சிரியா மீது அவுஸ்திரேலியா முதல் தடவையாக வான் தாக்குதல்
சிலியில் பூமியதிர்ச்சி, சுனாமி: 10 இலட்சம் பேர் வெளியேற்றம்
சிரியா மீது அவுஸ்திரேலியா முதல் தடவையாக வான் தாக்குதல்
17/09/2015 சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான தனது முதலாவது வான் தாக்குதலை ஆரம்பித்துள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல்களை முன்னெடுத்துள்ள சர்வதேச கூட்டமைப்பு நாடுகளின் தாக்குதல்களில் அவுஸ்திரேலியா பங்கேற்றுள்ளது.
அவுஸ்திரேலியாவால் சிரியாவில் நடத்தப்பட்ட முதலாவது வான் தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் வாகனமொன்றும் மசகு எண்ணெய் சேகரிப்பு தளமொன்றும் அழிவடைந்துள்ளன.
அவுஸ்திரேலிய விமானப் படையானது ஈராக்கிலுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக கடந்த 12 மாதங்களாக தாக்குதல்களை நடத்திவருகிறது. நன்றி வீரகேசரி
சிலியில் பூமியதிர்ச்சி, சுனாமி: 10 இலட்சம் பேர் வெளியேற்றம்
17/09/2015 தென்னமெரிக்காவிலுள்ள சிலியில் 8.3 ரிக்டர் அளவில் பூமியதிர்ச்சி ஏற்பட்டதையடுத்து கடலில் நாலரை மீட்டர் உயரமான சுனாமி அலைகள் ஏற்பட்டுள்ளன. இதனால் கடலை அண்மித்து வாழ்ந்த சுமார் 10 இலட்சம் பேர் கரையோரப் பகுதிகளிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்தப் பாரிய புவியதிர்வு காரணமாக தலைநகர் சாண்டியாகோவில் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் பூகம்பத்திலும் சுனாமியிலுமாக குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொகிம்போ, வல்பரைஸோ போன்ற இடங்களில் போன்ற இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள், தாழ்வான பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என அதிபர் மிஷெல் பஷெலெட் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், பரந்த அளவிலான அபாயகர ஆழிப்பேரலைகள் ஏற்படலாம் என பசுபிக் ஆழிப்பேரலை எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.
பேரு, நியூசிலாந்து மற்றும் ஹவாய் தீவுகளுக்கும் அமெரிக்க கலிபோர்னிய கரைப்பகுதிக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment