இந்து கலைஞர் சம்மேளன கருத்தரங்கு
பொதுத் தேர்தலில் போட்டியிடுவேன், புதிய அரசாங்கத்தை அமைப்பேன்: மெதமுலன்னவில் மஹிந்த
சு.க.வில் போட்டியிடுவதற்கு சந்திரிகா தீர்மானம்
கொழும்புக்கு வேலைக்குச் சென்ற குடும்பஸ்தரைக் காணவில்லை : பொலிஸில் முறைப்பாடு
பிரசன்ன ரணதுங்கவின் மனைவியிடம் விசாரணை
இந்து கலைஞர் சம்மேளன கருத்தரங்கு
30/06/2015 2015 ஜுன் 02ம் திகதி பௌர்ணமி தினத்தன்று கொழும்பில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட இந்து கலைஞர் சம்மேளன செயல்பாட்டு வடிவத்தில் முதல் அம்சமாக நாளை முதலாம் திகதி புதன் கிழமை மாலை 4.00 மணிக்கு கொழும்பு - 13 ஸ்ரீ கதிரேசன் வீதி விஷ்வகர்ம மண்டபத்தில் 'இந்துக்கலைகள்' பற்றிய கருத்தரங்கு நடைபெறவிருக்கிறது.
இக்கருத்தரங்கில் இந்து கலைஞர்களையும் நலன்விரும்பிகளையும் இந்து கலை ஆர்வலர்களையும் கலந்து கொள்ளுமாறு இந்து கலைஞர் சம்மேளனத்தினர் அன்புடன் கேட்டுக்கொள்கிறார்கள். நன்றி வீரகேசரி
பொதுத் தேர்தலில் போட்டியிடுவேன், புதிய அரசாங்கத்தை அமைப்பேன்: மெதமுலன்னவில் மஹிந்த
01/07/2015 எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு புதிய அரசாங்கத்தை அமைப்பேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மெதமுலன்னவில் இடம்பெற்ற விசேட நிகழ்விலேயே மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கும் சுதந்திரக்கட்சியின் முன்னாள் எம்.பி.க்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் தலைவர்கள் உட்பட பெருமளவான ஆதரவாளர்களும் பங்கேற்பார்கள் கலந்து கொண்டனர்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பின்னரும் மக்கள் எமக்கு தொடர்ந்து ஆதரவையும் ஆசிர்வாதத்தையும் வழங்கி வருகின்றனர். இதற்காக நான் நன்றி தெரிவிக்கின்றேன்.
ஜனாதிபதி தேர்தலில் நீங்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்கொண்டு புதிய ஜனாதிபதிக்கு சரியான முறையில் இடம்கொடுத்தேன். வரலாற்றில் எந்த தலைவரும் இவ்வாறு செய்து இருக்க மாட்டார்கள். ஆனால் எனக்கு எதிராக பொய்யான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் போயா தினமான இன்றைய நன்நாளில் என்னுடைய ஊருக்கு வந்துள்ள உங்களின் கோரிக்கையே நான் ஒரு போதும் மறுக்க மாட்டேன். உங்களுடைய கோரிக்கைகளுக்கு நான் மதிப்பளிக்கின்றேன். எனவே எதிர்வரும் பொதுத் தேர்தலில் நான் போட்டியிட்டு புதிய அரசாங்கத்தை அமைப்பதோடு நாட்டில் தடைப்பட்டிருக்கும் அபிவிருத்திகளை முன்னெடுத்து மக்களுக்கு பாரிய சேவை செய்வேன்.
மேலும் பயங்கரவாதிகளுக்கு பண உதவிகளை வழங்க அமைச்சரவையில் தீர்மானங்களை கொண்டு வந்தார்கள். ஆனால் அந்த தீர்மானத்து ஆதரவு வழங்கப்படவில்லை.
அவ்வாறு அந்த தீர்மானத்துக்கு ஆதரவு வழங்கப்பட்டிருந்தால் உலகத்திலேயே முதன் முதலாக பயங்கரவாதிகளுக்கு பண உதவி செய்த முதல் நாடாக எமது நாடு காணப்பட்டிருக்கும்.
எனவே நாட்டை அழிவுப்பாதையில் இருந்து மீட்க நாம் முன் வரவேண்டும். யார் எதனை சொன்னாலும் அதனை கருத்தில் கொள்ளாமல் உங்களின் கோரிக்கையை மதித்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு புதிய அரசாங்கத்தை அமைப்பேன்.
