தமிழ் சினிமா


இனிமே இப்படித்தான்


”கண்ணா லட்டு தின்ன ஆசையானு” கேட்டவங்க, சந்தானத்துக்கு கிட்ட ”கண்ணா 2 வது லட்டு தின்ன ஆசையானு” கேட்க உருவானதுதான் “இனிமே இப்படிதான்”.
கதை
படத்தின் Trailer கூட தேவையில்லை படத்தின் Poster வைத்தே கதை சொல்லிறலாம். 1980களில் சிவக்குமார், பாக்கியராஜ், மோகன் போன்ற காதல் மன்னர்கள் எடுத்து அதிலும் வெற்றியடைந்த கதைக்களம் தான் ( பின் குறிப்பு : இது 2 மனைவி கதை அல்ல). ”வெறும் வாயிலே வடை சுடுற” மாதிரி இருக்கும் ஒரு பையன் (சந்தானம்). “பார்த்த ஒரு லுக்”கிலயே ”அத்தனை அழகையும்” ”தேடி ஓடி” ”ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால்” வைக்கறார் சந்தானம். பிறகு என்ன நடந்தது என்பதுதான் கதை.
படத்தை பற்றிய அலசல்
ஒரு பெண்ணை காதலித்து இன்னொரு பெண்ணை நிச்சயம் செய்து விழிபிதுங்கும் கதையின் நாயகனாக வரும் சந்தானம் பட்டைய கிளப்புகிறார். முகத்தோற்றம், உடல்தோற்றம், சிகையலங்காரம், உடை, நடனம், சண்டை காட்சி என ஹீரோவிற்கான அனைத்தையும் மெருகேற்றியிருக்கார். காதலை propose பண்ணும் காட்சியிலும் சரி, காதலியை துரத்தி துரத்தி காதலிக்கும் காட்சியிலும் சரி நம்ம ஊர் பசங்களுக்கு புது Trend ஏற்படுத்தி கொட்டுக்கிறார், interval முன் வரும் காட்சியிலும் Restaurants காட்சியிலும் அரங்கமே சிரிப்பொலியில் அதிருகிறது.
பின் “காதலிக்கவில்லைனு prove பண்ணு”னு சொல்லும் காட்சியில் ”அடங்கப்பா இது உலக நடிப்புடா சாமி”. ”மெகா சீரியல் பாத்து அழுகுற பொம்பளைகள விட கல்யாண CD பாத்து அழுகுற ஆம்பளைங்கதான் அதிகம்” ”மரமே இப்படி இருந்தா மாங்கா எப்படி இருக்கும்” இது போன்ற சிரிப்பு Punch வசனங்ளுக்கு பஞ்சமே இல்லை. மொத்ததில் சந்தானம் ஹீரோவாக "BACK WITH A BANG".
படத்தில் வரும் இரு ஹீரோயின்களுக்கும் பொருத்தமான கதாபாத்திரங்கள். சந்தானத்தை பார்க்கும் முதல் காட்சியிலேயே அறைவது முதல் சந்தானத்தை மிரட்டுவது வரை கலக்கியுள்ளனர். பாடல் காட்சிகளில் கவர்ச்சியை அள்ளி தெளித்திருக்கிறார் ஆஷ்னா, மொத்தத்தில் “BOLD AND BEAUTIFUL". குடும்ப பெண்ணாக வரும் அகிலா, வரும் கொஞ்ச காட்சிகளிலும் அவரின் கதாபாத்திரத்தை நிலை நிறுத்தியிருக்கிறார்.
படத்தின் மற்றொரு தூண் தம்பி ராமையா, சந்தானத்தோடு தாய் மாமாவாக வந்து இவர் செய்யும் காரியங்களும், கொடுக்கும் யோசனைகளும் ”அதிரி புதிரி” குறிப்பாக சந்தானத்தை ஆண்மை சோதனைக்கு அழைத்து செல்லும் காட்சியில் பொறுப்பான ”மாமா”வாக நடந்து கொள்கிறார். ladies tailor ஆக வரும் VTV கணேஷ் ஆங்காங்கே சிரிக்க வைக்க உதவியிருக்கிறார்.
முழு நீள நகைச்சுவை கதையை எடுத்து அதை சரியாக கையாண்ட படத்தின் இயக்குனர்கள் முருகன் ஆனந்த் இருவருக்கும் பாராட்டுக்கள். பாடல்கள் எல்லாம் ஏற்கனவே பட்டி தொட்டியெல்லாம் ஹிட்டான நிலையில் பின்னணியிலும் பின்னியிருக்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி. நாயகன், நாயகிகள், துணை நடிகர்கள் என அனைவரையும் மிக அழகாக காட்டிய கோபி ஜகதீஸ்வரனின் கேமரா, பாடல் காட்சிகளை மேலும் மெருகேற்ற உதவுகிறது. படத்தின் நீளத்தை குறைத்து, படத்தின் சுவாரஸ்யமாக கொண்டு செல்ல அந்தோனி L ரூபனின் editing பக்க பலமாக உள்ளது.
க்ளாப்ஸ்:
தனக்கு என்ன வருமோ அதை அழகாக வெளிக்காட்டி இருக்கிறார் சந்தானம். ரசிகர்களுக்கு என்னவெல்லாம் பிடிக்குமோ அதை அப்படியே கொடுத்திருக்கிறார்கள் படக்குழுவினர். படம் முழுவதும் நம் stress மறைந்து போகும் அளவிற்கு சிரித்து கொண்டே இருக்க வைக்கும் வசங்கள். படத்தின் Climax Twist யாரும் எதிர்பாராதது.
பல்ப்ஸ்:
பல படங்களில் பார்த்த அதே cleache காட்சிகள். காதலில் பொண்ணுங்கள மட்டும் குத்தம் சொல்லி கலாய்ப்பதை குறைத்து இருக்களாம். படத்தில் யார் எந்த வேலை செய்கிறார்கள் என்று கடைசி வரை சொல்லவே இல்லையே?.
மொத்தத்தில் சந்தானம் முழு நீள ஹீரோவாகி இனிமே நாங்களும் ஹீரோ தான் என்று இப்படத்தின் மூலம் நிரூபித்துவிட்டார்.
ரேட்டிங் : 3.25/ 5
நன்றி cineulagam

ஆஸ்திரேலியாவில் மிக பிரம்மாண்டமாக நடந்த "யார் அந்த தேவதை" படத்தின் பாடல் வெளியீடு

ஆஸ்திரேலியாவில் சந்திரா Productions தயாரிப்பில் உருவாகும் புதிய படம் "யார் அந்த தேவதை".
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் ஆஸ்திரேலியாவில் மிக பிரம்மாண்டமான முறையில் வெளியிடப்பட்டது.
இதில் நேசம் புதுசு, பகட பகட போன்ற பல தமிழ் படங்களுக்கு பாடல்கள் எழுதிய பால் முகில் ஒரு பாடலை எழுதியுள்ளார்.
மற்ற பாடல்களை கருப்பன், ராஜபாரதி, குமார சூரியர், பால்ராஜ் ஆகியோர் எழுதியுள்ளனர் . மேலும் அஜய் ,நளினி, தேனுகா, சோபன ஷேன் குமாரலிங்கம், கருணாகரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் நிழல்கள் ரவி நடித்துள்ளார்.
இயக்குனர் N.S. தனபாலசுந்தரம் அவர்கள் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி வரும் இத்திரைப்படத்திற்கு உதயன் அவர்கள் இசையமைத்துள்ளார்.
இப்படம் ஆகஸ்ட் மாதம் உலகம் முழுவதும் வெளியிட திட்டமிட்டு உள்ளனர் படக்குழு.
நன்றி cineulagam

No comments: