பறவைகளின் பாஷை என்ன.. - சுபாரஞ்சன்.ஒலிக் குறிப்பு ஒன்று
அர்த்தங்களால் நிரப்பப் பட்டு
பேசும் பாஷையாகி.......

நீயும் நானும் 
காதல் மொழியாக
அன்பு மொழியாக........

பேசியும் புரியாத 
மொழியாக பேதங்களால்
நகர்கிறது..............

எழுதிப் படிக்க முடியாத
படித்துப் பொருள் கூற முடியாத 
உணரும் மொழி ஒன்றை.......

என் வீட்டுப் பறவை
நாழிகை மறந்து
நல்ல சங்கீதமாய் பாடுகிறது .........

உற்றுக் கேட்டால் 
உள்ளம் பறி போகிறது இவை பேசும் மொழியே
இன்ப மொழி என தோன்றியது.....

நன்றி :pannagam.com

No comments: