.
திரு. விஜயரட்ணம்
![]() |
மறைவு 07.07.2015 |
யாழ்ப்பாணம் சங்கானை/ சித்தங்கேணியைப் பிறப்பிடமாகவும் சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட இளைப்பாறிய MPCS நுகர்வோர் சங்கப் பொதுமுகாமையாளரும் சமூக ஆர்வலருமான திரு. விஜயரட்ணம் அவர்கள் இன்று 7.7.15 காலை சிவபதம் அடைந்தார்.
இவர் காலம் சென்ற திரு இலகுப்பிள்ளை திருமதி செல்லம்மா அவர்களின் அன்பு மகனும், காலம் சென்ற திரு. தம்பாபிள்ளை திருமதி மனோன்மணி ஆகியோரின் பாசமிகு மருமகனும், கனகாம்பாள் அவர்களின் அன்புக்கணவரும், விஜயசீலன், செல்வலக்சுமி, விஜயமுகுந்தன் ஆகியோரின் அன்புமிகு தந்தையும், சுமதி, சரவணபவானந்தன், விஜித்தா ஆகியோரின் அன்பு மாமனாரும், ஆரணி, விஜயராம் , சிவாயன் , விஜயாள, வித்தகனின் பாசத்துக்குரிய பேரனும், காலம் சென்ற செல்வரஞ்சிதம் றெளடேந்திரன் சிட்னி ,விஜயபாலன் லண்டன், விஜயகுமாரி லண்டன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் நாளை 8.7.15 புதன்கிழமை மாலை 6:30 தொடக்கம் 8:30 மணிவரை Strathfield நகரமண்டபத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும்.
இறுதிக்கிரியைகள் 9.7.15 வியாழக்கிழமை Rookwood மயானத்தில்10:30 – 2:00 மணிவரை East Chapel இல் இடம் பெறும்.
உற்றார் ,உறவினர் , நண்பர்கள் இவ்வறிவித்தலை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.
தொடர்புகளுக்கு - முகுந்தன் விஜய் 0402 208 127 / 0450 126 102
No comments:
Post a Comment