.
Dr.கைலாசபதி மனைவி சர்வமங்களம் குழந்தை சுமங்களாவும் பேராதனை பல்கலைக்கழக விடுமுறையை களிக்க கொழும்பில் தங்கியிருந்த காலம். ஆவர்கள் வீட்டில் நான்கு நாட்கள் தங்கியிருந்தோம் அச்சமயம் கைலாசுடன் பல விசயங்களை பற்றியும் உரையாடினேன் அவர ஆர்வமாக என்னைத் தூண்டித் தூண்டி பல கேள்விகளைக் கேட்டார் நாட்டிய வேறுபாடுகள் அரங்கக் கலை எனது இந்திய வாழ்வில் பார்த்த அரங்கப்படைப்புக்கள் குருகுல வாசம் என பலதும் பேசினோம் அப்பொழுது அவர் கூறினார் கார்த்திகா இத்தனையும் பலர் அறியNவுண்டிய விஷயங்கள் ஏன் நீங்கள் இதை எழுதக் கூடாது எழுதினால் பலரும் இவற்றை அறிய வாய்ப்புண்டு என்று என்னை எழுதத் தூண்டினார். நான் எழுதிய இரு கட்டுரைகளை தினகரன் ஆசிரியர் சிவகுருநாதனிடம் எடுத்துச் சென்றார் சிவகுருநாதனோ நான் அதை தொடர் கட்டுரையாக எழுதவேண்டும் எனப்பணித்தார். தினகரன் வார மஞ்சரியில் தமிழர் வளர்த்த ஆடற்கலைகள் தொடர் கட்டுரையாக 14 வாரங்கள் தொடர்ந்தது. இதுவே என்னை ஒரு ஆய்வாரள் ஆக்கியது. பத்திரிகைக்கு எழுதும்போது பல நூல்களைப் படித்து ஆராய்ந்து எனது அறிவை விருத்தி செய்தேன். வாசகருக்கு தமிழரின் ஆடற்கலையை கூறப்புகுந்த நான் நீண்ட ஆய்வில் ஈடுபடவேண்டியதாயிற்று.
மனித சமுதாய வளங்சியில் நடனத்தின் பங்கை படிமுறையாக ஆராயவேண்டியிருந்தது. தமிழரின் ஆடல் எனும்போது சங்ககாலம் மூவேந்தர் காலம் கல்வெட்டுக்கள் சிலப்பதிகாரம் ஆரியர் வருகையும் பாதிப்பும் இன்று கிடைக்கக்கூடிய மிகப்பழமையான பரதரின் நாட்டிய சாஸ்திரம் அதை தொல்காப்பித்துடன் ஒப்பிடல் மேலும் சிற்பங்கள் சித்திரங்கள் பரதம் வளர்த்த பாவையரான தாசிகுலம் இலங்கை மன்னர் ஆட்சிக்காலத்தில் ஆடப்பட்ட ஆடல்கள். தற்கால பரதநாட்டிய வளர்ச்சி என பலவும் ஆராயப்பட்டது.
இத்தொடர் கட்டுரை தினகரன் வார மஞ்சரியில் வெளியாகி சில மாதங்களில் எனது கணவருடன் Scotland இன் Glasgo வில் சென்று வாழ்ந்தேன். எனது கணவர் அரச இராசன பரிசோதகராக வேலை பார்த்தவர் British Council புலமைப் பரிசில் பெற்று தனது ஆய்வுகளுக்காக அங்கு சென்றார். தொடர் கட்டுரைகளின் பிரதிகளை சென்னை தமிழ்ப்புத்தகாலயத்தில் கையளித்துவிட்டு சென்றிருந்தேன் 1969 இல் அவர்களால் தமிழ்வளர்த்த ஆடற்கலை நூல் உருப்பெற்றது.
தமிழ்வளர்த்த ஆடற்கலை நூலின் இரு பிரதிகளை வெளியீட்டாளர்களான சென்னை தமிழ்ப்புத்தகாலயத்தினர் Glasgo வில் வசித்த எனக்கு அனுப்பிவைத்தனர். நாம் Glasgo வில் வசித்தபொழுது திரு சிவத்தம்பி Bamihame பல்கலைக் கழகத்தில் தனது கலாநிதிப்பட்டத்திற்கான ஆய்வில் ஈடுபட்டிருந்தார். நூலின் ஒரு பிரதியை திரு சிவத்தம்பிக்கு அனுப்பி வைத்தோம் அவர் தமிழ்வளர்த்த ஆடற்கலை நூலிற்கு விமர்சனம் எழுதி தினகரன் வார மஞ்சரிக்கு அனுப்பியிருந்தார். அது 30.03.70இல் தினகரனில் வெளியானது.
கா.சிவத்தம்பியின் விமர்சனத்தில் ஒரு பகுதி
சமூகவியலாளனுக்கு உருசிகரமான உண்மைகளை விளக்கும். இக்கலையைப்பற்றி அத்துறையில் உள்ள ஒருவர் எழுதுவதனால் அதில் வளக்கமான தத்துவ உட்பொதிவு விளக்கங்களும் இந்துமத சிறப்பு அம்சங்களுமே காணப்படும் என எதிர் பார்க்கலாம் உதாரணமாக மிருணாளினி சாராபாயின் ஆங்கில நூலையும்ருக்மணி தேவியின் பல ஆங்கிலக் கட்டுரைகளையும் கூறலாம்.
ஆனால் கார்த்திகா கணேசர் எழுதியுள்ள இந்நூல் மகிழ்வுட்டும் புற நடையாகும் நடனம் சமூகவாழ்வில் இணைந்து வளர்ந்த முறையைக் காட்டி அதன் சமூக முக்கத்துவத்தினை முதலில் நிறுவியுள்ளார் இது ஆசிரியரின் கண்ணோட்டத்தை நன்கு புலப்படுத்துகிறது. புத்துப் பிரிவுகளைக் கொண்ட இந்நூலில் பரத நாட்டியத்தின் வரலாறு அதன் அடிப்படை அம்சங்கள் அண்மைக்காலத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் முதலியன தெளிவாகவும் சுருக்கமாகவும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
நடனத்தை வெறும் பொழுதுபோக்காக கொள்ளாது ஆக்க முறைகளுக்கு பயன்படுத்தத் தக்க ஒரு கலை வடிவமாகக் கொண்டு அதனை விளக்கியுள்ளது இந்நூலின் சிறப்பம்சமாகும்.
இலங்கையில் இன்று பரத நாட்டியம் பயிலப்படும் முறையிலும் நெறியிலுமுள்ள தவறுகளை நன்கு எடுத்துக்காட்டும் திருமதி கணேசர் தனது உழைப்பினாலும் பணியினாலும் அவற்றை ஒழித்து நடனத்தின் சமூகப்பணியை நிலைநாட்ட வேண்டும்.
சிவத்தம்பி கூறியது போல் நடனத்தை வெறும் பொழுதுபோக்காக கொள்ளாது ஆக்கமுறையில் பயன்படுத்த முன் எமது ஆடற்கலையை எவ்வாறு புரியவைப்பது அதன் வலுவை அறிந்து கொள்ள எவ்வாறு எடுத்துக்கூறுவது என்பதை நடைமுறையில் நான் விளக்கவேண்டி இருந்தது. நடனத்தை ஆய்வு செய்து கட்டுரைகள் எழுதியமையால் Dr பூலோகசிங்கம் கொழும்பு பல்கலைக் கழகத்தில் விரிவுரை நிகழ்த்த என்னை அழைத்தார்.
அதையடுத்து நான் Glasgo ல் வாழ்ந்த சமயம் நடனம் பற்றிய நூல் எழுதியவள் என்பதால் இந்தியத்தூதரகம் எனக்கு சில பணிகளைத்தந்தது. Glasgo பல்கலைக்கழகம் BlachPool பல்கலைக்கழகம் Midlands இல் Notingam பல்கலைக்கழகங்களில் பிறநாட்டுக் கலை கலாச்சாரங்களை அறிய வைப்பதற்கு ஒரு திட்டம் வகுக்கப்பட்டது அதில் காலையிலே கலைஞர் தமது கலையை விளக்கி விரிவுரை நிகழ்த்தவேண்டும் பின் மாலையில் நிகழ்ச்சி நடத்த வேண்டும் அந்த வகையில் காலையில் பரதம் பற்றி அதன் பூர்வீகம் தற்கால நிலை மேற்கொண்டு செல்ல வேண்டிய விதம் என விளக்கமும் அதன்பின் கேள்விக்கான பதில்களும் கொடுத்து மாலையில் பரதக்கச்சேரியும் செய்தேன் அது எனக்கே ஒரு பயிற்சியாக அமைந்தது.
இந்தியத்தூதரகத்தின் சார்பாக Scotish Ballet School இலும் பரதம் பற்றிய விரிவுரையும் பயிற்சி வகுப்பும் நடாத்தினேன். அதேசமயம் எனது தனிப்பட்ட நடன வகுப்பில் வேறுபட்ட இந்திய மானிலங்களைச் சேர்ந்த மாணவியர் கற்றனர். இவர்கள் புரிந்து ஆட இந்திமொழிப் பாடல்களும் வங்காளி மாணவியருக்கு கவி ரவீந்திரநாத் அவர்களின் பாடல்களையும் கற்றுக் கொடுத்தேன். வேறுபட்ட மாறுபட்ட சமூகத்திற்கு எமது நடனத்தைப் புரியவைத்து. அவர்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் கொடுப்பதால் அவர்கள் பார்வையில் எவ்வாறு எமது ஆடலை நோக்குகிறார்கள் என்பதை அறியமுடிந்தது.
தொடரும்

No comments:
Post a Comment