ஆசிட்வீச்சு அவலங்கள் - தி. சுவாமிநாதன், நாமக்கல்.

.


உலகம் முழுவதும் பெண்கள் மீது ஆசிட் வீசும் சம்பவங்கள் நடக்கின்றன. கடந்த வருடங்களில் காரைக்கால் வினோதினி, சென்னை வித்யா ஆகியோர் ஆசிட் வீச்சால் கொடூரமாக பாதிக்கப்பட்டு பரிதாபமாக மரணமடைந்தனர். முன்பு பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி, முன்னால் அமைச்சர் மீதும் ஆசிட் வீசப்பட்டது. மனிதாபிமானமற்ற குற்றங்களைச் செய்யும் மனித விலங்குகள், மன நோயாளிகள் சிலர் நம்மிடையே வெளியில் தெரியாமல் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும், ஆசிட் வீச்சு சம்பவங்கள் திரும்ப திரும்ப நிகழ்வது குற்றவாளிகள் குறைந்து விடுவார்கள் என்பதற்கு உத்தரவாதமில்லை என்பதையுமே காட்டுகிறது. தான் ஆசையாய் காதலித்த பெண்ணின் மீதே ஆசிட் வீசி துடிக்க துடிக்க அவள் முகத்தை சிதைப்பது, அழிப்பது என்ன வகையான காதலென்று தெரியவில்லை. சமீப காலங்களில் பெண்கள் சந்தித்து வரும் இன்னல்களில் முக்கியமானதாக ஆசிட் வீச்சு கருதப்படுகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சற்றும் குறைந்தபாடில்லை. படுபாதக வன்முறையில் ஈடுபடும் கொடூர உள்ளங்கொண்ட வஞ்சகர்கள் களை எடுக்கப்பட வேண்டும். சட்டத்திற்கு, நீதிமன்றத்திற்கு காவல்துறைக்கு அஞ்சாமல் பெண்ணினத்தை காலில் போட்டு மிதிப்பவர்களை தண்டிக்க சட்டங்கள் மட்டும் போதுமானதாக இருப்பதில்லை. அதிகச் சட்டங்கள் மட்டும் குற்றங்களை குறைத்து விடும் என்பதும் நடைமுறையில் உண்மையாக இருப்பதில்லை. தண்டனை  பற்றிய அச்சமே இல்லாமல் தாக்குதல்கள் நடக்கின்றன.


நாடு 2009-ம் ஆண்டில் பதிவான ஆசிட் வீச்சு சம்பவங்களின் எண்ணிக்கை
பங்களாதேஷ்; 116
கம்போடியா 28
இந்தியா 24
நைட்ரிக் ஆசிட், சல்பியூரிக் ஆசிட், ஹைட்ரோ குளோரிக் ஆசிட் எல்லாம் பெண்களை வெறுக்கும், பழிவாங்கத் துடிக்கும் நபர்களின் இன்றைய நவீன ஆயுதமாக உள்ளது. ஒரே நொடியில் ஒரு பெண்ணின் வாழ்க்கை அழிக்கப்படுகிறது. இது பழிவாங்கும் எண்ணத்தின் உச்சக் கட்டம். கோழைத்தனமான குற்றம்.
ஆசிட் வீச்சிற்கு காரணங்கள்:
திருமணம் செய்து கொள்ள சம்மதிக்க மறுப்பது, தன்னைக் காதலித்து விட்டு வேறு நபரை மணக்க முயலும் போது, ஒரு தலைகாதல், பலாத்காரத்திற்கு உடன்பட மறுக்கும் பெண் மீதான கோபம்,காதலை ஏற்க மறுப்பது, பிரிந்துவிட்ட காதலிக்கு பாடம் புகட்ட, நடத்தையில் சந்தேகம்,,பணம் தொடர்பான பிரச்சினை, தனக்கு கிடைக்காத காதலி யாருக்கும் கிடைக்கக் கூடாது. அழகிய முக தோற்றத்தை சிதைக்க வேண்டும் போன்றவையே காரணமாக உள்ளது.


தன் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்காக அந்தப் பெண்ணை வேறு யாரும் காதலித்து விடக் கூடாது. அப்பெண்கள் வாழ்க்கை முழுவதும் தங்களை நிராகரித்து விட்டதற்காக கஷ்டத்தை அனுபவிக்க வேண்டும் என துடிக்கிறார்கள். கோபத்தில் பெண்ணின் முகத்தை சிதைக்க முடிந்தவர்களால் அவளது மனதை என்றுமே மாற்ற முடிவதில்லை.
ஒரு பாட்டில்; ஹைட்ரோ குளோரிக் ஆசிட்டின் விலை வெறும் 25 ரூபாய் மட்டுமே. ஆசிட் ஆயுதம் போல தெரியாது. தண்ணீர் பாட்டில் போல எளிதாக எடுத்துச் செல்ல முடிகிறது. எளிதாக வாங்க முடிகிறது. எளிதாக மறைத்து வைக்க முடிகிறது. எளிதாக வீச முடிகிறது. ஆசிட் வீசும்போது சத்தம் ஏற்படுவதில்லை. தனக்கு என்ன நேர்ந்தது என்பதை சம்பந்தபட்டவர் உடனடியாக உணர முடிவதில்லை. சுடுதண்ணீர்ää வீசப்பட்டதாகவே முதலில் நினைக்கிறார்கள். எரிச்சல் அதிகரிக்கும் போதுதான் உணர முடிகிறது. எளிதில் வீசிவிட்டு குற்றவாளியால் தப்பித்துவிட முடிகிறது. நிரந்தரமான தழும்பை ஏற்படுத்த வேண்டும் என்பதே முக்கிய காரணமாகும். எந்த பெண்ணின் அழகை இந்த சமுதாயம் மிகச் சிறப்பானதாக கருதுகிறதோ அதை சிதைக்க வேண்டும். அழிக்க வேண்டும் என்ற கொடிய எண்ணம்.
ஆசிட் வீச்சுக்கு பலியானவரின் பரிதாப நிலை:
கண் பார்வை சேதமாகிறது. முகம் முழுவதும் வெந்து விடுகிறது. ஆசிட் வீச்சினால் ஏற்படும் காயம் முற்றிலும் குணமாவதில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியோ மறுவாழ்வோ கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. ஆசிட் வீச்சால் ஏற்படும் இழப்புகள் நிரந்தரமானவை. ஹைட்ரோ குளோரிக் ஆசிட்டை விட கந்தக அமிலமும் நைட்ரிக் ஆசிட்டும்தான் பெரும் தீங்கை விளைவிக்கின்றன. நிரந்தர பாதிப்புää அன்றாட வாழ்விற்கே போராட வேண்டியுள்ளது. மனப்போராட்டங்கள் தொடர்கிறது. முன்போல உலாவ முடிவதில்லை. தன்னைப்பார்ப்பவர்கள் உடனடியாக வெளிப்படுத்தும் அதிர்ச்சியை தொடர்ந்து தாங்கிக் கொண்டு வாழ வேண்டியுள்ளது. படிப்பை, வேலையை தொடர முடிவதில்லை. திருமணம் நடப்பது மிகவும் அபூர்வம். கொலையை விட, பாலியல் பலாத்காரத்தை விடவும் மிக அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. உருவம் சிதைக்கப்படுகிறது. உறுப்புகள் செயல் இழக்கின்றன. நடைப்பிணமாகிறார்கள். சாதனை பெண்களாக வலம் வர வேண்டியவர்கள் கோரத் தாக்குதலால் தங்கள் முகவரியை தொலைத்து கொண்டு இருக்கிறார்கள். ஆசிட் முகத்தை உருக்கி விடுகிறது. குறுகிய கால விளைவாக தாங்க முடியாத உடல் வலி ஏற்படுகிறது. நீண்ட கால பாதிப்புகளாக அகோர முகமாற்றம்ää கடுமையான மன வேதனைக்கு ஆளாகிறார்கள். மாதாந்திர மருத்துவச் செலவுக்கு கணிசமான தொகை செலவிட வேண்டியுள்ளது. ஆசிட் வீச்சு சில நொடிகளில் முகத்தை உடனடியாக சேதப்படுத்துகிறது. முதலில் தண்ணீர் வீசப்பட்டது போல இருக்கும். ஆனால், சில நொடிகளில் எரிச்சல் ஏற்பட்டு வேகமாக அதிகரிக்கும். உடனடியாக குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விட்டால் 90 சதவீதம் பாதிப்பிலிருந்து நிச்சயம் தப்பிக்கலாம். துரதிர்ஷ்டவசமாக சுற்றி நிற்பவர்கள் சமயோசிதமாக செயல்படாமல் விட்டுவிடுகிறார்கள்.
குறி தவறும் பட்சத்தில் சுற்றி இருப்பவர்களும் ஆசிட் வீச்சுக்கு ஆளாகிறார்கள். பாதிக்கப்பட்டவரின் குடும்பம் மருத்துவ செலவுக்கு போதிய நிதி இன்றி தவிக்கிறார்கள். நமது நாட்டில் பிளாஸ்டிக் சர்ஜன்கள் பற்றாக்குறையாகவே உள்ளனர். போதிய மருத்துவ வசதியின்மையால் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில மருத்துவமனைகளில் சேர்க்க இயலாத நிலை உள்ளது. சிகிச்சை செலவுக்கு பல லட்ச ரூபாய்; தேவைப்படுகிறது. போலீஸ் பாதுகாப்பு கிடைப்பதில்லை. இதுவரை பார்த்து வந்த வேலைஃதொழிலை இழந்து கையேந்தும் அவல நிலைக்கு ஆளாகிறார்கள். தலைமுடி பொசுங்கி விடுகிறது. முகரும் சக்தியைää கேட்கும் சக்தியை இழந்து விடுகிறார்கள். குடும்பத்திற்கு சுமையாகிறார்கள்.
ஆசிட் வீசிய குற்றவாளியின் நிலை:
ஆசிட் வீச்சு குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை அல்லது ஆயுள் தண்டனை கிடைக்கும். அபராதம் விதிக்கப்படலாம். பெரும்பாலும் உடனடியாக பிடிபடுகிறார்கள். வழக்கறிஞரை நாடுகிறார்கள். ஜாமீன் பெற முயற்சிப்பர். போதிய சாட்சியம் இல்லாத பட்சத்தில் ஜாமீன் பெற முடிகிறது. வழக்கு விசாரணை பல வருடங்கள் நீடிக்கிறது. தண்டணையும் விதிக்கப்படுகிறது. அப்பீலுக்கு போகின்றனர். நீண்ட காலத்தில் சாட்சி பிறழாமல் இருக்கும்பட்சத்தில் தண்டனை உறுதியாகும். விசாரணை கைதியாக சிறையில் இருந்த காலத்தை சொல்லி விடுதலை பெற முயற்சிப்பர். தீர்;;ப்பு வருமுன்னரே இறந்து போன குற்றவாளிகளும் உள்ளனர். வட மாநிலங்களில் தங்களுக்கு எதிராக வாக்குமூலம் அளிக்கக் கூடாது என பாதிக்கப்பட்டவர்களை மிரட்டும் அவலம் உள்ளது. உடன் பிறந்தவர்களை கடத்தி வைத்துக் கொண்டு, தன் மீது தவறுதலாக ஆசிட் பட்டுவிட்டதாக தெரிவிக்கச் சொல்லி மிரட்டும் நிகழ்வுகளும் உள்ளது. சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முயல்வர். கொலை முயற்சி, பெண் கொடுமை தடுப்பு சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இதுவரை ஆசிட் வீசிய குற்றவாளிகள் அனைவரும் பிடிபட்டே உள்ளனர். வழக்கினை திரும்ப பெறுமாறு சிலர் மிரட்டுகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் மிகுந்த வறுமை நிலையில் இருப்பதால் இவர்களை எதிர்த்து நிற்க முடிவதில்லை. ஆசிட் வீசிய ஆண் சில ஆண்டு தண்டனைக்கு பிறகு மீண்டும் தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டு விட வாய்ப்பு உள்ளது. போதிய சாட்சிகள் இல்லாவிட்டால் விடுதலையாகலாம் என்பதே கசப்பான உண்மை.
தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சட்டவிதிமுறைகள்:
ஆசிட் வீச்சு தொடர்பான வழக்கு விசாரணைகள் 60 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆசிட் விற்பனை முறைப்படுத்தப்பட்டுள்ளது. இழப்பீடு தொகை உயர்த்தப்பட உள்ளது. அடையாள அட்டை மற்றும் உரிய காரணங்கள் இருந்தால் மட்டுமே ஆசிட் பெறமுடியும்.
வர்மாகமிட்டி பரிந்துரைப்படி 5 முதல் 10 ஆண்டுகள் சிறைதண்டனை என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆசிட் வீச்சில் பாதிக்கப்படும் பெண்ணுக்கு உடனடியாக 1 லட்சம் வழங்கப்படும் என பீகார் அரசு அறிவித்துள்ளது. பொது இடங்களில் சிசிடிவி கேமரா அமைக்கப்படுகிறது. ஜாமீனில் வெளிவரவியலாத குற்றமாக கருதப்படுகிறது. ஆசிட் சிறுவர்களுக்கு விற்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், மருத்துவ செலவை அரசே ஏற்க வேண்டும். நிவாரணத்தொகை அதிகரிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. ஐPஊ 326-டீ பிரிவின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கலாம். பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்ள பயிற்சி அளிக்கப்பட வேண்டும். அனுமதியின்றி விற்பனைக்கு ஆசிட் வைத்திருந்தால்  பறிமுதல் செய்யப்படுகிறது, கெமிக்கல் கடைகளுக்கு சீல் வைக்கப்படுகிறது. ஆசிட் வெடி மருந்து சட்டத்தின் கீழ் ஆசிட் தடை செய்யப்பட்ட பொருளாகும். பிளாஸ்டிக் அறுவை சிகிச்கை செய்ய உதவவேண்டும். ஆசிட் பாட்டிலின் பதிவான கைரேகை மற்றும் பாதிக்கப்பட்டவரின் செல்போனில் இருந்த எண்கள் ஆகியவற்றின் அடிப்படையில் விசாரணை நடக்கிறது. ஆசிட் வீச்சை பொறுத்தவரை முதலுதவியே 90 சதவீதம் வீரியத்தைக் குறைக்கும். ஆசிட் வீசப்பட்டவரின் மேல் தண்ணீரை உடனடியாக பாய்ச்ச வேண்டும். வேகமாக செயல்பட்டால் ஆசிட்டின் வீரியத்தை தவிர்க்கலாம். துணிகள் மீது ஆசிட் பட்டு இருந்தால் உடனே அத்துணியை மாற்றி விடுவது நல்லது. சுற்றி இருப்பவர்கள் திறம்பட செயல்பட்டால் பாதிப்பை பெருமளவு குறைக்கலாம். காதலை நிராகரித்தவர்கள் ஆசிட் ப்ரூப் ஆடை அணிந்துதான் வர வேண்டும் போல் உள்ளது. ஆசிட் பாட்டில், எரிந்த துணிகள், சிகிச்சையளித்த மருத்துவரின் சான்றிதழ் ஆகியவை முக்கிய சாட்சியங்களாகும்.

இறுதியாக: பெண்கள் துன்புறுத்தப்படுகிறார்கள், சுரண்டப்படுகிறார்கள்ää கடத்தப்படுகிறார்கள், வன்முறைக்கு, தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள். யாரால், அந்நியர்களால் அல்ல. மிகவும் தெரிந்தவர்களால்தான். ஆனாலும் விழிப்புணர்வு இன்றி அவர்களின் வலையில் தொடர்ந்து வீழ்ந்து வருகிறார்கள். பெண்களுக்கு காதலை மறுக்கும் உரிமை உள்ளது. பெண்ணியம் பாதுகாக்கப்பட வேண்டும். மனித இனத்தி;ல் சரிசம பங்கும் பாத்தியமும் உடையவர்கள். வற்புறுத்துவதால், துன்புறுத்துவதால் காதல் வந்துவிடப் போவதில்லை. அவரவர்; தனிப்பட்ட விருப்பம். சட்டங்கள் கோப்புகளால் இயங்காமல் இதயத்தால் இயங்க வேண்டும். ஆண்களின் மனோபாவம் மாற வேண்டும். முடிவெடுக்கும் உரிமை பெண்களுக்கு உள்ளது.

No comments: