.
பைரவி,
வைஷ்ணவி சகோதரிகளின் அரங்கேற்றம் 20 ஆம் திகதி
ஜூன் மாதம் 2015 இல் U.N.S.W Science அரங்கில் வெகு விமரிசையாக நடந்தேறியது . சிறிது கால
தாமதமாகவே மண்டபத்தில் நுழைந்தோம். இரு அழகிய பெண்கள் ஜொலித்த வண்ணம் ஆடிக்கொண்டு
இருந்தனர். அவர்கள் அணிந்திருந்த வெண்ணிற ஆடை அவ்வாறு ஜொலிக்க வைத்தது. இருவருமே நேர்த்தியான
உடற்கட்டும் அழகிய முகமும் இறைவன் கொடுத்த வரம்., அங்க சுத்தமாக கல்யாணி இராகத்தில்
அமைந்த ஜதீஸ்வரத்தை ஆடிக்கொண்டிருந்தனர். கலாஷேத்திராவின் பாணியில் அமைந்த ஆடல், சாந்தா தனஞ்சயன் தம்பதியர்
ஆடிய அதே உருப்படி. பல வருடங்கட்கு முன் பார்த்தாலும் மனதில் பதிந்துவிட்டது. பிரேமா
அனந்தகிரிஷ்னனும், சுருதி பாலாஜியும் தனித்தும் இணைந்தும் பாடினார்கள். இத்தனை அருமையான
பாடகர் அரங்கேற்றத்துக்கு பாடக் கிடைத்தமை பாக்கியமே.
அடுத்து
ஆடிய வர்ணம் நாட்டை குறிஞ்சி இராகத்தில் பாபநாசம் சிவன் ஆக்கிய "சுவாமி நான் உந்தன்
அடிமை" இரு பெண்களும் உணர்ந்து இரசித்து ஆடினார்கள். சஞ்சாரி பாவத்தில் மார்கண்டேயர் ,
நந்தனார் கதைகள் இணைந்தமை அருமையாக இருந்தது.
பத்மா பாலகுமார் நன்றாகவே நெறிபடுத்தி
இருந்தார். இரு மாணவிகளின் திறமையையும் இணைத்தும்
தனித்தும் வெளிக் கொணர்ந்திருந்தார். இடைவேளையின் பின் நிகழ்ச்சி "ஏன் பள்ளி கொண்டீர்
ஐயா " ஸ்ரீ ரங்கநாதரின் மேல் ஆன பதம். காலம் தான் எவ்வாறு மாறி விட்டது? நாற்பத்தைந்து
வருடங்கட்கு முன் அபிநய அரசி பாலசரஸ்வதி அம்மையார் பக்தி பெருக உருகி ஆடினார். காலத்தின்
ஓட்டத்திலே இன்று யாரும் பக்தி ரசம் பொழிய ஆடுவது கிடையா. முன்பெல்லாம் பதம் ஆழ்ந்த உணர்வை வெளிப்படுத்த ஆடப்படுபவை. பார்போரும்
அதில் இணைந்து உணர்பவர்களே. இன்றோ எதிலும் வேகம், பதத்திலும் வேகம் வேண்டும் என்ற உணர்வு.
இந்த பின்னணியிலேயே பத்மா பாலகுமார் நடனத்தை நெறியாண்டுள்ளார்.
போட்டோ செ .பாஸ்கரன் |
பாடலில்
ஸ்ரீ ரங்கநாதன் பள்ளி கொண்டதற்கான காரணம் களைப்பா? வெவ்வேறு லீலைகள் புரிந்த களைப்போ
என்பதே பொருள். நடனத்தில் வெவ்வேறு லீலைகளும் காட்சிப்படுத்தப் பட்டிருந்தது. இரசிக்கும்
படியாக அமைந்திருந்தது. ஒவ்வொரு லீலைகளை அடுத்தும் நாட்டியத்திற்கு சம்மத்தம் இல்லாது
வாத்திய இசையுடன் ஒரு அடவுக் கோர்வைக்கான ஆடல் விறுவிறுப்பு ஊட்ட அமைக்கப் பட்டிருந்தது.
இது தான் காலத்தின் மாற்றம். இவ்வாறு அமையாவிட்டால் ஒரு சமையம் பார்வையாளருக்கு சலிப்பு
தட்டி இருக்கும். அப்படிப்பட்ட ரசிகருக்கே இன்று கலைஜர்கள் ஆடி வருகிறார்கள்.
காவடி
சிந்தில் அமைந்த "அழகு தெய்வமாக வந்து" முருகனை போற்றும் ஆடல் ஆடிய இளையவர்
வைஷ்ணவி இரசித்து ஆடி பார்வையாளர்களை குதூகலத்தில் ஆற்றினார்.
போட்டோ செ .பாஸ்கரன்
பைரவி
தனித்தாடியதோ "ஸ்ரீ சக்ரராஜ சிம்மாசனேஸ்வரி" இது பைரவியின் தெரிவு, அவர் ஆட
விரும்பியதாக அறிவிப்பாளர் கூறினார். அந்த பாடலைக் ஆழ்ந்து உணர்ந்து ரசித்து இரட்சிக்கும்
தெய்வமாம் அம்மனை கண் முன் கொணர்ந்தார். அமைதியும் அன்பும் அங்கு மிளிர்ந்தது. இதை
பைரவியின் குணமாகவே உணர்ந்தேன். முழுக் கச்சேரியிலும் இதை உணர்ந்தேன். மூத்தவர் பைரவியின்
அமைதி சாந்தம் நிறைந்த ஆடலையும் இளையவர் வைஷ்ணவியின் துருதுருக்கும் தன்மை நிறைந்த
ஆடலும் இணைவது ஒரு நல்ல சோடி சேர்க்கையே. இதை உணர்ந்த பத்மா பாலகுமார் அதற்கேற்ப நெறியாள்கையை
கையாண்டு வெற்றிபெற்றுளார்.
பிரதம
விருந்தினராக வருகை தந்த கௌரி பிரவீன் தேர்ந்த நர்த்தகி. நடனம் பற்றி சுருக்கமாக அழகாக
பேசி மாணவிகளையும் ஆசீர் வதித்தார். தானே ஆடற்கலைஞராக இருப்பதால் நடனத்தின் நெளிவு
சுளிவுகளை புரிந்தவர். நிச்சயமாக இவர் பைரவி வைஷ்ணவிக்கு வழிகாட்டியாக அமைவார். உறவுக்காரர்
அல்லவா. நடன அரங்கேற்றத்திற்கு இவ்வாறு நடனம் தெரிந்தவரை பிரதம விருந்தினராக அழைத்தமை
சாலவும் பொருந்தும்.
நடனத்திற்கு
அணிசெய் கலையர்களாக தேவகி விக்னேஷ் வேணு கானத்தில், இராகத்தை ஆரம்பிக்க வயலினில் பாலாஜி
ஜெகநாதன் தொடர இசைக் கலைஞ்சர் பிரேமா ஆனந்தக்ரிஷ்ணன் தொடர்ந்து ராகம் பாடி பாடலை ஆரம்பிக்க
ஒவ்வொரு உருப்படிக்கும் மகுடம் வைத்தாற்போல் இது அமைந்தது. கேட்டோம், ரசித்தோம் மெய்மறந்தோம்.
மிருதங்க கலைஞராக ஜனகன் சுதந்திரராஜ் அனாயாசமாக வாசித்து தேர்ந்த அனுபவம் மிக்க கலைஞராக
மிளிர்ந்தார்.
அரங்க
கலைக்கு ஒலி ஒழி அமைப்பு இன்றி அமையாது. பத்மஸ்ரீ அவர்களின் செவிப்புலன் இசை நாதத்திற்கு
பழக்கப்பட்டது. இதை மரபணுவிலே பெற்றவர் இவர். அவர் அதனாலே நல்ல தேர்ந்த இசை கலைஞரின்
அங்கீகாரம் பெற்றவர். ஈசன் கேதீசன் அழகிய நடனத்தை புரிந்து உணர்ந்து தன் ஒளி அமைப்பால் நடனத்தை மேலும் ஒளிரச் செய்தார். அத்தனையும் ஒருங்கிணைந்து
நடன அரங்கேற்றம் மங்கள கரமாக நிறைவேறியது.
பைரவி,
வைஷ்ணவி அரங்கேற்றம் யாவரும் பாராட்டும் வகையாக அமைந்தது. தொடர்ந்தும் அவர்கள் கலை
வளர அவர்களை வாழ்த்துகிறேன்.
No comments:
Post a Comment