.
துருக்கிய கடற்கரைக்கு அப்பால் கவிழ்ந்து படகு 5 சிறுவர்கள் உட்பட 17 குடியேற்றவாசிகள் பலி
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வைகோ கைது
படகில் குண்டு வெடிப்பு : உயிர் தப்பிய மாலைத்தீவு ஜனாதிபதி
தாய்லாந்தைத் தாக்கிய சூறாவளி
மும்பை தொடர் குண்டு வெடிப்பு : 5 பேருக்கு மரண தண்டனை - 7 பேருக்கு ஆயுள் தண்டனை
துருக்கிய கடற்கரைக்கு அப்பால் கவிழ்ந்து படகு 5 சிறுவர்கள் உட்பட 17 குடியேற்றவாசிகள் பலி
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வைகோ கைது
நன்றி வீரகேசரி

28/09/2015 துருக்கிய கடற்கரைக்கு அப்பால் குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற படகொன்று ஞாயிற்றுக்கிழமை கவிழ்ந் ததில் 5 சிறுவர்கள் உட்பட குறைந்தது 17 சிரிய பிரஜைகள் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
துருக்கிய விடுமுறை வாசஸ்தல நகரான பொட்ரமிலிருந்து கிரேக்க லெரொஸ் தீவை நோக்கிப் பயணித்த மரப் படகே இவ்வாறு கவிழ்ந்துள்ளது.கவிழ்ந்த அந்தப் படகில் வெளியேற முடியாது சிக்கிக் கொண்ட குடியேற்றவாசிகளே இந்தப் படகு அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் உயிரிழந்த குடியேற்றவாசிகளின் சடலங்களை துருக்கிய கரையோர காவல் படையினர் மீட்டுள்ளனர்.அந்தப் படகிலிருந்த ஏனைய 20 குடியேற்றவாசிகள் உயிர் தப்பி கடற்கரைக்கு நீந்தி வந்துள்ளனர்.
மேற்படி குடியேற்றவாசிகள் அனைவரும் உயிர் காக்கும் மேலங்கிகளை அணிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இந்த சம்பவத்தில் உயிரிழந்த குடியேற்றவாசிகளின் சடலங்கள் பொட்ரம் நகரிலுள்ள சவச்சாலையொன்றில் அடையாளம் காணப்படுவதற்காக வைக் கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்தி கள் தெரிவிக்கின்றன. நன்றி வீரகேசரி
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வைகோ கைது
28/09/2015 இலங்கை தொடர்பிலான அமெரிக்க தீர்மானத்தை கண்டித்து சென்னையில் வைகோ உள்ளிட்ட 200 ற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
இதன் போது வைகோ உள்ளிட்ட குழுவினர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நன்றி வீரகேசரி
படகில் குண்டு வெடிப்பு : உயிர் தப்பிய மாலைத்தீவு ஜனாதிபதி
28/09/2015 மக்காவில் ஹஜ் யாத்திரையை முடித்து விட்டு இன்று காலை டெல்லியிலிருந்து மாலத்தீவு திரும்பியபோது படகு வெடித்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக மாலைத்தீவு ஜனாதிபதி அப்துல்லா யாமீன் உயிர் தப்பியுள்ளார்.
மேலும், இவ்விபத்தில் காயமடைந்த ஜனாதிபதியின் மனைவி பாத்திமா இப்ராஹிம், டெல்லியில் உள்ள இந்திரா காந்தி நினைவு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்த விசாரிக்கும் புலனாய்வாளர்கள் சம்பவத்துக்கான காரணம் குறித்து இன்னமும் எதுவும் கூறவில்லை என்று டெல்லியில் உள்ள மாலைத்தீவு தலைமை தூதர் தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
தாய்லாந்தைத் தாக்கிய சூறாவளி
29/09/2015 தாய்லாந்தை திங்கட்கிழமை மாலை துஜுவான் சூறாவளி தாக்கியுள்ளது.
இந்த சூறாவளியையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7,000 க்கு மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
மேற்படி சூறாவளியால் அந்நாட்டின் வட பகுதியிலுள்ள பல்லாயிரக்கணக்கான வீடுகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த சூறாவளியில் சிக்கி எவரும் காயமடைந்ததாக இதுவரை அறிக்கையிடப்படவில்லை.
மும்பை தொடர் குண்டு வெடிப்பு : 5 பேருக்கு மரண தண்டனை - 7 பேருக்கு ஆயுள் தண்டனை
30/09/2015 மும்பையில் ரயில்களில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் தொர்பில் கைது செய்யப்பட்ட 12 குற்றவாளிகளில் 5 பேருக்கு மரண தண்டனையும் 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் திகதி இடம்பெற்ற இந்த குண்டு வெடிப்பில் 188 பேர் உயிரிந்ததுடன் 829 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment