.
1200 திரைப்படங்களுக்கு மேல் நடித்ததற்காக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில்இடம்பெற்று சாதனைப் படைத்த தமிழ் திரைப்பட ரசிகர்களால் ‘ஆச்சி’ என அன்போடுஅழைக்கப்படும் மனோரமா கோபிசாந்தா என்னும் இயற்பெயர் கொண்டவர். 1943 ஆம் ஆண்டுமே 26 ஆம் நாள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள மன்னார்குடி என்ற இடத்தில்தந்தையார் காசி கிளார்க்குடையார் என்பவருக்கும், தாயார் ராமாமிர்தம்மாள் என்பவருக்கும்மகளாகப் பிறந்தார்.
தமிழ்த் திரையுலகம் தந்த முதல்வர்கள் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி,புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், செல்வி ஜெயலலிதா மற்றும் ஆந்திர மாநில முதல்வர்என்.டி.ஆர் என ஐவருடன் நடித்த பெருமைக்குரியவர். தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம், இந்தி, சிங்களம் என ஆறு மொழிகளிலும் சிறந்த குணச்சித்திர நடிகை என்றபெருமையுடன் நடித்தவர்.
சுமார் 5000-த்திற்கும் மேற்பட்ட நாடகங்களிலும், 1200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும்நடித்து உலகப் புகழ்பெற்ற கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.1958 இல் , கவிஞர்கண்ணதாசன் மாலையிட்ட மங்கையில் முதன் முதலாக மனோரமாவை அறிமுகம்செய்தார். அன்று தொடங்கிய தனது கலை பங்களிப்பிற்காக 2002 இந்திய அரசின் உயரியவிருதுகளில் ஒன்றான ‘பத்ம ஸ்ரீ விருது’ வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
தமிழக அரசின் ‘கலைமாமணி விருது’, ‘புதிய பாதை’ திரைப்படத்திற்காக சிறந்த துணைநடிகைக்கான ‘தேசிய விருது’, மலேசிய அரசிடம் இருந்து ‘டத்தோ சாமுவேல் சரித்திர நாயகிவிருது’, கேரளா அரசின் ‘கலா சாகர் விருது’, ‘சினிமா எக்ஸ்பிரஸ் விருது’, சிறந்த குணச்சித்திரநடிகைக்காக ‘அண்ணா விருது’, ‘என்.எஸ்.கே விருது’, ‘எம்.ஜி.ஆர். விருது’, ‘ஜெயலலிதாவிருது’ மற்றும் பல முறை ‘ஃபிலிம்ஃபேர் விருதுகள்’ எனப் பல விருதுகளை வென்றுசாதனைப் படைத்துள்ளார்.
சபா நாடகக் குழுவில் நடித்து கொண்டிருந்த பொழுது, அந்த நாடகக் குழுவில் முக்கியபொறுப்பில் இருந்த எஸ். எம். ராமநாதன் அவர்கள், மனோரமாவைக் காதலித்தார். அதன்பிறகு, அவருடைய காதலை மனோரமா ஏற்றுக்கொண்டதால், திருச்செந்தூரிலுள்ள முருகன்கோவிலில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு பூபதி என்ற மகன்உள்ளார்.
எம்.ஜி.ஆர், சிவாஜி என அன்றைய தலைமுறை நடிகர் முதல் இன்று வரை சுமார் 50ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் திரையுலகை ஆட்சி செய்தார் என்று சொன்னால் அதுமிகையாகாது.
முக்கிய நிகழ்வுகள்
* 1963ல் வெளிவந்த "கொஞ்சும் குமரி' என்ற படத்தில் நடிகையாக மனோரமா அறிமுகமானார்.
* "கண் திறந்தது' படக் கதாநாயகன் எஸ்.எம்.ராமநாதனுடன் மனோராமா திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு பூபதி என்ற மகன் உள்ளார்.
* "குன்வர பாப்' என்ற இந்தி படத்தில் மெகமூத் என்ற பாலிவுட் காமெடி நடிகருடன்நடித்துள்ளார்.
* "நடிகன்' என்ற படத்தில் சத்யராஜ்க்கு ஜோடியாக மனோரமா நடித்திருப்பார். இப்படத்தில் 50வயது திருமணமாகாத பெண்ணாக நடித்திருப்பார். இப்படம் மனோரமாவுக்கு பிடித்தபடங்களில் ஒன்று.
* அதிகளவில் "அம்மா' கேரக்டர்களில் மனோராமா நடித்துள்ளார்.
* இவரது இளமை பற்றி மனோரமாவிடம் கேட்டபோது, "அகத்தின் அழகு முகத்தில் தெரியும்'என்ற பழமொழிக்கு ஏற்ப, மனதை மகிழ்ச்சியாக வைத்திருந்தால், உடலும் இளமையாகஇருக்கும் என தெரிவித்தார்.
* ஒரு "டிவி' நிகழ்ச்சியில் பேசிய எழுத்தாளர் "சோ', இவரை "பெண் சிவாஜி' என்றுகுறிப்பிட்டார்.
* மனோராமா கடைசியாக சிவாஜியை (இறப்பதற்கு முன்) சந்தித்த போது, சிவாஜி தன்மனைவியிடம் "தமிழ் மொழியில் மனோரமாவைத் தவிர, எவராலும் இந்தளவுக்கு நடிக்கமுடியாது' என தெரிவித்தார். இது தன் வாழ்வின் மகிழ்ச்சியான தருணம் என மனோரமாதெரிவித்தார்.
* "உனக்கும் வாழ்வு வரும்' என்ற படத்தில், மனோரமா ஊமையாக நடித்திருப்பார்.
* "மஞ்சள் குங்குமம்' என்ற படத்தில் நடிக்கும் போது, மனோரமாவை "காட்டுவிரியன்' பாம்புகடித்து விட்டது. பின் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குணமடைந்த பின்,அடுத்ததாக நடித்த "ஆடி விரதம்' படத்தில் பாம்பு சிலையை குளிப்பாட்டி தாலாட்டும் பாட்டுசீன் ஒன்றில் நடித்தார்.
* இவர் கடைசியாக நடித்த படம் "பொன்னர் சங்கர்'.
நடிகை மனோரமா, தனது எழுபதெட்டாவது வயதில் மாரடைப்பால் காலமானார்.
No comments:
Post a Comment