தமிழ் சினிமா


இன்று நேற்று நாளை 
ஒரு Time Machine, கிடைத்தால் இறந்தகாலம் எதிர்காலம் என எந்த காலத்திற்க்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்றால் நாம் என்ன என்ன செய்யலாம், யோசிக்கும் போதே சுவாரஸ்யமாக இருக்கிறதல்லவா? அப்படிப்பட்ட சுவாரஸ்யமான கதைக்களத்தை தனது முதல் படத்திலேயே எடுத்துக்கொண்டு நம்மை ஒரு Fantasy உலகத்துக்குள் அழைத்து சென்றுள்ளார் அறிமுகஇயக்குனர் ரவிகுமார்.
படத்தின் கதை
2065ல், அதாவது எதிர்காலத்தில் ஆரம்பிக்கிறது அந்த காலத்தில் உள்ள விஞ்ஞானி ஆர்யா ஒரு Time Machineனை உருவாக்கி அதை பரிசோதித்து பார்க்க நம் நிகழ் காலத்திற்க்கு (2015)அனுப்புகிறார். அது தவறுதலாக ஹீரோ விஷ்ணு, அவரது நண்பர் கருணாகரன் அவர்களுடன் விபத்தில் நண்பாராகும் local விஞ்ஞானி கார்த்திக் ஸ்ரீனிவாசன் அவர்கள் கையில் கிடைக்க, பிறகு அதை வைத்து அவர்களுக்கு தோன்றியதெல்லாம் செய்ய அது ஒரு கட்டத்தில் இவர்களுக்கே பாதகமாக முடிகிறது.
பின் அந்த பிரச்சனைகளை எல்லாம் எப்படி தீர்க்கிறார்கள், அந்த time machineக்கு என்ன ஆனது, காதல் கைகூடியத இல்லையா வில்லன் என்னவானார் என்று மிக சுவாரஸ்யமாக நகர்கிறது படத்தின் மீதி கதை.
1895 H G Wells என்பவரின் நாவல்தான் முதல் முதலாக time machine பற்றி வந்த படைப்பு . அதன் பின் ஹாலிவுட்டில் நிறைய படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் ”இன்று நேற்று நாளை” தான் தமிழில் வந்த முதல் time machine பற்றிய படம். காதல், ஆக்ஷன் அல்லது பேய் இது போன்ற கதைகளங்களையே பொதுவாக தனது அறிமுகத்துக்கு தேர்தெடுக்கும் நேரத்தில் தனது முதல் படத்திலேயே இது போன்ற ஒரு fantasy கதையை எடுத்து அதிலும் வெற்றியடைந்திருக்கிறார் இயக்குனர் ரவிகுமார்.
நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள்
தனது ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுக்கும் விஷ்ணு இப்படத்தில் தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார், சொந்த தொழில் செய்யவேண்டும் என்ற இளைஞனாக வரும் இவர், கையில் time machine கிடைத்தவுடன் அதை வைத்து தனது தொழிலிலும் காதலிலும் வெற்றியடைய இவர் முயற்சிக்கும் காட்சிகளில் பவுண்டரிகளாக விளாசுகிறார்.
தவறுதலாக கடந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட செயலை மாற்றி பின் இவர் அதை சரி செய்ய முயற்சிக்கும் போது நமக்கு “generator” start ஆகிறது.
மியா ஜார்ஜுக்கு தமிழில் இரண்டாவது படம், ஒரு பொறுப்பான காதலியாக, அன்பு மகளாக வந்து நம் மனதை கவருகிறார். Welcome back மியா!
ஜோசியராக வரும் கருணாகரனின் சரவடி comedyகளுக்கு பஞ்சமே இல்லை, ஜோசியர் தேர்வு எழுதும் காட்சியிலும், சீரியஸான காட்சிகளிலும்கூட இவர் அடிக்கும் counterகளுக்கு அரங்கமே சிரிப்பொலியில் அதிர்கிறது மொத்ததில் இவரின் நடிப்பு ”அமோகம்”. குழந்தை”னு பெயர் வைத்துக்கொண்டு மிரட்டி தள்ளுகிறார் வில்லன் சாய் ரவி.
பாடல்களிலும் பின்னணி இசையிலும் ஹிப்ஹாப் தமிழா You are Rocking! ஒளிப்பதிவாளர் A. வசந்த் தனது கேமரா மூலம் படத்திற்க்கு எவ்வளவு பலம் சேர்க்க முடியுமோ அதை முழுமையாக செய்துள்ளார். சற்று பெரிய படமென்றாலும் தனது எடிட்டிங் மூலமாக ரசிகர்களை சீட்டின் நுனிக்கு வரசெய்திருக்கிறார் லியோ ஜான்பால். இது Sci-Fi படம் என்பதால் vfxன் பங்கு மிக அதிகம், இதிலும் இப்படத்தின் குழு வெற்றியடைந்துள்ளது!
க்ளாப்ஸ்:
படத்தின் சுவாரஸ்யமான கதையும் அதற்க்கு ஏற்றவாறு நகரும் திரைக்கதையும். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரையும் ஒரே கோட்டில் பயணிக்க செய்த இயக்குனரின் வழிநடத்தல்.
பல்ப்ஸ்:
இரண்டாம் பாதி சற்றே நீளம், லாஜிக் உள்ளதா என்று யோசிக்க வைக்கும் சில இடங்கள்.
நேற்று பற்றிய வருத்தத்தையும் நாளையை பற்றிய பயத்தையும் போக்க இன்று நாம் எடுக்கும் முடிவுகளே முக்கியம் என முன்மொழிகிறது இந்த “இன்று நேற்று நாளை”

Rating: 3.5/5

நன்றி cineulagam
No comments: