கொசோவோ பாராளுமன்றத்தில் கண்ணீர்ப்புகைப் பிரயோகம்
அரபு நாட்டிற்கு கடத்தப்பட்ட 60 பெண்கள் விபசாரத்தில்..!
கனடா உயர்நீதிமன்ற நீதிபதியாக தமிழர்
ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்புடைய கிளர்ச்சியாளர்களால் எதிர்க்குழுவைச் சேர்ந்தவர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றம்
கொசோவோ பாராளுமன்றத்தில் கண்ணீர்ப்புகைப் பிரயோகம்
16/12/2015 கொசோவோ பாராளுமன்றத்தில் எதிர்வரும் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டம் தொடர்பில் இடம்பெற்ற வாக்கெடுப்பைக் குழப்பும் வகையில் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களால் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் செய்யப்பட்டது.
கொசோவோ பாராளுமன்றத்தில் கண் ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்படுவது கடந்த இரு மாத காலப் பகுதியில் இது ஆறாவது தடவையாகும்.
இதன்போது பாராளுமன்றத்துக்கு வெளி யில் கூடியிருந்த எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாராளுமன்றக் கட்டடத்தின் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த கலகத் தடுப்பு பொலிஸாரால் அவர்கள் கலைக்கப்பட்டனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்ட சேர்பியாவுடனான உறவுகளை விருத்தி செய்வதற்கு உதவக்கூடிய உடன்படிக்கையொன்று தொடர்பில் அந்நாட்டு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.
கொசோவோவானது 2008 ஆம் ஆண்டில் சேர்பியாவிடமிருந்து சுயமாக சுதந்திரத்தை பிரகடனப்படுத்திக் கொண்டிருந்தது. நன்றி வீரகேசரி
அரபு நாட்டிற்கு கடத்தப்பட்ட 60 பெண்கள் விபசாரத்தில்..!
17/12/2015 கேரளாவில் உள்ள இணையதளம் ஒன்றின் மூலம் கடந்த ஒரு ஆண்டில் மாத்திரம் விபசாரத்திற்காக 60 பெண்களை பக்ரைன் நாட்டிற்கு கடத்தியதாக அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த பெண்கள் குடியேற்ற அதிகாரிகளின் உடந்தையுடனே நாடு கடத்தப்பட்டுள்ளன.
தம்மிடம் நல்ல வேலை ஒன்று இருப்பதாகவும் கவர்ச்சிகரமான சம்பளம் கிடைக்குமெனவும் ஆசை வார்த்தைகள் கூறி இந்த பெண்கள் அரபு நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
தற்போது இந்த பெண்கள் பக்ரைனில் முக்கிய குற்றவாளியான முஜீப் மற்றும் முகமது பஷீர் ஆகியோரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அந்நாட்டு பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இணையதளம் மூலம் விபசாரம் நடத்தி வந்த அன்பு முத்தம் (கிஸ் ஆப் லவ்) பிரச்சார ஒருங்கிணைப்பாளர் ராகுல் பசுபாலன், அவரது மனைவியும், மொடல் அழகியுமான ரேஷ்மி நாயர் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டதையடுத்தே இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். நன்றி வீரகேசரி
கனடா உயர்நீதிமன்ற நீதிபதியாக தமிழர்
18/12/2015 கனடா நாட்டின் பிரிட்டிஸ் கொலம்பியா மாநிலத்தின் உயர்நீதிமன்ற நீதிபதியாக தமிழகத்தை சேர்ந்த வள்ளியம்மை நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் காரைக்குடி முன்னாள் தலைவர் அருணாச்சலம் செட்டியார்-சிகப்பி ஆச்சி ஆகியோரின் மகன் காந்தி அருணாச்சலம் செட்டியாரை மணந்து கனடாவின் வான்கூவர் நகரில் குடியேறியவர் ஆவார்.
வான்கூவரில் உள்ள பிரிட்டிஸ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 1992 ஆம் ஆண்டு சட்டக்கல்வியை வள்ளியம்மை முடித்து, 1995 ஆம் ஆண்டு முதல் சட்டத்தரணியாக பணியில் இணைந்துக்கொண்டார்.
இந்தியா-கனடா வியாபார அமைப்பின் தலைவராகவும், தேசிய அமைப்பின் இயக்குனராகவும் பணியாற்றி இரு நாடுகளின் வர்த்தக உறவை மேம்பட செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்புடைய கிளர்ச்சியாளர்களால் எதிர்க்குழுவைச் சேர்ந்தவர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றம்
18/12/2015 ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்புடைய சிரிய கிளர்ச்சியாளர்கள் எதிர்க் கிளர்ச்சிக் குழுவான அல்-–நுஸ்ராவைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றுவதை வெளிப்படுத்தும் புதிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.தென் சிரியாவிலுள்ள அல்-–நுஸ்ரா கிளர்ச்சிக் குழுவின் தலைமையகத்தை தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்திக் கைப்பற்றிய யொர்மொக் மட்ரையர்ஸ் கிளர்ச்சிப் படையணியைச் சேர்ந்தவர்கள் தம்மால் பிடிக்கப்பட்ட எதிர்க் கிளர்ச்சியாளர்களுக்கு இவ்வாறு மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதன்போது அல்-–நுஸ்ரா படையணியைச் சேர்ந்த இரு கிளர்ச்சியாளர்கள் உடல் கட்டப்பட்ட நிலையில் ஒருவருக்கொருவர் முதுகுப் பகுதியை காண்பித்தவாறு மண்டியிட்டு அமர்ந்திருக்கப் பணிக்கப்படுகின்றனர்.அதன்பின் அவர்களது உடல் மீது கொள்கலனொன்றிலிருந்து பெற்றோல் போன்று தென்படும் திரவம் ஊற்றப்படுகிறது.அத்துடன் பிறிதொரு நபரின் உடலின் மீதும் இதே வழிமுறையைப் பின்பற்றி மேற்படி பெற்றோல் போன்று தென்படும் திரவம் ஊற்றப்படுகிறது.அல்- நுஸ்ரா கிளர்ச்சிக் குழுவைச் சேர்ந்தவர்கள் தமது எதிர்க் குழுவைச் சேர்ந்த கிளர்ச்சித் தலைவர்களை தாம் கொன்றுள்ளதாக அறிவித்ததற்கு ஒரு மாதம் கழித்தே இந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. நன்றி வீரகேசரி