கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ் நாடகத் துறைக்குப் பிரமிக்கத்தக்க பங்களிப்பைச் செய்துவரும் பிரபல நாடக இயக்குனர்
க. பாலேந்திரா அவர்கள் அவுஸ்திரேலியா சிட்னிக்கு வருகை
தந்திருந்தபோது சிட்னியில் சிறந்த நாடகங்களை மேடையேற்றும் ஒரு அமைப்பான அரங்க கலைகள் சக இலக்கியபவர் திரு .பாலேந்திரா ஆனந்தராணி பாலேந்திரா ஆகியோரை சென்ற ஞாயிற்றுக்கிழமை 21.06.2016 அன்று சந்தித்து கலந்துரையாடியது . உலக நாடகங்கள் , தமிழில் சிறுவர் நாடகங்கள் மொழிபெயர்ப்பு நாடகங்கள், தமிழ் நாடகத்துறையின் வளர்ச்சி போன்ற பல விடயங்கள் இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது.
தமிழ் அவைக்காற்றுக் கலைக் கழகம், லண்டன் தமிழ்
நாடகப் பள்ளி ஆகியவற்றின் தோற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் காரணமான
இயக்குனர் பாலேந்திரா, திருமதி ஆனந்தராணி பாலேந்திரா ஆகியோரின் நாடகத்திற்கான சேவையை கௌரவித்து அரங்க கலைகள் சக இலகியபவர் பாராட்டியது.
இந்த சந்திப்பில் அரங்க கலைகள் சக இலகியபவர் அங்கத்தவர்கள் பாலேந்திராவின் நாடகங்களில் பங்குபற்றியவர்கள் என பலரும் கலந்துகொண்டு நாடக முயற்சிகளை பகிர்ந்துகொண்டார்கள். இந்த சந்திப்பை இலகியபவர் சார்பில் திரு சி.குணசிங்கம் ஏற்பாடு செய்திருந்தார் .
பாலேந்திராவின் மகளும் பாலேந்திராவின் பல நாடகங்களில் தற்போது நடித்து வருபவருமான மானசி பாலேந்திராவும் அவரைப்போன்ற பல இளைஞர்களும் எதிர் காலத்தில் தமிழ் அவைக்காற்றுக் கலைக் கழகத்தின் செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து வருவதற்கான நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது. சிறுவர் நாடக முயற்சியின் வெள்ளிவிழா நிகழ்வே இதற்கான சான்றாக இருக்கின்றது.
புலம் பெயர்ந்த நாட்டிலும் சிறுவர்களை வைத்து தமிழில் முற்போக்கான நாடகங்களை அரங்கேற்றிவரும் பாலேந்திரா ஆனந்தராணி ஆகியோர் பாராட்ட படவேண்டியவர்களே. நாடக அரங்காடல்களுடன் நின்றுவிடாமல் நாடக பிரதிகளை நூல் உருவில் கொண்டுவரும் முயற்சியையும் இவர் மேற்கொண்டு வருவது மகிழ்ச்சியான விடயமாக இருக்கின்றது .
செ.பாஸ்கரன்
2 comments:
(அரங்க கலைகள் சக இலக்கியபவர்) இந்த அமைப்பினால் அண்மையில் மேடையெற்றப்பட்ட நாடகங்களை தயவுசெய்து அறியத்தரமுடியுமா?
(அரங்க கலைகள் சக இலக்கியபவர்) இந்த அமைப்பினால் அண்மையில் மேடையெற்றப்பட்ட நாடகங்களை தயவுசெய்து அறியத்தரமுடியுமா?
Post a Comment