மலரும் முகம் பார்க்கும் காலம் 24 - தொடர் கவிதை

.

கவிதையை எழுதியவர்  திரு. வெற்றிவேலு வேலழகன்  -பண்ணாகம் -யேர்மனி     இவர் சிறந்த கவிதைகளை  பல இணையங்களிலும் சமூகத் தளங்களிலும் வெளியிட்டு வரும் ஒரு நல்ல எழுத்தாளன் ஆக உள்ளார்.
ஏழையின் " மலரும் முகம் பார்க்கும் காலம்" வரும்.
உலக வல்லரசுகளே!
விண்வெளிக்கு சென்றவர்களே!!
விஞ்ஞான மேதைகளே!
குளாயில் குழந்தை உண்டாக்கியோரே!!
மெஞ்ஞானம் போதிப்போரே!
அணுவை ஆய்வு செய்வோரே!!
கணணிக் கனவான்களே!
உலக மயமாக்கலின் உத்தமர்களே!!
தரவரிசைப் பணக்காரர்களே!!!
இருபத்தியோராம் நூற்றாண்டில்
இது நாம் வாழும் தேசம். பார்த்தீர்களா?
என் தேசத்தை பாளைகள் நிறைந்த பனைமரம் போலே
ஏழைகள் நிறைந்த எம் தேசத்தைப் பாருங்களேன்
விதைகளற்ற வெள்ளரியையும்,
கத்தரியையும் விற்றுப் பிளைக்கும்
விலை மாதைவிடக் கேவலமான வியாபாரிகளே!
கொஞ்சம் பாருங்கள் நம் தேசத்தை!
ஏழையின் " மலரும் முகம் பார்க்கும் காலம்" வரும் என்ற
நம்பிக்கை சாகாதவனின் ஏக்கம்.