.
இலங்கை
மாணவர் கல்வி நிதியம் (இணை) அவுஸ்திரேலியா
27 ஆவது ஆண்டுப்பொதுக்கூட்டம் 02-08-2015
ஞாயிற்றுக்கிழமை
அவுஸ்திரேலியாவில்
1988 ஆம் ஆண்டு முதல்
இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின்
27
ஆவது ஆண்டுப் பொதுக்கூட்டம் எதிர்வரும் 02-08-2015 ஆம் திகதி
ஞாயிற்றுக்கிழமை
மாலை 4.30
மணிக்கு மெல்பனில்
VERMONT
SOUTH COMMUNITY HOUSE
(Karobran Drive,Vermont South,Victoria 3133)
மண்டபத்தில் நடைபெறும்.
நிதியத்தின் தலைவர் திரு.விமல். அரவிந்தன் தலைமையில் நடைபெறவுள்ள 27
ஆவது ஆண்டுப்பொதுக்கூட்டத்தில் நிதியத்தின் உறுப்பினர்களின் ஒன்றுகூடலும் தகவல் அமர்வும்
இடம்பெறும்.
இலங்கையில்
நீடித்த போரில் பெற்றவர்களை இழந்த ஏழைத்தமிழ்
மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக 1988
ஆம் ஆண்டு
தொடங்கப்பட்ட நிதியம் இதுவரையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவியுள்ளது.
நூற்றுக்கணக்கான மாணவர்கள் நிதியத்தின் உதவியினால் பல்கலைக்கழக
பட்டதாரிகளாகியிருப்பதுடன் மேலும் பல
மாணவர்கள் அரச மற்றும் தனியார்
துறைகளிலும் பணியாற்றுகின்றனர்.
இலங்கையில் வடக்கு
கிழக்கு மற்றும் தென்னிலங்கைக்கு இடம்பெயர்ந்த மாணவர்களுக்கும் இலங்கை மாணவர்
கல்வி நிதியம் உதவிவருகிறது. மேலும்
பல மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு
நிதியம் உதவவேண்டியிருப்பதனால் மேலதிக விபரங்களை
பெற்றுக்கொள்வதற்காகவும் 27 ஆவது ஆண்டுப்பொதுக்
கூட்டத்தில் தகவல் அமர்வும் ஓழுங்கு செய்யப்பட்டுள்ளது. மேலதிக
விபரங்களுக்கு :
திரு.
விமல் அரவிந்தன் ( தலைவர்)
0414 446
796
திருமதி.
சத்தியா சிவலிங்கம் (செயலாளர்) 0432
281 961
திருமதி.
வித்தியா ஸ்ரீஸ்கந்தராஜா ( நிதி;ச்செயலாளர்
) 0404
808 250
திரு.
லெ.முருகபூபதி (துணை நிதிச்செயலாளர்) 0416
625 766
No comments:
Post a Comment