தமிழே……….. அழகே…… …திருமலை மூர்த்தி

.

தென்னையதன் ஓலைக் கீற்றுத்
திரையூடு முழு நிலவு

தெரிவதைக் காணும் போதும்


திரைகடலின் மீது படும்
நரையொளியி னூடு தோணி
செல்வதைக் காணும் போதும்

சின்ன வயதான தொரு

     மென் மதலை மெல்லெனவே
           சிரித்துவிளை யாடும் போதும்சிறுகுருவிக் கூட்ட மொன்று

     பச்சை வயல் மீதெழுந்து
           சிறகடித்துப் பறக்கும் போதும்

விண்ணுரசும் கோண மலை
     மீதிருந்து காலை ஒளி
           வீசுமெழில் காணும் போதும்

மெல்லிடையைப் பற்றி யவள்
     மேலுதட்டின் தேன் பருகி
           மேனியினைத் தழுவும் போதும்

எண்ணிலாக் கவிதைகள்
     எழுதவும் கூடுமே
           எழுதிடக் கோடி வருமே

என்றாலும்……………………………………………………..


என்றாலும் எங்களது
இன் தமிழின் சுவையதனை
எழுதிடக் கோடி சுகமே.


……………………………………………திருமலை மூர்த்தி


No comments: