"தொன்மங்களுடனான உரையாடல்" மௌனகுரு உரை

.
"தொன்மங்களுடனான  உரையாடல்படைப்பனுபவங்கள்
தஞ்சாவூர்  தமிழ்  பல்கலைக்  கழகத்தில்   தகைமைசார் பேராசிரியர்  சின்னையா  மௌனகுரு  உரை


தமிழ்நாடு  தஞ்சாவூர்  தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்  கல்வித்துறையின்  சார்பில்  இலங்கையின்  தகைமைசார் பேராசிரியர்  சின்னையா   மௌனகுரு  அழைக்கப்பட்டார். பல்கலைக்கழகத்தின்  துணைவேந்தர்  பேராசிரியர்  பாஸ்கரன் தலைமையில்  நடந்த  தொன்மங்களுடன்  உரையாடல்  என்ற தலைப்பில்  பேராசிரியர்  மௌனகுரு  தமது  அரங்காற்றுகைகள், படைப்புகள்   பற்றி   உரையாற்றினார்.
தொன்மமாவது யாது...அதுபற்றிய  ஆண்மைக்கால  ஆய்வுகள்,
தொன்மங்களின்  பண்பாட்டு  வலிமை,   தமிழர்  மத்தியிலான தொன்மங்கள்    அவை   தமிழர்  பண்பாட்டில்  வகிக்கும்   காத்திரமான வகிபாகம்  யாது...?   என்பன  பற்றியதாகவும்   தமிழ்  தொன்மங்கள் சிலவற்றை    தன்   நாடகப்   படைப்புகளுக்கு
ஏன்  பயன் படுத்துகிறேன்....எவ்வாறு  பயன்படுத்துகிறேன்...?
அப்படிப்  பயன் படுத்துவதற்கான  காரணங்கள்   என்ன...?அதனால்   எதிர் கொண்ட  சாதகங்கள்  என்ன...பாதகங்கள்   என்ன..? சவால்கள்  என்ன...என்பன பற்றியதாக     அவருடைய   உரை   அமைந்திருந்தது.




1980 களிலிருந்து   அவர் தயாரித்த   சங்காரம்(1980)    குருஸேத்ர உபதேசம்(1982)   புத்துயிர்ப்பு(1984)    மழை(1985)   தப்பிவந்த தாடி ஆடு(1985)  சரிபாதி(1986)   வேடரை உச்சிய வெள்ளைப் புறாக்கள்(1986)    சக்தி பிறக்குது(1986)   நம்மைப் பிடித்த பிசாசுகள்(1987)   பராபஸ்(1987)   கண்ணகி  குளுர்த்தி (1993)   இன்னிய  அணி(2000)    இராவணேசன்(2003)  லயம் (2005)   வானவில்லின் வர்ணங்கள்(2012 )   நொண்டி நாடகம் (2014)
காண்டவ தகனம் (2015 )ஆகிய  அரங்காற்றுகைகளில்    தொன்மங்களைக்  கையாண்ட முறைமைகளை  விளக்கி  அவர் உரையாற்றினார்.
கண்ணகிகுளுர்த்தி,  இன்னியம்,   மழை,  இராவணேசன்  , வானவில்லின்  வர்ணங்கள்  , காண்டவதகனம்   முதலான படப்புகளிலிருந்து   சில காட்சிகளைத்  திரையிட்டு ம்  விளக்கினார்.
திரையிடுவதற்கான  நல்ல  வசதிகள்  அம்மண்டபத்தில்   இருந்தமை மாணவர்களுக்கும்  நிகழ்ச்சியில்  கலந்துகொண்ட  பேராசிரியர்கள் மற்றும்   மாணவர்களுக்கும்    சாதகமாக  அமைந்து விட்டன.
தலைமை  வகித்த  துணைவேந்தர்  பேராசிரியர்  பாஸ்கரன்  தத்துவத் துறைப்  பேராசிரியர்.   அவர்ஆற்றிய தொன்மங்கள் பற்றிய சிறப்பானதொரு   அறிமுகவுரை    பேராசிரியர்  மௌன குரு  அவர்களின்  உரையைப்  புரிந்து கொள்ள   பலமானதொரு அத்திவாரமாக அமைந்து விட்டது.
M.A, M.Phil ,Phd. மாணவர்கள்,  விரிவுரையாளர்கள்,  பேராசிரியர்கள் எனக் கனதியான  சபையில்  பேராசிரியர்  தமது  அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.
இதுபோன்ற  விரிவுரைகளை  எதிர்காலத்திலும்  அவர்  இதர பல்கலைக்கழகங்களில்  நிகழ்த்தவேண்டும்.
----0----



No comments: