைத்திலும் வல்லமை படைத்தவளாகவே வளர்ந்து வருவதைக் கண்கூடாகப் பார்க்;கின்றேன். விளையும் பயிரை முளையிலே தெரியும் என்பது போல அனைத்து விடயங்களிலும் அவரின் ஆளுமையைக் கண்டு வியந்துள்ளேன். இந்த அரங்கேற்றம் சிவலோஜினிக்கு ஒரு முதற்படி போன்று ஒரு மைல் கல்லாக அமைந்குள்ளது. புலம் பெயர் சமுதாயத்தில் நற்பெயரும் புகழும் பெற்று, உன்னதமாகத் திகழ்கின்ற பரதக்கலையில் மென்மேலும் வளர்ச்சிகள் பலவற்றைக் கண்டு சிறந்து விளங்க வேண்டுமென மனதார வாழ்த்துகின்றேன்.  
நவரத்தினம் அல்லமதேவன். மெல்பேண். அவுஸ்திரேலியா.

No comments: