தமிழ் சினிமா யட்சன்

.

ஹாலிவுட்டில் வெளிவரும் பல படங்கள் நாவலை அடிப்படையாக கொண்டு தான் எடுப்பார்கள். இந்த கலாச்சாரம் தமிழ் சினிமாவில் மெல்ல மெல்ல தற்போது தான் வளர்ந்து வருகின்றது. இதற்கு எழுத்தாளர்களான சுஜாதா, சுபா, போன்றோர் சினிமாவில் காலடி எடுத்து வைத்ததே முக்கிய காரணம்.
ஆரம்பம் வெற்றிக்கு பிறகு விஷ்ணுவர்தன் மீண்டும் எழுத்தாளர் சுபாவுடன் கைகோர்த்து உருவாக்கியுள்ள படம் தான் யட்சன். இக்கதை தமிழகத்தில் பிரபல வார இதழ் ஒன்றில் தொடர்கதையாக வந்தது குறிப்பிடத்தக்கது.
கதைக்களம்
தூத்துக்குடி சின்னாவாக ஆர்யா, தீவிர தல அஜித் ரசிகர், அஜித் படத்தின் டிக்கெட்டை ஒருத்தன் கிழித்துவிட்டான் என்பதற்காக அவனை யதார்த்தமாக அடிக்க, அவனோ ஒரு கம்பியில் மோதி இறக்கிறார். அதோடு பெட்டிபடுக்கையை எடுத்துக்கொண்டு சென்னை வருகிறார் ஆர்யா.
இதேபோல் பழனியில் இருக்கும் கிருஷ்ணா சினிமா மோகத்தால் சென்னை வருகிறார். ஆர்யா சென்னை வந்ததுமே தம்பி ராமையா அவரை ஒரு பெண்ணை(தீபா சன்னதி) கொலை செய்ய சொல்கிறார். இவரும் காசுக்காக அவரை கொலை செய்ய சம்மதிக்கிறார்.
ஆனால், பார்த்தவுடன் காதல், இருந்தாலும் பணம் முக்கியம் என்று அவரை கொல்ல ஒரு நாளை தேர்ந்தெடுக்க, ஆர்யா, அதே நாளில் கிருஷ்ணாவை, எஸ். ஜே.சூர்யா தன் படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்தவுள்ளார்.
அன்றைய தினம், ஆர்யா ஏற வேண்டிய வண்டியில் கிருஷ்ணாவும், கிருஷ்ணா ஏற வேண்டிய வண்டியில் ஆர்யாவும் ஏற, அதன்பின் இவர்கள் வாழ்க்கை என்னவாகின்றது, தீபா சன்னதியை ஏன் கொலை செய்ய ஒரு கும்பல் துரத்துகின்றது? என்பதை அறிந்தும் அறியாமலும் ஸ்டைலில் செம்ம ஜாலியாக கூறியிருக்கிறார் விஷ்ணுவர்தன்.
படத்தை பற்றிய அலசல்
பெரும்பாலும் நாவலை கதையாக்க வேண்டும் என்றால், மிகவும் ரிஸ்க். ஏனெனில் அத்தனை பெரிய கதையை சுருக்கி 2 மணி நேரத்தில் சொல்வது என்றால் சாதாரணமா? ஆனால், விஷ்ணுவர்தன் அதிலிருந்து ஒரு சில பகுதிகளை மட்டும் உருவி, லாஜிக் எல்லாம் கேட்காதீங்கப்பா...என்று தனக்கே உண்டான ஸ்டைலில் இயக்கியுள்ளார்.
ஆர்யா உண்மையாகவே இவர் ஸ்டைல் கதாபாத்திரத்தை விட லோக்கல் கதாபாத்திரம் தான் பாஸ் மார்க் வாங்குகிறார். மிக இயல்பாக எந்த சீரியஸும் இல்லாத ஜாலியான ஆர்யாவின் ரியல் கதாபாத்திரம் தான் இதிலும்.
கிருஷ்ணா, நன்றாகவே நடிக்கிறார், என்ன கொஞ்சம் அதிகமாகவே நடிக்கிறார். இவருக்கு கிடைக்கும் வாய்ப்பு பறிபோய் நிற்கும் இடத்தில் கூட அழுது புரலாமல், தனக்கு என்ன வருமோ அதை அழகாக செய்துள்ளார். ஸ்வாதிக்கு பெரிய கதாபாத்திரம் ஒன்றுமில்லை, கொஞ்சம் அடவாடி. தீபா சன்னதியை சுற்றி தான் கதையே நகர்கிறது. சொல்லப்போனால் படத்தில் மூன்றாவது ஹீரோவே இவர் தான்.
தம்பி ராமையா, பொன் வண்ணன் எல்லாம் தனக்கே உண்டான ஸ்டைலில் நன்றாக நடித்துள்ளனர். இவர்களுக்கு எல்லாம் மேலாக படத்தில் செம்ம ஸ்கோர் செய்வது இரண்டு பேட். அந்த வில்லன் கேரக்டர் தான். மிக நிதானமாக எதிர்பாராத டுவிஸ்ட் கொடுத்து மிரட்டியுள்ளார்.
அதேபோல் படம் டல் அடிக்கும் போது பூஸ்டாக வந்து நிற்பது RJ பாலாஜி தான். இவர் பேச ஆரம்பித்தாலே ஆடியன்ஸ் சிரிக்க ஆரம்பித்து விடுகின்றனர்.
ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ், படத்திற்கு என்ன கலர் தேவையோ அதை அப்படியே கொண்டு வந்துள்ளார். மிகவும் கலர்புல்லாக இருக்கின்றது. பாடல்களில் பட்டையை கிளப்பியுள்ளார் யுவன். ஆனால், இவரின் ஸ்பெஷலே பின்னணி இசை தான். அதில் கொஞ்சம் நம்மை ஏமாற்றிவிட்டார்.
க்ளாப்ஸ்
படத்தின் இரண்டாம் பாதி செம்ம ஜாலியாக செல்கின்றது, ஆர்யா, கிருஷ்ணாவின் துறுதுறு நடிப்பு, யுவனின் பாடல்கள், குறிப்பாக கிளைமேக்ஸில் வரும் பாடல் தாளம் போட வைக்கின்றது. RJ பாலாஜியின் கவுண்டர் வசனங்கள்.
பல்ப்ஸ்
முதல் பாதி அதிலும் ஏன் சார் அந்த கார் மாறும் சீன் அத்தனை நீளம், லாஜிக் எத்தனை கிலோ என்று தான் கேட்க வேண்டும் போல, வில்லனை அத்தனை மிரட்டலாக காண்பித்து கிளைமேக்ஸில் 4 அடியாட்களுடன் காட்டுவது தான் செம்ம காமெடி.
மொத்தத்தில் யட்சன் அத்தனை பெரிய தொடரை அழுத்தமாக சொல்ல முடியவில்லை என்றாலும், இன்றைய ட்ரண்டிற்கு என்ன தேவையோ அதை அழகாக எந்த லாஜிக்கும் இல்லாமல் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
ரேட்டிங்- 2.75/5    நன்றி cineulagam   






No comments: