மலரும் முகம் பார்க்கும் காலம் 14 - தொடர் கவிதை

.
கவிதை 14 எழுதியவர்: திரு.எஸ: தேவராஜாஜேர்மனி

மலரும் முகம் பார்க்கும் காலம்
மண்ணில் நம்வாழ்க்கை கோலம்
ஒளியை காணும் போதெல்லாம்
உள்ளம் தானே மலர்வாகும்

கருவைகொண்டு    உலகைக்கண்டு
உறவைக்கண்ட வாழ்கை
உயிரைத்தந்து உலவவைத்து
மகிழ்வைக்கண்ட  அன்னை-எம்
உயர்வைக்கண்டு மலரும் அவள் முகம்தானே

விழிகள் அழகைக்கானும்போது-புது
விந்தையாய் மனம் அலைமோதும்
விந்தையின்படைப்பாய் இறைவன் எமது
சிந்தையின் பதிவைவைத்தான் பாரும்

அலையை கரையில் அலைய வைத்து
கரையும் காதல் கொள்ள-மனிதன்
மொழியின்  உரையினில் அர்த்தம் தவித்து
காதல் மொழியே கண்கள் பேச
கடவுள் தந்த விசித்திரமே
காதலர் கனவுகள்  நனவுகள் ஆகும்போது - அவர்கள்
மலரும் முகம் பார்க்கும் காலம்  மனம் மலரும்

No comments: