தாயாகவும் குருவாகவும் தன் மகளை பயிற்றுவித்து மேடைக்கு கொண்டுவருகின்றார் ஸ்ரீமதி சந்திரகலா இளங்கோ அவர்கள் . Kalalaya School of Dance and Music பள்ளியின் முதலாவது அரங்கேற்றம். அதுவும் குருவின் மகளே அந்த நடன அரங்கேற்றத்தை செய்கின்றார்.
மண்டப வாசலில் நிறைகுடம் அழகாக தெரிகிறது உறவுகள் எங்களை அன்போடு வரவேற்கின்றனர் .மண்டபத்துள் அமர்கின்றோம். பாஸ்கியின் கைவண்ணத்தில் மேடையில் நடராஜர் நர்த்தனம் புரியும் அழகிய காட்சி. ஓர் கரையில் ஜனகன் சுதந்திரராஜ் மிருதங்கத்துடன் அமர்திருகிறார் தொடர்ந்து குரு ஸ்ரீமதி சந்திரகலா இளங்கோ, பாடகி சாருமதி சிவராமன் ,வயலின் கலைஞர் ஸ்ரீமதி ரஞ்சனி குமாரசாமி, புல்லாங்குழல் கலைஞர் செல்வன் வெங்கடேஷ் ஸ்ரீதரன் , வீணைக் கலைஞர் செல்வி சௌமியா ஸ்ரீதரன் என கலைஞர்கள் குழு அமர்ந்திருக்கின்றார்கள்.
ஆரணன் இளங்கோவும் ஆரபி இளங்கோவும் வந்தவர்களை வரவேற்று நிகழ்வை ஆரம்பித்து வைக்கிறார்கள் . கம்பீர நாட்டை ராகத்தில் ஆதி தளத்துடன் புஸ்பாஞ்சலி தொடங்குகின்றது சபையோரின் கரவோசையின் மத்தியில் நடராஜரையும் குருவையும் இசைக்கலைஞர்களையும் வணங்கி ஆடியவர் நீதிமதி இராகத்தில் அமைந்த கணேசதுதிக்கு அபிநயிக்கிறார்.
தொடர்ந்து அலாரிப்புவும் ராகமாலிகா ராகத்தில் ஜதீஸ்வரமும் இடம்பெறுகின்றது . மிக அருமையாக அமைந்த இசையோடு ஆரண்யா நளினமாக ஆடி சபையோரின் கரகோசத்தை பெறுகின்றார்.
அதைத்தொடர்ந்து அன்னமே அருகினில் வா பாடல் வலஜி ராகத்தில் ஒலிக்க வர்ணம் ஆடலாக தொடர்கிறது. நீண்ட ஆடலுக்குப் பின்பு பிரதம விருந்தினராக வருகை தந்திருந்த சிட்னியின் பிரபல நாட்டிய நர்த்தகி ஸ்ரீமதி ஜெயலஷ்மி கந்தையா அவர்கள் அருமையான கருத்துக்களை எடுத்துரைக்கின்றார்.
இடைவேளைஜை தொடர்ந்து கீர்த்தனம் பதம் என்று நடனம் தொடர்கின்றது ஒவ்வொரு பாடல்களுக்கான ஆடல்களைபற்றி கலா இளங்கோ கூறிக்கொண்டிருக்கிறார் .
அந்த வரிசையில் அடுத்த பாடல் அமரர் இளங்கோ அவர்கள் கடைசி நேரத்தில் சிட்னி முருகனுக்கு எழுதிய செந்தமிழ் கவி ஒன்று என்ற பாடல் ஆனந்த பைரவி ராகத்தில் இடம்பெற போகின்றது என்று கூறும்போது கலா இளங்கோ அவர்களின் குரல் உடைகின்றது சபையினருக்கும் துக்கம் நெஞ்சில் சுமையாக கனக்கிறது . கலா இளங்கோ சுதாகரித்துக்கொண்டு பாடலை ஆரம்பிக்கின்றார்.
ஆரண்யா தன திறமைகளை வெளிக்காட்டி குருவையும் பயின்ற கலூரியையும் பெருமைப் படுத்தியுள்ளார். தொடர்ந்து பரத கலையில் முனேற வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment