தமிழ் சினிமா


ஈட்டிதமிழ் சினிமாவில் விளையாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் வருவது குறைவு தான். அந்த வகையில் விளையாட்டு, காதல் என பொழுதுபோக்கு கலவையோடு அறிமுக இயக்குனர் ரவி அரசின்இயக்கத்தில் அதர்வா, ஸ்ரீதிவ்யா, நரேன், ஜெயப்பிரகாஷ் என பல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் தான் ஈட்டி.
கதை :
உடலில் சிறு காயம் பட்டாலும் ரத்தம் அதிகமாக வெளியேறி பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு வகையான நோயினை பற்றிய தொலைக்காட்சி கலந்துரையாடலுடன் படம் தொடங்குகிறது,
பின்பு அந்த நோயானது தடகள வீரரான அதர்வாவுக்கு சிறுவயது முதலே இருக்கிறது என்பதிலிருந்து கதை நகர தொடங்குகிறது. ஒரு கட்டத்தில் ஒரு தவறான போன் காலில் ஸ்ரீ திவ்யாவுடன் ஏற்படும் நட்பானது காதலாக மாற ஒரு விளையாட்டு போட்டிக்காகவும்,ஸ்ரீதிவ்யாவை சந்திப்பதற்காகவும் தஞ்சாவூரிலிருந்து அதர்வா சென்னைக்கு வருகிறார்.
அப்போது எதிர்பாராத விதமாக வில்லன்களால், ஒரு முன் விரோதத்தின் காரணமாக கொலை செய்ய முயற்சிக்க, யார் என்று தெரியாமல் திவ்யாவின் அண்ணன் திருமுருகனை எதிரிகளிடமிருந்து காப்பாற்ற பின்பு வில்லன்களுக்கும், அதர்வாவுக்கும் இடையே பகை ஆரம்பிக்க, ஒரு கட்டத்தில் அதர்வா கலந்துக்கொள்ளும் போட்டி நெருங்கும் நேரத்தில் வில்லன் RNR மனோகர், அதர்வாவை கொலை செய்ய முயற்சிக்கிறார். பின்பு, எதிரிகளிடமிருந்து எப்படி தப்பித்தார், போட்டியில் வெற்றிபெற்றாரா என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
அதர்வாவின் நடிப்பும், உடல் அமைப்பும் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு பொருந்தியுள்ளது இருந்தாலும் அதர்வா போல் ஒரு முக அமைப்பு உள்ள கதாநாயகன் புது முயற்சியுள்ள நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தால் நிச்சயம் தமிழ் சினிமாவில் ஒரு நல்ல இடத்தை அடைவார் என்பதில் சந்தேகமில்லை, ஸ்ரீ திவ்யாவிற்கு பெரிதாக ஒன்றும் கதாபாத்திரம் இல்லை.
முதல் பாதி சற்று நீளமாக இருந்தாலும் கதை நகர்வது தெரியவில்லை, இரண்டாம் பாதி ஜவ்வு போல் இழுத்து கொண்டே போகிறது.
வில்லனாக வரும் மனோகர் கதாபாத்திரத்திற்கு பொருந்தி நடித்துள்ளார்.
ஆனால் எத்தனை படத்தில் தான் ஒரே மாதிரியான வில்லனாகவே நடிப்பை வெளிப்படுத்துவார் என்று தெரியவில்லை

காவல் துறை உயர் அதிகாரியாக வரும் செல்வாவும் சிறிது நேரம் வந்தாலும் நிறைவு.
அறிமுக இயக்குனரான ரவி தடகள விளையாட்டு என்று கருவை வைத்து கொண்டு அதில் அலுத்து போன பழைய அடிதடி கதையை புகுத்தி கொஞ்சம் பொழுது போக்குடன் நகர்த்தியுள்ளார்.
ஜி.வி. பிரகாஷின் பின்னணி இசை நன்றாக உள்ளது. பாடல்களில்நான் புடிச்ச மொசகுட்டி, குய்யோ முய்யோ ஆகியவை கேட்கும் ரகம்.
ஒளிப்பதிவு மிக யதார்த்தமாகவுள்ளது, குறிப்பாக ஆடுகளத்தில் போட்டிகளை காண்பிப்பதில் நம்மை வெகுவாக ஈர்த்துள்ளார்.
க்ளாப்ஸ்
அதர்வாவின் நடிப்பும், அவரது கதாபாத்திரத்திற்கு கொடுத்த ஈடுபாடு நம்மை கவர்கிறது.
பல்ப்ஸ்
பார்த்து பார்த்து சலித்து போன கிளைமேக்ஸ். இரண்டாம் பாதி இன்னும் கொஞ்சம் வேகமாக நகர்ந்திருக்கலாம், படத்தின் காமெடி எதுவும் ரசிக்கும் படி இல்லை, குறிப்பாக நடிகர்களின் தேர்வு அவர்களுக்கு கொடுத்த கதாபாத்திரமும் மனதில் ஓட்டவில்லை.
மொத்தத்தில் ஈட்டி குறி பார்த்து வீச தடுமாறியுள்ளது.

ரேட்டிங் 2.5/5   நன்றி  cineulagam