தமிழ் இலக்கணத்தில் மாற்றங்கள் வேண்டும்: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்

.
தமிழ் இலக்கணத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படவேண்டும் என்று இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவருடைய வலைத்தளத்தில் எழுதியிருப்பதாவது:
தமிழ் இலக்கணத்தில் கீழ்க்கண்ட மாற்றங்களை கொண்டுவரலாம். இது என்னுடைய தனிப்பட்ட எண்ணம். கருத்துக்களை வரவேற்கிறேன்.
1. உயிரெழுத்துக்களை இந்த வரிசையில் மாற்றி அமைக்கலாம். – அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஒ, ஓ, ஐ, ஔ, ஃ
குறில், நெடிலாக எழுத்துக்கள் சீராக மாறி வந்து கொண்டிருக்கும்போது, திடீரென இடையில் ஒற்றை நெடில் ‘ஐ’ வரவேண்டிய அவசியமென்ன?


2. வல்லின, மெல்லின, இடையின பிரிவுகளால் என்ன பயன்?
வல்லினம் – க, ச, ட, த, ப, ற         மெல்லினம்  – ய, ர, ல, வ, ழ, ள          இடையினம் – ங, ஞ, ண, ந, ம, ன
இந்தப் பகுப்பினால் எந்தப் பயனும் இல்லை. வல்லின ‘ற’வை வன்மையாகவும், மெல்லின ‘ர’வை மென்மையாகவும் பயன்படுத்த வேண்டும் என்று பேச்சுக்கு சொல்லிக்கொள்ளலாமே ஒழிய, நாம் யாரும் (“யாரும்”) அதை நடைமுறையிலோ, இலக்கிய மேடைகளிலோ கூட பின்பற்றுவதில்லை; பின்பற்ற வேண்டிய அவசியமும் ஏற்படுவதில்லை. அவ்வளவு துல்லிய ஒலி பேதம் இந்தக் குறிப்பிட்ட எழுத்துகளுக்கு கிடையாது  (ல, ள, ழ போன்று).
அதை பின்பற்றித்தான் ஆகவேண்டும் என்று சொல்பவர்கள், அப்படியானால் இந்த ‘ல, ள, ழ’ வை அதுபோன்று மூன்று பகுப்பாகப் பிரித்திருக்க வேண்டும் ஒலி அடிப்படையில். எந்த ‘ல’கரம், ‘ள’கரம், ‘ழ’கரம் என்று குறிப்பிட ஏதுவாக. அதே போல ‘ந’ மற்றும் ‘ன’.
யார் பகுத்தார்களோ தெரியாது, எல்லோரும் அதை அப்படியே ஏற்றுக்கொண்டிருக்கிறோம். என்னைப் பொறுத்த வரை இது பிழையான பகுப்பு. மெல்லினத்தில் இடம் பெறுகிற ‘வ’ ‘வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு’ என்று சொல்லும்போது எவ்வளவு கடுமையாக, வன்மையாக உச்சரிக்கப்பட வேண்டும். அது எப்படி மெல்லினமாகும்? அதேபோல – ‘ள’. ‘வெல்லம்’ என சொல்லும்போது மெல்லின ‘ல’ மென்மையாக இனிமையாக ஒலிக்கிறது. ஆனால் ‘வள்ளல்’ ‘கள்ளி’ என்ற சொற்களில் வருகிற ‘ள’ எப்படி மென்மையாக உச்சரிக்கப்பட முடியும்?  எப்படி அது மெல்லினமாகும்?
இலக்கணத்தில் ஒரு தலைப்பாக மட்டுமே இந்தப் பகுப்பு பயன்படுகிறது. இதை அப்படியே விலக்கிவிட்டால் இழப்போ, மொழிக்கு எந்த பாதிப்போ கிடையாது. நன்மைகள்தான் உண்டு. இலக்கணத்தை சற்று  எளிமைப்படுத்தியதாக இருக்கும். இலக்கணம் படிக்க பயந்து அலறுகிற இளைய சமுதாயத்திற்கு ஒரு சுமை குறைந்தது போலவும் இருக்கும்.
3. பெரியார் சொன்ன சில சீர்திருத்தங்களை மொழியில் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். ஏன் இதை மட்டும் மறுக்கிறோம்?
ஐம்பது, அறுபது, எழுபது, எண்பது, தொண்ணூறு… பத்துக்களில் போய்க் கொண்டிருக்கிற எண்ணிக்கை திடீரென எப்படி நூறானது? இன்னும் நூறு அறிமுகம் ஆகவேயில்லையே. அதேபோல… ஐனூறு, அறுனூரு, எழுனூறு, எண்ணூரு, தொள்ளாயிரம்… ஆயிரத்தை எட்டுவதற்குள் ஆயிரம் எங்கிருந்து நூறுகளுக்குள் வந்தது?
அவர் சொன்ன திருத்தங்கள் –
ஐம்பது, அறுபது, எழுபது, எண்பது, தொண்பது, நூறு.
ஐனூறு, அறுனூரு, எழுனூறு, எண்ணூரு, தொண்ணூறு, ஆயிரம்.

No comments: