இலங்கைச் செய்திகள்


சர்வதேச விசாரணை கோரும் நடை பயணம் யாழ். வந்தடைந்தது

கோத்தா, நாமல் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவுக்கு வருகை

சம்­பந்­தனின் கடி­தத்­துடன் சுமந்திரன் தலை­மை­யி­லான குழு ஜெனிவா விரைவு

ரணில் - மோடி சந்தித்தனர்

யாழ். பல்கலைக்கழகத்தில் கையெழுத்து வேட்டை

 கோத்தா ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை

  'பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குக" கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டம்சர்வதேச விசாரணை கோரும் நடை பயணம் யாழ். வந்தடைந்தது

14/09/2015 ஜெனிவாவில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், உள்நாட்டு பொறிமுறை விசாரணையை ஏற்கமாட்டோம், சர்வதேச விசாரணை வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்டுள்ள நடைபயணம் ஐந்தாவது நாளான இன்று யாழப்பாணத்தை வந்தடைந்துள்ளது. கடந்த 10 ஆம் திகதி கிளிநொச்சி நகரிலிருந்து ஆரம்பமான நடைபயணம் அன்றையதினம் மாலை ஆனையிறவை வந்தடைந்தது.
   
ஆனையிறவிலிருந்து இரண்டாம் நாள் பயணம் ஆரம்பிக்கப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை (11) பளையை வந்தடைந்தது. மூன்றாம் நாள் நடைபணம் வெள்ளிக்கிழமை (11) பளையிலிருந்து ஆரம்பித்து கொடிகாமத்தை வந்தடைந்தது. 

கொடிகாமத்திலிருந்து நேற்று ஆரம்பித்த நடைபயணம் நேற்று கைதடியைச் சென்றடைந்து.
இந்நிலையில் இன்றைய தினம் கைதடியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நடைபயணம் யாழ் நகரைச் சென்றடைந்துள்ளது.
இந்த நடைபயணத்தில் வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே. சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் ஆகியோருடன் காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்களும் பங்கெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 

கோத்தா, நாமல் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவுக்கு வருகை14/09/2015 முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் வாக்கு மூலம் வழங்குவதற்காக நிதிக்குற்ற விசாரணைப்பிரிவுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிதி மோசடி தொடர்பிலேயே இவர்களிடம் வாக்கு மூலம் பெறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.    நன்றி வீரகேசரி
சம்­பந்­தனின் கடி­தத்­துடன் சுமந்திரன் தலை­மை­யி­லான குழு ஜெனிவா விரைவு

14/09/2015 தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ரு­மான இரா.சம்­பந்­தனின் முக்­கிய கடி­தத்­துடன் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் தலை­மை­யி­லான சட்ட வல்­லுநர் குழு­வொன்று ஜெனிவா நோக்கி பய­ண­மா­கி­யுள்­ளது.
ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வை யின் 30ஆவது கூட்­டத்­தொடர் இன்­றைய தினம் ஆரம்­ப­மா­க­வுள்ள நிலை­யி­லேயே தமிழ்த்­தே­சியக்கூட்­ட­மைப்பின் சட்ட வல்­லு­னர்கள் குழு நேற்று முன்­தினம் ஜெனிவா விரைந்­துள்­ளது.
தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் தமி­ழ­ரசுக் கட்­சியின் வெளிவி­வ­கா­ரங்­க­ளுக்­கான செய­லா­ளரும் கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சா­ளரும் சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணி­யு­மான எம்.ஏ.சுமந்­திரன் தலை­மை­யி­லான சட்ட வல்­லுனர் குழு­வி­னரே நேற்று முன்­தினம் ஜெனீவா நோக்கி பய­ண­மா­கினர்.
இக்­கு­ழு­வினர் ஜெனீ­வாவில் ஐக்­கிய நாடுகள் உறுப்பு நாடுகள் உட்­பட பல்­வேறு நாடு­களின் உயர் மட்ட இரா­ஜ­தந்­தி­ரி­க­ளுடன் விசேட சந்­திப்­புக்­களை நடத்­த­வுள்­ளனர்.
இதன்­போது இலங்கை இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மனி­தா­பி­மான சட்ட மீறல்கள் குறித்து விசேட கவனம் செலுத்­த­வுள்­ளனர்.

இது தொடர்பில் ஜெனீவா சென்­றுள்ள தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் கருத்து வெளியி­டு­கையில்,
தமிழர் நீதிக்­கான கூட்­ட­மைப்பின் குரல் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் சபை அமைந்­துள்ள ஜெனி­வாவில் மட்­டு­மல்ல உலக நாடுகள் எங்கும் ஓங்கி ஒலிக்­க­வுள்­ளது. ஜெனிவா அமர்வில் வெளியி­டப்­ப­ட­வுள்ள ஐ.நா. விசா­ரணை அறிக்­கையின் பரிந்­து­ரை­களை சர்­வ­தேச சமூ­கத்தின் ஈடு­பாட்­டுடன் நடை­மு­றைப்­ப­டுத்­த­வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் சார்பில் வலி­யு­றுத்­தப்­ப­ட­வுள்­ளது.
ஐ.நா. விசா­ரணை அறிக்­கையின் பிரதி இலங்கை அர­சாங்­கத்­திடம் தற்­போது கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த அறிக்கை எதிர்­வரும் 16ஆம் திகதி ஜெனிவாக் கூட்டத் தொடரில் உத்­தி­யோ­க­புர்­வ­மாக வெளியி­டப்­ப­ட­வுள்­ளது. இந்­நி­லையில், ஐ.நா. விசா­ரணை அறிக்­கையில் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருக்கும் பரிந்­து­ரை­களை இலங்கை அர­சாங்கம் அமுல்­ப­டுத்­த­வேண்டும். அவ்­வாறு அமுல் படுத்­தப்­படும் சந்­தர்ப்­பத்தில் சர்­வ­தேச சமு­கத்தின் ஈடு­பாட்­டுடன் நடைப்­ப­டுத்­த­வேண்டும் என்ற நிலைப்­பாட்­டிகை கைவி­டப்­போ­வ­தில்லை என்­றார்.
ஐ.நா. விசா­ரணை அறிக்­கையில் உள்ள பரிந்­து­ரை­களை உள்­ளக விசா­ரணைப் பொறி­மு­றை­யு­டாக நிறை­வேற்ற வேண்டும் என்ற இறுக்­க­மான நிலைப்­பாட்­டில அர­சாங்­கத்தின் சார்­பாக வெளிவி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர தலை­மை­யி­லான உயர் மட்­டக்­கு­ழு­வினர் உள்­ள­தோடு அதனை நியாப்­ப­டுத்தும் வகையில் பல்­வேறு தரப்­பி­னரைச் சந்­தித்து தமது செயற்­பா­டுகள் குறித்து விளக்­க­ம­ளிக்­க­வுள்­னது.
இதே­வேளை ஜெனீவா விரைந்­துள்ள தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன், கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்­தனின் கடி­த­மொன்­றையும் பெற்­றுக்­கொண்டு சென்­ற­தாக தெரிய வரு­கின்­றது. இக்­க­டி­தத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணைப் பொறிமுறை அமைக்கப்பட வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் உறுதியாக உள்ளனர் எனபதை வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி


ரணில் - மோடி சந்தித்தனர்

15/09/2015 இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய  பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நன்றி வீரகேசரி


யாழ். பல்கலைக்கழகத்தில் கையெழுத்து வேட்டை

15/092015 சர்வதேச விசாரணையை வலியுறுத்தி இன்று காலை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் நுண்கலைப்பீடத்தில் கையெழுத்து போராட்டம் ஒன்று நடைபெற்றது.

சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் உள்ளக விசாரணைப் பொறிமுறையை நிராகரித்தும் இந்த கையழுத்துப் போராட்டம் இடம்பெற்றது. 
இப்போராட்டத்தில் பெருமளவான மாணவர்கள் ஊழியர்கள் மற்றும் விரிவுரையாளர்களும் கலந்து கொண்டு தமது கையொப்பங்களை இட்டனர். நன்றி வீரகேசரிகோத்தா ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை

17/09/2015 முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ விசாரணைக்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
அவன் கார்ட் மற்றும் ரக்னா லங்கா நிறுவனங்களில்  இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பிலேயே இவரிடம்  விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 'பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குக" கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டம்

17/09/2015 சிறுவர் மற்றும் பெண்கள் மீதான துஷ்­பி­ர­யோகம், கொலை­க­ளுக்கு எதி­ர்ப்பு தெரிவித்தும் அவ்வாறான குற்றவாளிகளுக்கு மரணதண்­டனை வழங்குமாறு வலி­யு­றுத்தியும் ஐக்­கிய சமா­தான முன்­னணி ஏற்­பாட்டில் கவ­ன­யீர்ப்புப் போராட்டம் இன்று காலை 10 மணிக்கு கொழும்பு புதுக்­கடை நீதி­மன்ற வளாக முன்­றலில் நடை­பெ­ற்றது.

'நேற்று வித்தியா.. இன்று சேயா.. நாளை..?" 'சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்­பி­ர­யோகத்துக்கு மரண தண்டனை வழங்கு.!" 'பாலியல் குற்றவாளிகளை கொலைகாரர்களை தூக்கிலிடு" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் கவ­ன­யீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாட்டில் நாளுக்கு நாள் சிறுவர் துஷ்­பி­ர­யோகம், பெண்­க­ளுக்கு எதி­ரான பாலியல் வன்­மு­றைகள் அதி­க­ரித்துச் செல்­வ­தோடு கொலை­களும் அதி­க­ரித்­துள்ளதாகவும் இதற்­கெ­தி­ரான தண்­ட­னைகள் கடு­மை­யாக்­கப்­பட வேண்டும் எனவும் ஐக்­கிய சமா­தான முன்­ன­ணியின் தலைவர் மொஹமட் மிப்லார் தெரிவித்தார்.
தண்டனை வழங்கப்படுவதில் உள்ள சட்ட குறைப்பாடுகள் காரணமாகவே இவ்வாறான துஷ்பிரயோகங்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற வண்ணம் உள்ளதாகவும் கடந்த 4,5 வருடங்களில் இக்கொடூர செயல்கள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இவ்வாறான கொடூர செயல்கள் இடம்பெறுவதற்கு போதைப்பொருள் பாவனையும் ஒரு முக்கிய காரணமாகும். இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெறாமல் இருப்பதற்கு பொலிஸ் அதிகாரிகளும் நீதிவான்களும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என மேலும் தெரிவித்தார்.
இதேவேளை போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், நல்லாட்சிக் காலத்தில் இதுபோன்ற கொடூரங்கள் மேலும் இடம்பெறாமல் இருப்பதற்கு புதிய சட்டம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படப்பட வேண்டும் என தெரிவித்தார்.
போராட்டத்தின் பின்னர் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிடம் கோரிக்கைகள் அடங்கிய மனு கையளிக்கப்பட்டது. 

நன்றி வீரகேசரி

No comments: