ஒரு பயணமும் இரண்டு மரணக் குறிப்புகளும் - கான பிரபா

.

எழுத்தாளர் திருமதி அருண் விஜயராணி அக்காவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள நேற்றுக் காலை எழுத்தாளர் திருமதி அருண் விஜயராணி அக்காவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள இன்று காலை சிட்னியில் இருந்து மெல்பர்ன் நோக்கிப் புறப்பட்டேன். 
சிட்னி விமான நிலையம் நோக்கி விடிகாலை ஐந்து மணிக்கு எனது காரை முடுக்கி விட்டு கனேடியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் இணைய ஒலிபரப்பை மொபைல் போனில் தட்டினேன். சத்யசாயி பாபாவின் பாடல் ஒன்றை P..சுசீலா பாடிக் கொண்டிருந்தார். விஜயராணி அக்காவின் ஆன்மிகத் தேடலுக்கு சாயி பஜன் தான் வழிகாட்டி. அவரின் இறுதிப் பயணம் காணப் போய்க் கொண்டிருக்கும் எனக்கு சாயி பாடல் ஒலித்தது ஏனோ அந்த நேரம் இடம், பொருள், ஏவல் கண்டு ஒலித்ததாகப் பட்டது.

கிட்டத்தட்ட 16 வருடங்கள் அருண் விஜயராணி அக்காவின் தொடர்பில் இருந்திருக்கிறேன். எத்தனையோ நண்பர்களோடும், கூடப் பிறந்த சகோதரரோடும் கூட முரண் பட்டிருக்கிறேன். ஆனால் விஜயராணி அக்கா எது சொன்னாலும் தட்டாமல் கேட்டிருக்கிறேன், நடந்திருக்கிறேன். வாழ்க்கைப் பயணத்தில் இடையில் வந்து வழிகாட்டி விட்டுப் போயிருக்கிறார் என்று அவரின் இறந்த நாள் அன்று என் மனைவிடம் சொல்லி நொந்தது ஏனோ மீண்டும் நினைப்புக்கு வந்தது.

வழக்கமாக அழுது வடியும் மெல்பர்ன்  காலநிலை சூரியன் உச்ச ஸ்தாயியில் எறிக்க அனல் கக்கியது. 

அவுஸ்திரேலியாவில் என் முதல் வாழ்வகமாக ஐந்து ஆண்டுகள் மெல்பர்ன் தந்த சுகத்தை பரபரப்பான 15 வருட சிட்னி வாழ்வு தரவில்லை என்று நினைத்துக் கொண்டே மெல்பர்ன் விமான நிலையத்தில் இறங்கி Taxi க்காகை காத்திருந்தேன்.

Taxi க்காரருடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டே பயணிப்பது என் வழக்கம். 
சையத், ஆப்கானிஸ்தானில் பிறந்தவர்,  மெல்பர்னில் குடியேறியவராம். முக விலாசங்களை இருவரும் பரிமாறிக் கொண்ட போது சொன்னார்.
நானும் என் ஊர் நிலவரங்களைச் சொல்லிவிட்டு
 "அடிக்கடி ஊருக்குப் போவீர்களா" என்று சையத் ஐக் கேட்டேன்.

"கடந்த ஆகஸ்டில் போயிருந்தேன் அது ஒரு துர் பயணம் உங்களுக்குக் கேட்கக் கஷ்டமாய் இருந்தால் நான் சொல்லவில்லை" என்றார். விடுமுறைக்கான பயணத்தில் வந்தவருக்கு ஏன் தன் கவலையைச் சொல்லுவான் என்று நினைத்திருப்பார் போல. அதன் விளைவே அந்த ஆதங்கம்.
"இல்லைப் பரவாயில்லைச் சொல்லுங்கள்" என்றேன்.

"சிட்னியில் இருந்து தாயகத்துக்குப் பயணப்பட்ட என்னை அங்கு விமான நிலையத்தில் அழைத்துப் போக வந்த என் தம்பியின் கார் பெரும் விபத்தில் சிக்கிச் செத்துப் போனார். விடுமுறைக்காக ஒரு மாதம் என்ற கணக்கில் போன நான் மூன்று மாதங்கள் அங்கே நடைப் பிணமாகத் திரிந்தேன்.
சிட்னிக்கு வந்த பின்பும் Taxi ஓடப் பிடிக்காமல் மூன்று மாதங்கள் அழுது கொண்டே கிடந்தேன், என்னை ஒரு பைத்தியக்காரன் என்றே குடும்பத்தவர் நினைக்கும் அளவுக்கு. 
நேற்றுத் தான் மீண்டும் Taxi வேலைக்குத் திரும்பினேன். இப்படியே கிடந்தால் அவன் நினைப்பில் என் கவலைகள் கூடும்"
சையத் உடைந்து போய்ச் சொன்னார்.

"என் தம்பிக்கு நான் என்றால் உயிர் சின்ன வயதில் அவனோடு கூடி விளையாடியது தான் நினைவுக்கு வருகுது" சொல்லிக் கொண்டே வந்த சையத் இன்னொன்றும் சொன்னார்.
"ஒன்று தெரியுமா நேற்று ஆரம்பித்த Taxi  வேலையை நான் இன்னும் முடிக்கவில்லை 
26 வது மணி நேரமாகத் தொடர்கிறேன் இன்னும் வீட்டுக்கே போகவில்லை" திரும்பிப் பார்த்துச் சிரித்தார். பக்கத்திம் இருந்த Energy Drink இன் வாயைத் தன் ஒரு கையால் அழுத்தி உடைத்துக் குடித்தார்.

மரணச் சடங்கில் கலந்து கொள்ளவே மெல்பர்ன் வந்திருப்பதாக அப்போது தான் அவருக்குச் சொல்ல ஆரம்பித்தேன்.சிட்னியில் இருந்து மெல்பர்ன் நோக்கிப் புறப்பட்டேன். வழக்கமாக அழுது வடியும் காலநிலை சூரியன் உச்ச ஸ்தாயியில் எறிக்க அனல் கக்கியது. 

அவுஸ்திரேலியாவில் என் முதல் வாழ்வகமாக ஐந்து ஆண்டுகள் மெல்பர்ன் தந்த சுகத்தை பரபரப்பான 15 வருட சிட்னி வாழ்வு தரவில்லை என்று நினைத்துக் கொண்டே மெல்பர்ன் விமான நிலையத்தில் இறங்கி Taxi க்காகை காத்திருந்தேன்.

Taxi க்காரருடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டே பயணிப்பது என் வழக்கம். 
சையத், ஆப்கானிஸ்தானில் பிறந்தவர்,  மெல்பர்னில் குடியேறியவராம். முக விலாசங்களை இருவரும் பரிமாறிக் கொண்ட போது சொன்னார்.
நானும் என் ஊர் நிலவரங்களைச் சொல்லிவிட்டு
 "அடிக்கடி ஊருக்குப் போவீர்களா" என்று சையத் ஐக் கேட்டேன்.

"கடந்த ஆகஸ்டில் போயிருந்தேன் அது ஒரு துர் பயணம் உங்களுக்குக் கேட்கக் கஷ்டமாய் இருந்தால் நான் சொல்லவில்லை" என்றார். பயணத்தில் வந்தவருக்கு ஏன் தன் கவலையைச் சொல்லுவான் என்ற ஆதங்கம் அவருக்கு வந்தது போல.
"இல்லைப் பரவாயில்லைச் சொல்லுங்கள்" என்றேன்.
"சிட்னியில் இருந்து தாயகத்துக்குப் பயணப்பட்ட என்னை விமான நிலையத்தில் அழைத்துப் போக வந்த 
என் தம்பி வழியில் கார் விபத்தில் சிக்கிச் செத்துப் போனார். விடுமுறைக்காக ஒரு மாதம் போன நான் மூன்று மாதங்கள் அங்கே நடைப் பிணமாகத் திரிந்தேன்.
சிட்னிக்கு வந்த பின்பும் Taxi ஓடப் பிடிக்காமல் மூன்று மாதங்கள் அழுது கொண்டே கிடந்தேன், என்னை ஒரு பைத்தியக்காரன் என்றே குடும்பத்தவர் நினைக்கும் அளவுக்கு. 
நேற்றுத் தான் மீண்டும் Taxi வேலைக்குத் திரும்பினேன். இப்படியே கிடந்தால் அவன் நினைப்பில் என் கவலைகள் கூடும்"
சையத் உடைந்து போய்ச் சொன்னார்.

"என் தம்பிக்கு நான் என்றால் உயிர் சின்ன வயதில் அவனோடு கூடி விளையாடியது தான் நினைவுக்கு வருகுது" சொல்லிக் கொண்டே வந்த சையத் இன்னொன்றும் சொன்னார்.
"ஒன்று தெரியுமா நேற்று ஆரம்பித்த Taxi  வேலையை நான் இன்னும் முடிக்கவில்லை 
26 வது மணி நேரமாகத் தொடர்கிறேன் இன்னும் வீட்டுக்கே போகவில்லை" திரும்பிப் பார்த்துச் சிரித்தார். பக்கத்திம் இருந்த Energy Drink இன் வாயைத் தன் ஒரு கையால் அழுத்தி உடைத்துக் குடித்தார்.

மரணச் சடங்கில் கலந்து கொள்ளவே மெல்பர்ன் வந்திருப்பதாக அப்போது தான் அவருக்குச் சொல்ல ஆரம்பித்தேன்.