கட்சித் தலைவர்களும் நாட்டு மக்களும் சமயத் தலைவர்களும் என்னை மீண்டும் அழைப்பது பழிவாங்குவதற்காக அல்ல. நாட்டை பாதுகாப்பதற்காகும். நன்றி வீரகேசரி
சு.க.வில் போட்டியிடுவதற்கு சந்திரிகா தீர்மானம்
01/07/2015 பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நேற்று அவசரமாக தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதியின் இந்த தீர்மானத்தை அவரது செயலாளர் பீ.திஸாநாயக்கவும் உறுதிப்படுத்திய நிலையில், அவர் கம்பஹா மாவட்டத்தில் இருந்து போட்டியிடலாம் எனவும் அது தொடர்பிலான அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் வேட்பு மனு வழங்கப்படவுள்ளதாக பரவிய செய்திகளை அடுத்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவும் போட்டியிட தீர்மானித்ததாக அரசியல் தகவல்கள் சுட்டிக்காட்டின. எவ்வாறாயினும் இந்த முடிவு குறித்து கருத்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் செயலாளர் பீ.திஸாநாயக்க,
தற்போதுள்ள நிலைமையில் சந்திரிக்கா அம்மையாருக்கு பிரதமர் வேட்பாளராக போட்டியிடுமாறு பலமான கோரிக்கை உள்ளது. எனினும் அவர் அதனை இன்னும் ஏற்கவில்லை. தான் செயற்பாட்டு அரசியலை கைவிட்டுவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ள நிலையிலேயெ இதனை நாம் குறிப்பிடுகின்றோம்.
எனினும் தோல்வியடைந்த அபேட்சகர் ஒருவர் களமிறங்குவதானால் அவர் தனக்குள்ள வாக்குப் பலத்தை காரணம் காட்டுவதாக இருந்தால் 1994 ஆம் ஆண்டு சந்திரிக்காவுக்கு 63 வீதமான மக்கள் ஆணை உள்ளது. அத்துடன் அவர் தோல்வியடையவில்லை. தோல்வியடைஒயாதவர். அதனால் அவருக்கு போட்டியிட பூரண உரிமை உண்டு. இந்த கட்சி அவரது தந்தையால் உருவாக்கப்பட்டது. அதனைப் பாதுகாக்குமாறு பலரும் அழைப்பு விடுக்கின்றனர். இந் நிலையில் அவர் தேர்தலில் களமிறங்குவார். இதனை நான் பொறுப்புடன் கூருகின்றேன்.
அவர் பெரும்பாலும் கம்பஹா மாவட்டத்திலேயே களமிறங்குவார். எனினும் தற்போதைக்கு அதனை வெளியிட வேண்டிய அவசியம் இல்லை. சுதந்திர கட்சிஇ ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிலேயே அவர் களமிறங்கு8வார். தோல்வியடைந்த ஒருவரின் வாக்குப் பலத்தைக் காட்டி அவரை களமிறக்கினல் அதனை விட தோல்வியடையாத முன்னள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்குள்ள மக்கள் ஆணை மிக முக்கியமானது. அவருக்கு எதிராக எந்த குற்றச் சாட்டுக்களும் இல்லை. அப்படியானால் அவர் மிகவும் தகுதியானவர். அதன்படி அவர் போட்டியிடுவது குறித்து மிக விரைவில் அறிவிப்பார் என எதிர்ப்பார்க்கின்றேன். என்றார். நன்றி வீரகேசரி
கொழும்புக்கு வேலைக்குச் சென்ற குடும்பஸ்தரைக் காணவில்லை : பொலிஸில் முறைப்பாடு
02/07/2015 கொழும்புக்கு வேலைக்குச் சென்ற குடும்பஸ்தரை 14 தினங்களாகக் காணவில்லை என்று அவரது மகன் ராசகுமார் சேருவில பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த சூரநகரில் வசிக்கும் சூரநகர் முதியோர் சங்கச் செயலாளரான கந்தவனம் நவரெட்ணம் (வயது 59) என்பவரே கடந்த ஜுன் மாதம் 16 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார்.
சூரநகரிலிருந்து இவரை தொழிலுக்காக அழைத்துச் சென்ற கணபதிப்பிள்ளை தருமலிங்கம் என்பவர் கொழும்புக் கோட்டை யிலுள்ள இடமொன்றில் இவருக்கு தொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்துள்ளார். அவ்வாறிருக்கும் போது கடந்த 18 ஆம் திகதி முதல் இவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடுசெய்யப்பட்டுள்ளது.
கடைசியாக அவரிடம் 600 ரூபாய் பணம் மீதியாக இருந்துள்ளது. அந்தப் பணம் அவர் சூரநகரிலிருந்து கொழும்புக்குச் சென்றபோது எடுத்துச் சென்றதாகும் எனவும் அந்தப் பணத்தை அவர் திருடியுள்ளதாகக் கூறி அவரது முதலாளி அவரிடம் முரண்பட்டதாகவும் அதன் பிறகே தனது தந்தை காணாமல் போனதாகவும் அவரது மகன் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். நன்றி வீரகேசரி
பிரசன்ன ரணதுங்கவின் மனைவியிடம் விசாரணை
02/07/2015 முன்னாள் மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் மனைவியிடம் நிதி குற்ற விசாரணை பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காணி விவகாரம் தொடர்பிலேயே இவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment