தாயகத்து இளையவர்கள் திறமைகளை கண்டேன் - க பாலேந்திரா

.

எமது தமிழ் அவைக்காற்று கலைக் கழக நாடகக் குழுவினருடன் சென்று , 2013இல் இலங்கையில் நடாத்திய நாடக விழாவின் வெற்றியை தொடர்ந்து இந்த வருடம் நான் தனியாக அங்கு சென்றேன். இலங்கையில் யாழ்ப்பாணம்,
மட்டக்களப்பு, கண்டி, பதுளை, கொழும்பு ஆகிய இடங்களுக்கு சென்று இளையவர்களையும், முதியவர்களையும் சந்தித்து என் நாடக
அனுபவங்களை பகிர்ந்து கொண்டேன். இந்த கலைப் பயணத்தின் அனுபவங்களை  புதினம் பத்திரிகை ஊடாக பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.
 முதலில் மட்டக்களப்பில் பேராசிரியர் மௌனகுரு தனது, அரங்க ஆய்வுக்கூட மாணவர்களுடன் ஒரு நாடக பயிற்சிப் பட்டறை நடத்த அழைத்திருந்தார். சுமார் 25 இளையவர்கள் மிக உற்சாகமாக பங்கு கொண்டார்கள். ஒரு வாரப் பயிற்சியின் பின்னர், நான் இங்கு லண்டனில் எமது நாடகப் பள்ளி மாணவர்களைக்  கொண்டு கடந்த ஜனவரி மாதம் மேடையேற்றிய பாரதியின் பாஞ்சாலி சபதம் கவிதையை அடிப்படையாகக் கொண்ட “நெட்டை மரங்கள்” மேடை நிகழ்வை , மட்டக்களப்பு விபுலானந்தர் அழகியற் கற்கை நிறுவனத்தில்  மேடையேற்றினோம். உலகில் நடைபெறும் அநீதிகளையும், கொடுமைகளையும் குறிக்கும் குறியீடாக பாஞ்சாலியின் துயர் காட்டப் படுகிறது.
 “நெட்டை மரங்களென நின்று புலம்பினார்.
பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ?
பேரழகு கொண்ட பெருந்தவத்து நாயகியைச்
சீரழியக் கூந்தல் சிதையக் கவர்ந்துபோய்க்
கேடுற்ற மன்னரறங் கெட்ட சபைதனிலே
கூடுதலும் அங்கேபோய்க் ‘கோ’வென் றலறினாள்............”
ஆடை குலைவுற்று நிற்கிறாள் -அவள்
ஆவென்றழுது துடிக்கிறாள் -உயர்
மாடு நிகர்த்த துச்சாதனன் -அவள்
மைக் குழல் பற்றி இழுக்கிறான்



பாண்டவர் ஐவரும், பெரியோரும், நெட்டை மரங்கள என நிற்கிறார் உலகமெலாம் அடக்குமுறைகளும் அநியாயங்களும் நடக்கின்றன, நெட்டை மரமாக நாங்கள் நிற்கிறோம் என நாடகம் முடிகிறது.நீண்ட காலத்துக்கு பின்னர் தாயகத்தில் உள்ள இளையவ ர்களு டன் ந £ டகம் ª நறி ப் ப டுத்தியது ஒரு நல்ல மகிழ்ச்சிகரமான அனுபவம்.மிகவும் திறமையுள்ள பல இளையவர்களை அங்கு கண்டேன். லாவண்யா, கிருஷ்ணவேணி, சுகிர்தகலா,
துஜன், நிஷா போன்றவர்களுக்கு கலையுலகில் நல்ல எதிர்காலம் உண்டு. முதல் மூவரும் தற்போது விரிவுரையாளர்களாக கடமை புரிகிறார்கள். மிகக்
குறுகிய காலத்தில் நான் எதிர்பார்த்ததை விடசிறப்பாக அந்த ஆற்றுகையை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்வு யாழ் இந்துக் கல்லூரியின் 125வது ஆண்டு விழாவில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 27ஆம் திகதி யாழ் நகரில் மீண்டும் மேடையேற இருக்கிறது.

எனது கலைப் பயணத்தில் தொடர்ந்து, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நாடகம் பயிலும் எழுபது மாணவர்களுக்கு ஒரு ஞாயிறு தினத்தில் ஒரு அரை நாள் நாடக பயிற்சி வழங்கினேன். ஆர்வத்துடன் பங்கு பற்றினார்கள். நாடகக் கல்வி பாடசாலை மட்டத்திலும், யாழ் பல்கலைக்கழகத்திலும் பாடத்திட்டத்தில்  இருப்பதால் எமது நாடக முயற்சி பற்றியும் படிக்கிறார்கள். தெல்லிப்பளை மகாஜன கல்லூரி மாணவர்களுடனும், அரியாலை சரஸ்வதி மத்திய நூல் நிலையத்திலும் நாடக கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
அங்குள்ள இளைஞர்கள் பலரும், பயிலுவதற்கு ஆர்வம் இருந்தபோதும், நாடகத் தயாரிப்பு பற்றிய அனுபவம் வாய்ந்தவர்கள் கிடைப்பதில்லை என்று கூறினார்கள். புலம் பெயர்ந்து வாழும் அனுபவம் மிக்க கலைஞர்கள் தாயகத்துக்கு சென்று உதவ வேண்டும் என நினைக்கிறேன். இப்படியான கலை ஈடுபாடு இளைஞர்களை தவறான வழியில் போகாமல் இருக்க உதவும். யாழ் பல்கலைக் கழகத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட கருத்தரங்கில், தமிழ்
நாடகச் சூழலில் தழுவல் மொழிபெயர்ப்பு நாடகங்கள் பற்றி உரையாற்றினேன். “கண்ணாடி வார்ப்புகள்” என்ற எமது நாடக நூல் பற்றி ஆங்கில துறையைச் சேர்ந்த கலாநிதி கந்தையா ஸ்ரீகணேசன், கலாநிதி அமிர்தாஞ்சலி சிவபாலன் ஆகியோர் ஆய்வு செய்து உரையாற்றினர். கலாநிதி அமிர்தாஞ்சலி சிவபாலன் தற்போது எமது இந்த நூல் குறித்த விரிவான ஆய்வொன்றை, ஆங்கில மூலப்
பிரதியுடன் ஒப்பிட்டு ஒரு கட்டுரை சமர்ப்பிக்க இருக்கிறார் என்பது எனக்கு மகிழ்ச்சி. யாழ் பல்கலைக்கழகத்திலும் மற்றும் ஆர்வலர்களும் எமது 40 ஆண்டு கலை முயற்சி பற்றி அறிந்துகொள்ள மிகவும் ஆர்வம் காட்டினர். நாடகத் துறை விரிவுரையாளர் நவதர்ஷினி கருணாகரன் மற்றும்
தர்மலிங்கம், தேவ் ஆனந்த் ஆகியோரும் வீடியோ நேர்காணல் செய்தனர். பேராசிரியர்கள் மற்றும் பலரும் இளைய சமுதாயம் குறித்தும், கலைச் சூழல் குறித்தும் மிகுந்த கரிசனையுடன் கவலை கொண்டுள்ளனர். தொலைக்
காட்சி நாடகங்களுக்கு அடிமைப்பட்டு கிடக்கும் எமது சமூகம் குறித்தும் பெரும் கவலை தெரிவித்தனர். மூத்த நாடகர் குழந்தை சமுகலிங்கம், கல்விமான் சபாரத்தினம் மாஸ்டர், அலை ஜேசுராஜா, கலை இலக்கிய
பேரவை தேவராஜா, சண்முகம் முத்துலிங்கம், பேராசிரியர் சிவச்சந்திரன், எழுத்தாளர் உடுவை தில்லைநடராஜா ஆகியோருடன் பல வருடங்களுக்கு பின்னர் கலை, இலக்கியம் குறித்து ஆழமான கருத்தாடல் நிகழ்த்த
முடிந்தமை திருப்தியாக இருந்தது. கொழும்பில் இலங்கை ஒலிபரப்பு கூட்டு தாபனம், காலை 7 மணிக்கு ஒரு மணி நேர நேர்காணலை நேரலையாக ஒலிபரப்பியது. ரூபவாகினி, சக்தி டிவி ஆகியன நாடகம் குறித்து எனது நேர்காணல்களிலும் எமது நாடகப் பணி குறித்தும் புகலிட கலைச் சூழல்
குறித்தும் பேசப்பட்டது.மற்றும் பத்திரிகைகள் வீரகேசரி, தினக்குரல் திறமையுள்ள இளம் பத்திரிகையாளர் ஊடகவியலாளர் சிலரை கண்டேன்.ஜீவா சதாசிவம், நிரோஷா தியாகராசா, கலிஸ்ரா, ஹம்சி ஆகியோரைகுறிப்பிடலாம்.

அவுஸ்திரேலியா நாட்டில் சிட்னி நகரில், சிட்னி இலக்கிய பவர் அமைப்பின் மூலம் திரு. குணசிங்கம் ஒழுங்கு செய்த நாடக கலந்துரையாடல் சிறப்பாக நடை பெற்றது. சிட்னி தமிழ் முரசு இணையத்தில் பின்வரும் செய்தி பிரசுரமானது. “உலக நாடகங்கள், தமிழில் சிறுவர் நாடகங்கள், மொழிபெயர்ப்பு நாடகங்கள், தமிழ் நாடகத்துறையின் வளர்ச்சி போன்ற பல விடயங்கள்
இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது. தமிழ் அவைக்காற்றுக் கலைக் கழகம், லண்டன் தமிழ் நாடகப் பள்ளி ஆகியவற்றின் தோற்றத்துக்கும்
வளர்ச்சிக்கும் காரணமான இயக்குனர் பாலேந்திரா, திருமதி ஆனந்தராணி பாலேந்திரா ஆகியோரின் நாடகத்திற்கான சேவையை கௌரவித்து அரங்க கலைகள் சக இலக்கியபவர் பாராட்டியது.” அவுஸ்திரேலியா
ஒலிபரப்பு கூட்டு தாபனம் பாஸ்கரன் மிகவும் என்னோடும், ஆனந்தராணியோடும்  நேர்த்தியான ஒரு நேர்காணலை பதிவு செய்து ஒலிபரப்பினார். நாடகம் குறித்த ஆழமான தேடல் அந்த நிகழ்ச்சியில் வெளிப்பட்டது. மெல்பேர்ன் நகரில் மாவை நித்தியானந்தனின் பாரதி பள்ளி ஒழுங்கு செய்த சந்திப்பில் தமிழில் சிறுவர் அரங்கம் மற்றும்
தமிழ் தொலைக்காட்சி நாடகங்கள் பற்றி விவாதிக்கப் பட்டது. எழுத்தாளர் முருகபூபதி, அண்ணாவியார் இளைய பத்மநாதன், தில்லைகூத்தன் மற்றும் பலர் கலந்து சிறப்பித்தனர். பொதுவாக இலங்கையிலும், அவுஸ்திரேலிய தமிழ் சமூகத்திலும் நாடகம் குறித்த தேடல் இருக்கிறது. சரியான வழியில் ஆற்றுப்படுத்த அனுபவம் மிக்க ஆளுமைகள் தேவை.



NANTRI -  PUTHINAM

No comments: