’தில்லை என்னும் திருத்தலம்’ சிட்னியில் வெளியீடு - --- அன்பு ஜெயா

.

விரைவில் ஆங்கிலப் பதிப்பு ” The Lord of Dance”
  

 தமிழ் அவுஸ்திரேலியன் ஆசிரியர் கலாநிதி சந்திரிகா சுப்ரமண்யன் எழுதிய தில்லை என்னும் திருத்தலம் நூல் வெளியீடு முதல் முறையாக மக்கள் பயனுக்காக சிட்னியில் 28-6-2015 அன்று இடம் பெற்றது. விழாவினை தமிழ் வளர்ச்சி மன்றம் எற்பாடு செய்திருந்தது. நிகழ்ச்சியை செல்வி மாதுமை கோணேஸ்வரன் தொகுத்து வழங்கினார்.

தமிழ் கலை , பண்பாட்டுக் கழகத் தலைவர் திரு அனகன் பாபு நூலாசிரியரை அறிமுகம்  செய்து வைக்க,  சிவஸ்ரீ சிவசண்முகக் குருக்கள் ஆசியுரையுடன் விழா தொடங்கியது. பாலர் மலர் தமிழ்ப் பள்ளியின் திரு அண்ணா சுந்தரம் நூலை அறிமுகம் செய்து வைத்த போது  இன் நூலைப் படிக்கும் அனைவருக்கும் ஒரு முறை தில்லை செல்லவேண்டும் என்ற என்ற அவா எழும், படித்த போது  ஒரு முறை அக்கோயிலை சுற்றி வந்த அனுபவம் கிடைத்தது”, என்றார். தலைமை உரை ஆற்றிய ஹோம்புஷ் தமிழ்ப் பாடசாலை அதிபர் திரு திருநந்த  குமார், ”பல அரிய விடயங்களை ஆய்வு செய்து இந்த நூல் எழுதப்பட்டுள்ளது என்று பாராட்டினார்.



நூலை வைத்தியக் கலாநிதி திரு மனோமோகன் வெளியிட முதல் பிரதியை பேரசிரியர் கலாநிதி ஸ்ரீரவிந்திரராஜா ராசய்யா பெற்றுக்கொண்டார்.
ஏற்புரையை வழங்கிய நூலாசிரியர் வழக்குரைஞர்  சந்திரிகா சுப்ரமண்யன் நூலை நாற்பதே நாட்களில் எழுதி முடிக்க இறை சித்தம் கூடிய சுகானுபவத்தையும் , தில்லை குடமுழுக்கில் வெளியிட்ட அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார். நன்றியுரையை  தமிழ் வளர்ச்சி மன்றத் தலைவர் திரு அன்பு ஜெயா வழங்கினார்.   

விழாவிற்கு தமிழ் மூத்தோர் சங்கத்தின் உறுப்பினர் பெருந்தொகையாக வந்திருந்தனர். நூல் வெளியீடு ஒன்றில் நிற்க இடமின்றி அரங்கு நிரம்பியிருந்தது ஆரோக்கியமான அம்சமாகும்.










No comments: