உலகச் செய்திகள்


பாலை­வ­னத்தின் மத்­தியில் உலகின் மிகவும் பெரிய அலங்­கார பூங்கா

பாகிஸ்­தானில் அனல் காற்றால் உயி­ரி­ழந்­த­வர்கள் தொகை 650 ஆக உயர்வு

பிரான்ஸ் ஜனாதிபதிகளை அமெரிக்கா உளவு பார்த்தது : விக்கிலீக்ஸ் அதிர்ச்சி தகவல், அமெரிக்கா மறுப்பு

கைதிகளை கொடூர கொலை : அதிர்ச்சி படங்கள் வெளியாகின
பாலை­வ­னத்தின் மத்­தியில் உலகின் மிகவும் பெரிய அலங்­கார பூங்கா

22/06/2015 டுபா­யி­லுள்ள 18 ஏக்கர் நிலப் பரப்பில் ஸ்தாபிக்­கப்­பட்­டுள்ள மிராக்கிள் பூங்­கா­வா­னது தற்­போது 45 மில்­லி­ய­னுக்கு மேற்­பட்ட வர்­ண­ம­ய­மான மலர்­களைக் கொண்­ட­மைந்­துள்­ளது.


இந்த பூங்கா 2003 ஆம் ஆண்டு திறந்து வைக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.
இங்கு மலர்கள் கண்ணைக் கவரும் அலங்­கார வடி­வ­மைப்­பு­களில் காட்­சிப் ­ப­டுத்­தப்­பட்­டுள்­ளமை விசேட அம்சமாகும்.


நன்றி வீரகேசரி 

பாகிஸ்­தானில் அனல் காற்றால் உயி­ரி­ழந்­த­வர்கள் தொகை 650 ஆக உயர்வு

24/06/2015 தென் பாகிஸ்­தானில் கடந்த 3 நாட்­க­ளாக வீசிய அனல் காற்றில் சிக்கி பலி­யா­ன­வர்கள் தொகை 650 ஆக உயர்ந்­துள்­ளது.

இத­னை­ய­டுத்து தென் சிந்து மாகா­ணத்தில் அவ­ச­ர­கால நிலை­மை­யொன்று பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் மேற்­படி அனல் காற்றால் பாதிக்­கப்­ப­ட­வர்­க­ளுக்கு உட­னடி உத­வி­களை வழங்க நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க தேசிய அனர்த்த முகா­மைத்­துவ அதி­கார சபைக்கு பாகிஸ்­தா­னிய பிர­தமர் நவாஸ் ஷெரீப் உத்­த­ர­விட்­டுள்ளார்.

அனல் காற்று வீசி வரும் பிராந்­தி­யங்­களில் இரா­ணு­வத்­தி­ன­ரை நிய­மிக்­கவும் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.
இந்த அனல் காற்றால் உயி­ரி­ழந்­த­வர்­களில் அநேகர் குறைந்த வரு­மானம் பெறும் குடும்­பங்­க ளைச் சேர்ந்த வயோ­தி­பர்­க­ளாவர்.
உயர் வெப்­ப­நிலை நிலவும் கராச்சி நக­ரி­லேயே அதி­க­ளவு மர­ணங்கள் இடம்­பெற்­றுள்­ளன. அங்கு 45 பாகை­ செல்­சியஸ் வெப்­ப­நிலை நில­வு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.
அத்­துடன் இந்த அனல் காற் றால் நூற்­றுக்­க­ணக்­கானோர் உடல் நலப் பாதிப்­பு­க­ளுக்கு உள்­ளாகி துன்­பப்­பட்டு வரு­வ­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.
பிர­தமர் மின் துண்­டிப்­புகள் மேற்­கொள்ளப்­ப­டாது என அறி­வித்­துள்ள போதும் ரம­ழான் நோன்பு காலத்தில் பகல் பொழு தில்கடும் வெப்பத்தைத் தணிவிக்க குளிரூட்டிகளின் பாவனை அதிகரித்துள்ளதால் மின்சார பற்றாக்குறை காரணமாக மின் துண்டிப்புகளை தவிர்க்க முடியாதுள்ளதாக கூறப்படு கிறது.   நன்றி வீரகேசரி பிரான்ஸ் ஜனாதிபதிகளை அமெரிக்கா உளவு பார்த்தது : விக்கிலீக்ஸ் அதிர்ச்சி தகவல், அமெரிக்கா மறுப்பு

24/06/2015   பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதிகளான ஜாக்குவெஸ் சிராக், நிக்கோலஸ் சார்கோசி மற்றும் பிராங்கோய்ஸ் ஹோலண்டே ஆகியோரை அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்பு (என்.எஸ்.ஏ.) உளவு பார்த்தது என்ற அதிர்ச்சி தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டு உள்ளது.

அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்பின் “மிகவும் முக்கியமான உளவுத்துறை அறிக்கைகள் மற்றும் தொழில்நுட்ப ஆவணங்களை” விக்கிலீக்ஸ் இணையதளம் வெளிட்டு உள்ளது. 
விக்கிலீக்ஸ் இணையளம் வெளியிட்டு உள்ள தகவல்கள் அனைத்தும் உண்மைதானா? என்று அமெரிக்கா இதுவரையில் உறுதிசெய்யவில்லை. இருப்பினும் பிரான்ஸ் ஜனாதிபதி ஹோலண்டே, பாதுகாப்பு குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து உள்ளார் என்று அவரது உதவியாளர் தெரிவித்துள்ளார். 
கடந்த 2013ஆம் ஆண்டு ஜேர்மனி ஜனாதிபதி ஏஞ்சலா மார்கெல்லை உளவு பார்த்த விவகாரத்தில் அமெரிக்காவின் பாதுகாப்பு முகமையானது குற்றம் சாட்டப்பட்டது. 
பிரான்ஸ் ஜனாதிபதி மாளிகையின் கீழ்உள்ள தகவல்களை வெளியிட தொடங்கிவிட்டதாக விக்கிலீக்ஸ் கடந்த செவ்வாய் கிழமை தெரிவித்தது. அமெரிக்காவின் பாதுகாப்பு முகமையான என்.எஸ்.ஏ. தொலைத்தொடர்பு கண்காணிப்பை இலக்காகவைத்து பெறப்பட்ட தகவல்களே இது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
பிரான்ஸ் ஜனாதிபதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள்  மற்றும் அமெரிக்காவிற்கான பிரான்ஸ் தூதர் ஆகியோர் உளவுபார்க்கப்பட்டுள்ளனர். 
2012ஆம் ஆண்டு திகதியிடப்பட்ட ஆவணத்தில் ஹோலாண்டே யூரோப்பகுதியில் இருந்து கிரேக் வெளியேறுவதற்கான சாத்தியம் தொடர்பாக ஹோலண்டே ஆலோசனை நடத்தியதும், 2011-ம் ஆண்டு திகதியிடப்பட்ட ஆவணத்தில் சார்கோட்சி, அமெரிக்காவின் தலையீடு இல்லாமல் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே அமைதி பேச்சுவார்த்தையை நடத்த முயற்சி செய்ததும் வெளியாகியுள்ளது. 
“விக்கிலீக்ஸ்” இணையதளத்தை நிறுவிய ஜூலியன் அசாஞ்சேவிடம் இருந்து வெளியேறிய ஆவணங்களா? என்பது தெளிவாகாமலே உள்ளது என்று பி.பி.சி. செய்திவெளியிட்டு உள்ளது. 
விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்களானது பிரான்ஸ் விடுதலைப் செய்தித்தாள் மற்றும் மீடியாபோர்ட் புலனாய்வு இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 
ஜூலியன் அசாஞ்சேவால் வெளியிடப்பட்ட அறிக்கையை கொண்டுள்ள வீக்கிலீக்ஸில், “பிரான்ஸில் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசானது, கூட்டுநாடால் விரோதமாக கண்காணிக்கப்பட்டதை தெரிந்துக் கொள்ளும் உரிமை பிரான்ஸ் மக்களுக்கு உள்ளது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இவ்விவகாரம் தொடர்பாக விக்கிலீக்ஸ் செய்தித் தொடர்பாக கிரிஷ்டின் பி.பி.சி.க்கு அளித்த பேட்டியில், ஜேர்மனி ஜனாதிபதி ஏஞ்சலா மேர்கலுக்கு எதிராக தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்கும் பணியினை அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்பு செய்ததை வெளிப்படுத்தியுள்ளது. ஆனால் எந்தஒரு தகவலையும் வெளியிடவில்லை. இந்த நேரத்தில், அவர்கள் இரகசிய அறிக்கைகளை பெற்று உள்ளதாக குறிப்பிட்டு உள்ளார். 
அமெரிக்கா மறுப்பு
விக்கிலீக்ஸ் இணையதளம் குற்றம் சாட்டி வெளியிட்டு உள்ள தகவல்கள் தொடர்பாக அமெரிக்காவின் பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித்தொடர்பாளர் நெட் பிரைஸ், குறிப்பிட்ட உளவுத்துறை குற்றச்சாட்டுகள் தொடர்பாக நாங்கள் கருத்து தெரிவிக்கப்போவது கிடையாது,” என்று கூறிஉள்ளார். 
“ஒரு பொது விவகாரமாக, நாங்கள் ஒருகுறிப்பிட்ட மற்றும் உறுதியான தேசியபாதுகாப்பு தொடர்பாக முக்கியநோக்கம் இல்லாமல், எந்த ஒரு வெளிநாட்டையும் கண்காணிப்பு நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. இதனை சாதாரண மக்கள் மற்றும் உலக நாடுகளின் தலைவர்களுக்கு தெரிவு படுத்துகிறோம். நாங்கள் பிரான்ஸ் ஜனாதிபதி ஹோலண்டேவின் உரையாடல்களை இலக்காக கொள்ளவில்லை, இனியும் கொண்டு இருக்க மாட்டோம். நாங்கள் அனைத்து விவகாரங்களிலும், சர்வதேச நாடுகளின் நிலையை கருத்தில் கொண்டு பிரான்சுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். பிரான்ஸ் எங்களுடைய இன்றியமையாத நட்பு நாடு ஆகும்,” என்று அமெரிக்காவின் பாதுகாப்பு கவுன்சில் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
பாதுகாப்பு குழு கூட்டத்திற்கு ஹோலண்டே அழைப்பு
விக்கிலீக்ஸில் வெளியாகி உள்ள தகவல், பிரான்ஸில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா மறுப்பு தெரிவித்திருந்தாலும்,  பிரான்ஸ் ஜனாதிபதி ஹோலண்டே, பாதுகாப்பு கமிட்டி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் என்று அவரது உதவியாளர் தெரிவித்து உள்ளார். 
பிரான்ஸ் நாளிதழ்களில் வெளியான தகவல்களின் உண்மை தன்மையை மதிப்பீடு செய்ய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு ஜனாதிபதி ஹோலண்டே அழைப்பு விடுத்து உள்ளார் என்று அவருடைய உதவியாளர் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து உள்ளார். 
 பிரான்ஸ் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை இதற்கிடையே பிரான்ஸ் நாட்டின் எம்.பி. மிஷல் அலியோ-மரி, அமெரிக்காவால் எங்களுடைய உரையாடல்களில் தலையிட முடியும் என்று எங்களுக்கு அதிகநாட்களுக்கு முன்னதாக தெரியும், என்று குறிப்பிட்டு உள்ளார். 
நாங்கள் ஒன்றும் அப்பாவிகள் கிடையாது, பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் ஜனாதிபதி இடையே எந்தஒரு தொலைபேசி உரையாடலும் நடைபெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார். இச்செய்தியில் உண்மைதன்மை இருப்பினும், இது இரு நாடுகள் இடையே உள்ள நட்புறவில் பிரச்சனையை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்து உள்ளார். 
2013-ம் ஆண்டில் அமெரிக்காவின் கண்காணிப்பு தொடர்பாக எட்வார்ட் ஸ்னோவ்டென் தரப்பில் கசியவிடப்பட்ட ஆவணங்களில், அமெரிக்க ஜேர்மனி ஜனாதிபதி ஏஞ்சலா மேர்கல்லை அமெரிக்கா உளவுபார்த்தது தெரிவிக்கப்பட்டது. 
இதுதொடர்பாக குற்றச்சாட்டு எழுந்ததும், அமெரிக்க நேரடியாக எந்தஒரு மறுப்பையும் தெரிவிக்கவில்லை, இருப்பினும் தற்போது தொலைபேசி பேச்சுக்கள் உளவுபார்க்கப்பட வில்லை, இனிவரும் காலங்களிலும் உளவுபார்க்கப்படாது என்று தெரிவித்தது. இப்போது உளவுபார்க்கப்பட்ட விவகாரம் ஜேர்மனியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நட்பு நாடுகளுக்கு இடையே உளவுபார்ப்பு இல்லை என்று மேர்கல் கூறியுள்ளார். 
இதற்கிடையே பிரான்ஸ் அதிகாரிகளை அமெரிக்காவிற்கு பதிலாக ஜேர்மனி தேசிய உளவுப்பிரிவினர் உளவுபார்த்தனர் என்று ஜேர்மனி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க அதிகாரிகளின் தொலைபேசி உரையாடல்களை ஜேர்மனி உளவு பார்த்ததாகவும் கூறப்படுகிறது.    நன்றி வீரகேசரி 


கைதிகளை கொடூர கொலை : அதிர்ச்சி படங்கள் வெளியாகின

24/06/ஐ.எஸ். தீவிரவாதிகள் கைதிகளை கூட்டாக நீச்சல் தடாகத்தில்  மூழ்கடித்தும், காரில் வைத்து குண்டை வெடிக்க செய்தும், ஒரே கயிற்றில் கழுத்தை இறுக்கி கொலைசெய்யும் கொடூர காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள், பல நாடுகளிலும் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதேவேளை ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. 
வான்வழி தாக்குதல் நடத்துவதோடு, ஈராக் இராணுவத்திற்கு போர் பயிற்சியும் அளித்து வருகிறது. இதற்காக தினமும் 9 மில்லியன் டொலர் செலவு செய்து வருவதாக அமெரிக்காவின் இராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. 
அமெரிக்கா தலைமையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டாலும், அவர்களுடைய ஆதிக்கம் நிலைத்து வருவது உலக நாடுகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்களிடம் சிக்கியவர்களை மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்து, அதுதொடர்பான வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றனர்.  
ஈராக்கின் மொசூல் நகரில் உளவுபார்த்தவர்கள் என்று குற்றம் சாட்டி தங்களிடம் கைதியாக இருந்தவர்களை ஐ.எஸ்.தீவிரவாதிகள் கொடூரமான முறையில் கொலை செய்து உள்ளனர். மொசூல் 5 கைதிகளை ஒரே கூண்டில் அடைந்து தீவிரவாதிகள் தண்ணீருக்குள் இறக்கி உள்ளனர். சுமார் 7 நிமிடங்கள் ஓடும் வீடியோவில் இந்த கொடூரச்சம்பவங்கள் பதிவாகி உள்ளது. 5 கைதிகளும் இறந்த பின்னர் மேலே தூக்கப்படுகின்றனர். அவர்கள் தண்ணீருக்குள் துடிப்பதை, அங்கிருக்கும் கேமராக்கள் மூலம் படம்பிடிக்கப்படுகிறது. 
இதற்கிடையே கார் ஒன்றில் கைதிகள் கூட்டாக அடைக்கப்பட்டு, ரொகெட் லோஞ்சர்களால் சுட்டுக் கொலை செய்யப்படும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. பழைய காரில் கைதிகளை உள்ளே அடைத்து வைத்து, சுட்டுக் கொலை செய்யப்படுகின்றனர். மேலும், ஒரே கயிறில் 7 பேரை கட்டிவைத்து, கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகிள்ளன என்று டெய்லி மெயில் செய்தி வெளியிட்டு உள்ளது. 
இதற்கிடையே அமெரிக்காவும் இராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறது. ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக புதிய திட்டங்களையும் உலக நாடுகள் வகுத்து வருகின்றன. ஐ.எஸ். தீவிரவாதிகள் கொடூரம் மற்றும் நாடு கடந்த தாக்குதல்கள் பெரிதும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.  நன்றி வீரகேசரி No comments: