தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகளும், பரிசளிப்பு விழாவும் - 2015

.
அவுஸ்திரேலிய பட்டதாரிகள் தமிழர் சங்கம்
தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகளும், பரிசளிப்பு விழாவும் - 2015


கடந்த 21 வருடங்களாக அவுஸ்திரேலியாவில் தமிழ்ப்பணியாற்றிவரும் ஆஸ்திரேலிய பட்டதாரிகள்  தமிழர் சங்கத்தினால் நடாத்தப்பட்ட 2015 ஆம் ஆம் ஆண்டுக்கான தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகளின் தேசியப் போட்டிகளும் பரிசளிப்பு விழாவும் இம்முறை மெல்பேணில் நடைபெற்றன. பேச்சுப்போட்டிகள், திருக்குறளும் உரையும் மனனப்போட்டிகள், கவிதை மனனப் போட்டிகள், வாய்மொழித் தொடர்பாற்றல் போட்டிகள் முதலிய போட்டிகள் வயது அடிப்படையில் பல்வேறு பிரிவுகளாக நடாத்தப்பட்டன. மற்றும், தனி நபர் நடிப்பு, குழுநிலை விவாத அரங்கு ஆகிய போட்டிகளும் நடாத்தப்பட்டன. 


அவுஸ்திரேலியாவின் ஏனைய மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்குகொண்ட இந்தப் போட்டிகள் நிகழ்ச்சிகள் கடந்த செப்டம்பர் 26 ஆம் திகதி மல்கிரேவ் சமூக மண்டபத்திலும், பரிசளிப்பு விழா 27 ஆம் திகதி ஸ்பிறிங்க்வேல் நகர மண்டபத்திலும் நடைபெற்றன. தேசியப்போட்டிகளிலும், மாநிலப் போட்டிகளிலும் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு வழமைபோல் தங்கப்பதக்கங்களும், வெற்றிக்கேடயங்களும், விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற மாணவர்களின் நிகழ்ச்சிகளும் இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டார்கள். பரிசளிப்பு விழாவின்போது எடுக்கப்பட்ட சில படங்களைக் கீழே காணலாம்.

No comments: