.
தந்தையர்களை விடுதலை செய்யுங்கள்: பிள்ளைகள் ஆர்ப்பாட்டம்
ஒபாமாவை சந்தித்தார் ஜனாதிபதி
ஆயுதங்களுடன் ஐவர் யாழில் கைது
அரசியல் கைதிகளாகவுள்ள தமது தந்தையர்களை விடுதலை செய்யக்கோரி சிறுவர்கள் போராட்டம்
தந்தையர்களை விடுதலை செய்யுங்கள்: பிள்ளைகள் ஆர்ப்பாட்டம்
ஒபாமாவை சந்தித்தார் ஜனாதிபதி
ஆயுதங்களுடன் ஐவர் யாழில் கைது
அரசியல் கைதிகளாகவுள்ள தமது தந்தையர்களை விடுதலை செய்யக்கோரி சிறுவர்கள் போராட்டம்
தந்தையர்களை விடுதலை செய்யுங்கள்: பிள்ளைகள் ஆர்ப்பாட்டம்
ஒபாமாவை சந்தித்தார் ஜனாதிபதி
ஆயுதங்களுடன் ஐவர் யாழில் கைது
அரசியல் கைதிகளாகவுள்ள தமது தந்தையர்களை விடுதலை செய்யக்கோரி சிறுவர்கள் போராட்டம்
தந்தையர்களை விடுதலை செய்யுங்கள்: பிள்ளைகள் ஆர்ப்பாட்டம்
28/09/2015 தமிழ் அரசியல் கைதிகளாக சிறைச்சாலைகளில் விசாரணைகளின்றியும், விடுதலையின்றியும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது தந்தைமார்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி, வவுனியா செட்டிகுளத்தில் சிறுவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
தமது தந்தையர்கள் விடுதலையின்றி சிறைச்சாலைகளில் வாடுவதனால், தமது வாழ்க்கையும் பள்ளிப்படிப்பும் அவர்களின் அரவணைப்பும், பாதுகாப்புமின்றி பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்து, அவர்களை விடுதலை செய்ய ஆவன செய்ய வேண்டும் என புதிய அரசாங்கத்திடம் அவர்கள் கோரியிருக்கின்றனர். நன்றி வீரகேசரி
ஒபாமாவை சந்தித்தார் ஜனாதிபதி
29/09/2015 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை சந்தித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 70 ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் கலந்துகொண்டிருக்கும் அரச தலைவர்களுக்கு நேற்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் மதிய போசன விருந்துபசாரம் வழங்கப்பட்டது.
இதன்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை சந்தித்துள்ளார். நன்றி வீரகேசரி
ஆயுதங்களுடன் ஐவர் யாழில் கைது
29/09/2015 யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் 3 மோட்டார் சைக்கிள்கள், கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் கும்பல் ஒன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொக்குவில் பகுதியில் வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரே மேற்குறிப்பிட்ட ஆயுதங்களுடன் ஐந்து பேரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 18 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும் கொக்குவில்,இணுவில்,தாவடி பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸ் விசாரணையில் இருந்து தெரியவருகின்றது. நன்றி வீரகேசரி
அரசியல் கைதிகளாகவுள்ள தமது தந்தையர்களை விடுதலை செய்யக்கோரி சிறுவர்கள் போராட்டம்
30/09/2015 சிறைச்சாலைகளில் வாடும் அரசியல் கைதிகள் மற்றும் தமது தந்தையர்களை விடுதலை செய்யக்கோரி இன்று புதன்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தின் முன்னாள் சிறுவர்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சா்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வாழ்வின் ஒளியைத் தேடும் சிறுவர்களுக்கான ஒன்றியம் என்ற அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறுவர்களும் தாய்மார்களும் கலந்து கொண்டார்கள்.
இவ் ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த்தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் சிலரும் கலந்துகொண்டனர்.
யாழ் மாவட்ட செயலகத்தின் முன்னாள் பதாதைகளை தாங்கி நின்ற சிறுவர்களும் பெற்றோர்களும் கண்டி வீதி வழியாக சோமசுந்தரம் ஒழுங்கையில் அமைந்துள்ள வட மாகாண முதலமைச்சர் அலுவலகம் சென்று முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனிடம் ஜனாதிபதிக்கு வழங்க மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.
தமது தந்தையர்களை விடுதலை செய்யும் படியும் தாம் தந்தையர்களின் அன்புக்காக ஏங்குவதாகவும் தமது கஷ்டங்களையும் சிறுவர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment